புலிகளின் கைகளில் துவக்குகள் இருந்ததால் அவர்கள் துரோகிகளாக நினைத்தவர்களை எல்லாம் போட்டுத்தள்ளினார்கள். இந்த இணையப்புலிகளின் கைகளில் துவக்குகள் இல்லாததால் பின்னூட்டங்களிலும் பிளாக்குகளிலும் பேஸ்புக்கிலும் ‘போட்டுத்தள்ளுகிறார்கள்’. முஸ்லீம் விரோத புலிகளை ஆதரித்தும், இந்து உணர்வுடைய தமிழ்த்தேசியவாதிகளின் அவதூறு வாந்தி வதந்திகளுக்கு மேடை அமைத்துக்கொடுத்தும் வந்த கீற்று தளம், முஸ்லீம்களின் பிரச்சினைகளைப் பேசுவதாகப் பாசாங்கு காட்டிய மேடையிலேயே கோவணம் அவிழ்ந்து அம்பலமான காட்சியை என்னவென்று சொல்ல?
மேலும்...
Tuesday, July 27, 2010
Thursday, July 22, 2010
சாதிவாரிக் கணக்கெடுப்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அரசியல்:ஒரு சுருக்கமான வரலாறு - அ. மார்க்ஸ்
"ஏற்கனவே உள்ள ஒரு உண்மையைப் பதிவு செய்வதுதானே மக்கள் தொகைக் கணக்கீடு" என 1931ம் ஆண்டுக் கணக்கெடுப்பு ஆணையராக இருந்த ஹட்டன் கூறியது முழு உண்மையன்று. ஒருவகையில் அது ஏற்கனவே உள்ள உண்மைகளைப் பதிவு செய்வதுதான் என்றபோதிலும் இன்னொரு வகையில் அது புதிய உண்மைகளை உருவாக்குவதாகவும் புதிய அடையாளங்களைத் தோற்றுவிப்பதாகவும் உள்ளது. யார் இந்தக் கணக்கெடுப்பைத் தீர்மானிக்கிறார்களோ அவர்களின அரசியல் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்த அரசியலுக்கிணங்கவே கணக்கெடுப்புப் படிவம் உருவாக்கப்படுகிறது. கேள்விகள் வடிவமைக்கப்படுகின்றன. பதிலளிப்பவரின் தேர்வுகள் குறுக்கப்படுகின்றன. சில நேரங்களில் விசாலமாக்கவும் படுகின்றன.
மேலும்...
மேலும்...
Wednesday, July 7, 2010
உத்தபுரம் (மதுரை), டொம்புச்சேரி, பெரியகுளம் (தேனி) ஆகிய பகுதிகளில் தொடரும் சாதி வெறியும் அரசின் அலட்சியமும்! - உண்மை அறியும் குழு அறிக்கை
போடி, தேனி, தேவாரம், எழுமலை முதலான பகுதிகளில் தீண்டாமை ஒதுக்கமும், சாதி உணர்வும் மிகுந்துள்ளதை அரசுக் கவனம் கொள்ள வேண்டும். இப்பகுதியில் வருவாய் மற்றும் காவல்துறைகளில் ஆதிக்கச் சாதிகள் அல்லாத அதிகாரிகள் அதிக அளவில் பணி அமர்த்தப்பட வேண்டும். போதிய அளவில் தலித் அதிகாரிகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் உள்ளவாறு ஊர் தோறும் குழுக்கள் அமைத்து தீண்டாமை இல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்.
மேலும்..
மேலும்..
வீடுகளுக்கு வெளியே, நான் ஜன்னலருகில் அலைகிறது -ஹரி இராசலெட்சுமி
(கம்பனிடம் ஆண்குறி இருந்தது. எல்லாவிதங்களிலும் கம்பன் ஒர் ஆண்)
.நிகழ்காலம்.
1
நான் இடீபஸ். நான் எலெக்ட்ரா. இல்லை. இல்லை. அவ்வாறு கதைசொல்லத் தொடங்குவது தவறு. முட்டாள்த்தனம். ஃப்ரொய்ட் ஹாஸ் பிகேம் எ கிளிஷே, ஹாஸ்ன்`ற் ஹீ? அது போக, கிரேக்கத் துன்பியலுக்கும் தமிழ் அனுபவத்துக்கும் என்னதான் தொடர்பு இருந்துவிடப் போகிறது?
1
நான் இடீபஸ். நான் எலெக்ட்ரா. இல்லை. இல்லை. அவ்வாறு கதைசொல்லத் தொடங்குவது தவறு. முட்டாள்த்தனம். ஃப்ரொய்ட் ஹாஸ் பிகேம் எ கிளிஷே, ஹாஸ்ன்`ற் ஹீ? அது போக, கிரேக்கத் துன்பியலுக்கும் தமிழ் அனுபவத்துக்கும் என்னதான் தொடர்பு இருந்துவிடப் போகிறது?
நுண்கலைக் கல்லூரி மாணவர் சசிகுமார் தற்கொலை அதிகாரத்துவம் பொறுப்பேற்க வேண்டும் - அ. மார்க்ஸ்
இறையன்பு இதைப் புரிந்துகொள்ளவே இல்லை. முழுக்க முழுக்க ஒரு அதிகாரியாக(bureaucrat), அதிகாரத்துவ அணுகல்முறையுடனேயே இப்பிரச்சினையை அணுகினார். கல்லூரி முதல்வர் பொறுப்பில் ஆசிரியரல்லாத ஒருவரை நியமித்தார். (இதுவும் நான் அறிந்திராத ஒன்று.) கல்லூரியை இறுக மூடிவிட்டு ஒரு நபர் ஆணையம் ஒன்றை அமைத்துவிட்டு ஒய்ந்தார். போராட்டத்தினூடாக மாணவர்கள் தன்னைப்பற்றிப் பேசிய சில பேச்சுக்களை ரொம்பவும் 'பர்சனலாக' எடுத்துக்கொண்டு கோபப்பட்டார்.
மேலும்..
மேலும்..
சென்னை கவின் கலைக் கல்லூரியில் சாதி வெறி - உண்மை அறியும் குழு அறிக்கை
பிற்படுத்தப்பட்ட சாதி ஒன்றைச் சேர்ந்த இவர், தலித் மாணவர்களை இழிவாக நடத்துகிற வழக்கம் கொண்டவர் எனவும் குற்றச்சாட்டுகள் உண்டு. 2004-ம் ஆண்டில் இவர் இவ்வாறு ஒரு தலித் மாணவரை சாதி, குறிப்பிட்டுப் பேசியதை ஒட்டி எஸ்.எப்.ஐ. மாணவர்கள் போராடியுள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ்.கே.மகேந்திரன் இது குறித்து சட்டமன்றத்தில் பேசி உள்ளதையும் நாங்கள் உறுதிப்படுத்திக் கொண்டோம். இதை ஒட்டி மனோகரன் குடந்தைக் கல்லூரிக்கு மாற்றப்பட்டு, பின் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி இங்கு மீண்டும் இடமாற்றம் பெற்று வந்துள்ளார்.
மேலும்...
மேலும்...
Friday, July 2, 2010
சென்னையைப் பிச்சைக்காரரகள் இல்லாத நகரமாக்கும் முயற்சி - உண்மை அறியும் குழு அறிக்கை
உலகமயச் செயல்பாடுகளின் ஓர் அங்கமாக உலகத்தரமான நகரங்களை உருவாக்குதல் அமைகிறது. பளபளக்கும் நால்வழிச்சாலைகள் இணைக்கப்பட்ட நவீன நகரமாகவும் வெளிநாட்டு மூலதனம் குவியக்கூடிய மய்யமாகவும் மருத்துவச்சுற்றுலாவுக்கும் சிறப்புப்பொருளாதார மண்டலங்களுக்கும் தகுதியுடையவையாக நகரங்களை உருவாக்குவது ஆட்சியாளர்களின் நோக்கமாக உள்ளது. அவர்களின் கண்களுக்குத் தெருவில் அலைகிற பிச்சைக்காரர்களும் நகரின் மத்தியில் துருத்தி நிற்கும் குடிசைகளும் பெரிய உறுத்தல்களாக உள்ளன.
மேலும்..
மேலும்..
Subscribe to:
Posts (Atom)