நினைவில் பால்யம் அழுத்தும்
பொழுதுகளில்
தொலைபேசியில் அழைக்கிறாள் சகோதரி
உறவுக்கூடத்தில் சூன்யமாகிவிட்ட
என் பகுதியின் இருளை
தடவிக் கொடுத்தபடியே நலம் விசாரிக்கிறாள்.
மேலும்
Wednesday, June 30, 2010
ஒரிய கவிஞர் சுனந்தா ப்ரதன் கவிதைகள் தமிழில்: புதிய மாதவி
அந்தக் கடல் - The sea
யுகம் யுகமாய்
கடல்பக்கம் திரும்பாத நான்
திடீரென ஒருநாள்
காற்றைக்கிழித்து நீந்தி
கடலுக்கு வந்தேன்
ஈரமானக் கனவுகளுடன்.
மேலும்
யுகம் யுகமாய்
கடல்பக்கம் திரும்பாத நான்
திடீரென ஒருநாள்
காற்றைக்கிழித்து நீந்தி
கடலுக்கு வந்தேன்
ஈரமானக் கனவுகளுடன்.
மேலும்
சாதியும் சாதியமும் : இருப்பும் பிரக்ஞையும் - அ.மார்க்ஸ்
''ஒதுங்குவதும் ஒதுக்குவதுமே பார்ப்பனியம்". அடித்தள மக்கள் மட்டும் தம் மொழியில் எழுதுவதை ஏன் ஊக்குவிக்கவேண்டும்? இதுகாறும் அவர்களின் மொழி இழிசனர்மொழியாகப் புறக்கணிக்கப்பட்டு அவர்கள் உள்ளத்தில் பதிக்கப்பட்டுள்ள குற்றவுணர்வில் இருந்து அவர்களை விடுவிப்பதற்காகவே அதை ஊக்குவிக்கிறோம். அதே காரணத்திற்காகவே பார்ப்பனர்கள் மற்றும் வெள்ளாளர்களின் தனித்துவத்தை அடையாளம் காட்டும் சொற்களைத் தவிர்க்க வேண்டும் என்கிறோம். ஏனெனில் அவை உள்ளத்தில் உருவாக்குவது குற்றவுணர்வு அல்ல. பெருமித உணர்வு, மேன்மை உணர்வு.
மேலும்...
மேலும்...
Saturday, June 26, 2010
விழுப்புரம் ரயில் தண்டவாளத் தகர்ப்பு - உண்மை அறியும் குழு அறிக்கை
இவர்கள் அனைவரும் வெளிப்படையாகவும், ஜனநாயகபூர்வமாகவும் பலகாலமாக விழுப்புரத்தில் இயங்கி வருபவர்கள். இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க காவல்துறையால் அவர்கள் தொடர்பு கொள்ளப்பட்டபோது அனைவரும் முழுமையாக ஒத்துழைப்பைத் தந்துள்ளனர். கூப்பிட்டபோதெல்லாம் எங்கு வரச்சொன்னாலும் அங்கு சென்று தங்களை ஒப்படைத்துள்ளனர். அனைத்து கேள்விகளுக்கும் முறையாகவும், சோர்வின்றியும் பதிலளித்துள்ளனர். எனினும் இவர்களை 4 நாட்கள் சட்டவிரோதமாக க்யூ பிரிவு காவல்துறையினர் அடைத்து வைத்து மனஅளவிலான சித்திரவதைக்கு ஆளாக்கியுள்ளனர்.
மேலும்...
மேலும்...
இறுதிச்சமரில் தோற்ற தமிழ் லாபி - அதிரூபன்
யதார்த்தத்தில் புலிகளும், புலிகளின் போராட்ட வடிவமும் தோற்கடிக்கப்பட்டு விட்டன. அதே மாதிரியான ஒரு சாகசப் போராட்ட வடிவத்தின் மூலமே இனியும் போராட முடியும் என்று சிந்திப்பவர்கள் தம் கண்களை மூடிக் கொண்டிருக்கிறார்கள் என்றே கருத வேண்டியிருக்கிறது. அதேநேரம் புலிகளும் புலிகளின் போராட்ட வடிவமும் ஈழத் தமிழர்களுக்கு பெற்றுக்கொடுத்த அங்கீகாரத்தையும் இலங்கைத் தீவின் இனப் பிரச்னையில் அதன் மூலம் பெறப்பட்டிருக்கும் பெறுபேறுகளையும் நாம் புறந்தள்ளி வைக்க முடியாது.
மேலும்...
மேலும்...
Monday, June 21, 2010
தீண்டாமையைக் கடைபிடிக்கும் தீந்தமிழ் வித்தகர் - ஆதவன் தீட்சண்யா
உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்காவிட்டால் ஒரு தமிழனின் வீட்டிலும் உலை கொதிக்காது என்பதுபோல கருணாநிதியும் அவரது குடும்பமும் கட்சியும் தமிழ்நாட்டை அதகளப்படுத்திக் கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இந்த மாநாட்டிற்கு வாழ்த்துத் தெரிவித்து ரூபன் என்பவர் பெயரில் விடுதலைப்புலிகள் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டிருப்பதாக தெரிகிறது. இனியொரு, ஈழநேசன் போன்ற இணையதளங்களில் இதுபற்றி விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. ரூபனின் அந்த அறிக்கைக்கு நன்றி தெரிவித்து கருணாநிதி வெளியிட்ட அறிக்கை, செய்தி குறிப்பு எண்-74 என தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் இயக்குநரால் 20.06.2010 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
மேலும்...
மேலும்...
Sunday, June 20, 2010
ராவணன் - மணிரத்னம் கட்டமைத்த போலிக்கலாச்சாரத்தின் வீழ்ச்சி -அசாதி
பெண்சிங்கம்’ எப்படி எதார்த்தத்துக்கு அப்பாலான ஒரு குப்பைப்படமோ அதேபோல் ராவணன் உள்ளிட்ட மணிரத்னத்தின் பெரும்பாலான படங்களும் எதார்த்தத்துக்கு அப்பாலான குப்பைப்படங்கள்தான். ஒருபுறம் வெகுஜன ஊடகங்கள் மணிரத்னத்தைத் தமிழ்ச்சினிமாவின் ஆதர்சங்களில் ஒன்றாகக் கட்டியமைத்தன என்றால் இன்னொருபுறம் அ.ராமசாமி, யமுனாராஜேந்திரன், சமயங்களில் சாருநிவேதிதா போன்ற சிறுபத்திரிகை இலக்கியவாதிகளும் மணிரத்னத்தைக் கொண்டாடினர் அல்லது ’விமர்சனத்துடன்’ அங்கீகரித்தனர்.
மேலும்...
மேலும்...
Sunday, June 13, 2010
சாதி,மொழி,அரசியல் தொடர்பான விவாதத்தில் ஆதவன் தீட்சண்யாவின் கருத்துக்கள் குறித்து - ராஜன் குறை
ஆதவன் தீட்சண்யாவின் கோபமும், “கபடம்” பற்றிய ஐய உணர்வும் எனக்குப் புரிகிறது. என் கருத்துக்களை அவர் மறுத்துள்ளார். சாதி வேறு சாதீயம் வேறு என்று பார்க்க முடியாது என்று வலியுறுத்தியுள்ளார். பார்ப்பனச் சொற்களை புழக்கத்தில் விடுவது தவறுதான் என்று நினைக்கிறார். இந்த மாறுபாடுகள் குறித்து தொடர்ந்து விவாதிப்பது அவசியம் என நினைக்கிறேன்.
மேலும்
மேலும்
Saturday, June 12, 2010
இன்னும் ஏன் தேவை பார்ப்பனர் எதிர்ப்பு?*
தோழர்.ராஜன்குறை முன்வைத்துள்ள கருத்துக்கள் சாதி-பார்ப்பனியம் குறித்து அய்ம்பது ஆண்டுகளுக்கும் மேலாய்ப் பேசப்பட்டு வரும் கருத்துக்களைப் பின்தள்ளுவதாய்க் கருதுகிறேன். இதுமாதிரியான விவாதங்கள் கடந்த பல ஆண்டுகளில் பலமுறை நிகழ்ந்துவிட்டாலும் மீண்டும் தொடக்கப்புள்ளியிலிருந்தே ஆரம்பிக்க வேண்டியிருப்பது ஆயாசத்தை அளிக்கிறது. என்றபோதும் ராஜன்குறை மாதிரியான கற்றறிந்த ஆய்வாளர்களிடமிருந்து இத்தகைய கருத்துகள் வரும்போது எதிர்கொள்ளாதிருந்தால் அது ஏற்கப்பட்ட, நிறுவப்பட்ட ஒன்றாக மாறிவிடுகிற அபாயமும் உள்ளது.
மேலும்...
மேலும்...
இறுகத் தழுவி எலும்பை நொறுக்கும் கபடம்
சாதியம் குறித்து அளவற்றக் குழப்பத்துடனும் தன்னை சாதியுணர்வாளன் என்று தன் சொற்களே நிறுவிவிடுமோ என்கிற பதற்றத்துடனும் ராஜன் குறை இருக்கிறார் என்பதை அவர் எழுதியுள்ள 10 பாயிண்ட் பதவுரை வெளிப்படுத்துகிறது. அவை எல்லாவற்றுக்கும் இறுக்கிச் சாத்தி எழுதமுடியும் என்றாலும் எடுத்தயெடுப்பில் அவர் பெரியாரைப் பற்றி கூறியுள்ளதற்கான மறுப்புரையிலிருந்து தொடங்குவோம்.
மேலும்...
மேலும்...
சாதி, மொழி, அரசியல் – லீனாவுடன் ஒரு உரையாடல்
உரையாடலுக்கான வாயிலின் இல்லாத கதவுகளை தட்டிவிட்டே நுழைகிறேன். இந்த உரையாடல் கவிதை பற்றியது அல்ல. லீனாவின் அரசியல் சிந்தனை சார்ந்த ஒரு பத்தியிலிருந்து தொடங்குவது.
லீனா எழுதுகிறார்: “பெருந்தேவியின் பிரதிகளில் அவர் பயன்படுத்தும் பார்ப்பனக் குழு வூக்குறி சொற்கள், சாதி நீக்கத்தை "நியாயமான அரசியலாக" நம்பும் எனக்குச் சரியாகப் படவில்லை. ஆதிக்க சாதியை symbolise பண்ணும் சொல் என்று தெரிந்தும், அதை இலக்கியப் பிரதிகளில் பயன்படுத்துவது பார்ப்பனிய நிலைப்பாடு என்பதைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும்? என் கவிதைகள் குறித்தான உரையாடலிலும் பெருந்தேவி high hand attitude எடுத்தார். நான் விலகிக் கொண்டேன். அவ்வளவு தான்.”
மேலும்
லீனா எழுதுகிறார்: “பெருந்தேவியின் பிரதிகளில் அவர் பயன்படுத்தும் பார்ப்பனக் குழு வூக்குறி சொற்கள், சாதி நீக்கத்தை "நியாயமான அரசியலாக" நம்பும் எனக்குச் சரியாகப் படவில்லை. ஆதிக்க சாதியை symbolise பண்ணும் சொல் என்று தெரிந்தும், அதை இலக்கியப் பிரதிகளில் பயன்படுத்துவது பார்ப்பனிய நிலைப்பாடு என்பதைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும்? என் கவிதைகள் குறித்தான உரையாடலிலும் பெருந்தேவி high hand attitude எடுத்தார். நான் விலகிக் கொண்டேன். அவ்வளவு தான்.”
மேலும்
Subscribe to:
Posts (Atom)