Friday, September 3, 2010

உண்மை,அறிவு,அதிகாரம் குறித்த விளிம்புநிலை இஸ்லாம் என்ற கோட்பாடு - எச்.முஜீப் ரஹ்மான்

வாசகர்களே தமிழ்சூழலில் தத்துவங்களும்,கொள்கைகளும்,கோட்பாடுகளும் மேற்கத்திய அறிவுதுறை சார்ந்து அதிகம் விவாதிக்கப்படுகிறது.காந்தியம்,அம்பேத்காரியம்,பெரியாரியம் உட்பட கொள்கை,கோட்பாடுகள் இந்தியாவில் தோன்றி வளம் பெற்றதும் உண்டு.ஆனால் தற்போது தலித்தியம் என்ற கோட்பாடு கூட மேற்கத்திய சிந்தனையின் தாக்கத்தால் தான் உருவாகி பீடுநடை போடுகிறது.அதன் பிறகு கோட்பாடுகள் தோன்றவோ,உருவாக சாத்தியம் இல்லாமல் போனது.பின்நவீனத்துவமும்,பின்னை காலனியமும் தமிழில் வளம் பெற்று வருகின்றன.ஆனால் சுயாதீனமான கோட்பாடும்,தத்துவமும் தமிழில் உருகாமல் இருக்கின்ற நிலையை காணலாம்.இந்நிலையில் விளிம்புநிலை இஸ்லாம் என்கிற இந்த கோட்பானது தற்காலசூழலில் நடைப்பெற்று வரும் நிகழ்வுகளால் உருவானதாகும். இந்த கோட்பாடு பின்னை தலித்தியம் என்ற கோட்பாட்டின் துவக்க நிலையாக இருக்கிறது. பின்னை தலித்தியம்,விளிம்பு நிலை இஸ்லாம் ஆகிய இரண்டும் ஒரே கோணத்தில் பயணிக்கும் தத்துவங்களாகும்.தமிழ்சூழலில் சுயாதீனமான ஒரு கோட்பாட்டை,தத்துவத்தை இதன் மூலம் வாசகர்கள் அடையாளம் காணலாம்.இந்த கோட்பாடுகள் கூட இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் விவாதிக்கப்பட்ட உலக தத்துவங்களின் தொடர்ச்சியாக மலருகிறது. இதன் நிறை குறைகளை வாசகர்கள் சுட்டிக்காட்டுவதை நான் வரவேற்கிறேன்.

Philosophical discourse has always maintained an essential relation to the law, the institution, and the contract, all of which are the Sovereign's problem, traversing the ages of sedentary history from despotic formations to democracies.

Gilles Deleuze

தற்கால அறிவுஜீவிகளில் பலரும் பல துறை சார்ந்து மேற்கத்திய சிந்தனையை நெருக்கடிக்குள்ளாக்கினார்கள்.நவீனத்துவத்துக்கும்,பின் நவீனத்துவத்துக்குமான போராட்டமாக இது இருந்த போதிலும் பலவிதமான கோட்பாடுகளுக்கு அவை வழிவகுத்தன.பொதுவாக அனைத்து கோட்பாட்டாளர்களும் நீட்ஷேவிலிருந்தே துவங்குகிறார்கள்.இதற்கு காரணம் நீட்ஷே அறிவொளிகால,மனிதாபிமான சட்டகங்களைக் கேள்விக்குட்படுத்தியதும் எவை நவீனத்துவத்துக்குரியவை என்று அடையாளம் காட்டியதும் ஆகும்.நீட்ஷேவிலிருந்து பின்நவீனத்துவம்,அடிக்கட்டுமானவாதம்(fundationalism),அபௌதிகம்(metaphyisics)முதலிய விஷயங்களை அறிவு சார்ந்த கேள்விகளாக முன்வைத்தது.பின் அமைப்பியல் போன்றவை நவீனத்துவ கட்டுமானங்களை உடைத்து எறிந்தமையாலும்,பெண்ணியம் போன்ற கோட்பாடுகள் மேற்கத்திய சிந்தனைகளின் அறிவு கோட்பாட்டு ஆதாரங்களை(epistemological foundations) நிர்மூலம் செய்தன. பின்நவீனத்துவமும்,பெண்ணியமும் அறிவு பற்றிய மனித மைய விளக்கங்களை கேள்விக்குட்படுத்தின. அறிவொளிகாலகட்டத்தில் இருந்தே அவை மனிதமையம் சார்ந்து உருவகபடுத்தப்பட்டதினால் தளைகள் நீங்கிய உண்மையை(emanicipatory reality) வெளிகாட்ட வேண்டியிருந்தது.இவ்விதமான தீவிர நிலைபாடுகளுடன் விளிம்புநிலை இஸ்லாம்(marginal islam) பற்றிய தளைகளற்ற உண்மைகளைச் சொல்லவேண்டியிருக்கிறது. இஸ்லாமிய வரலாற்றில் தூய இஸ்லாம் எனும் அறிவொளி அறிவாதாரம் (enlightment epistemology) பற்றிய கட்டமைப்புகளே நவீன இஸ்லாத்திற்க்கு வித்திட்டன.இஸ்லாத்தில் நவீனத்துவம் செயல்பட்டபோது ஆண்சார்ந்த இயக்கமாக வளர்ந்தது. நவீனத்துவம்,சோசலிசம்,மனிதாபிமானவாதம்(humanism),பெண்ணியம் போன்ற கருத்துருவாக்கங்கள் இஸ்லாத்தைப் பாதித்தன. நவீனத்துவம் கட்டமைத்த பகுத்தறிவு x பகுத்தறிவின்மை,அகம் x புறம் பற்றிய கருத்தாக்கங்களைப் பின்நவீன வாசிப்பு சார்ந்து கேள்விக்குபடுத்தவேண்டியது இங்கே முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.நவீனத்துவ சட்டபூர்வமாக்கல்(legacy) பற்றிய கருதுகோளை தற்காலத்தில் விளிம்புநிலை இஸ்லாம் சார்ந்து மறுபரிசீலனைக்கு உட்படுத்தும் போது தாரளவாதம்(liberalism),(secularism)மதமற்றசுதந்திரம் போன்ற மத்திய முக்கியத்துவம் கொண்ட விஷயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. விளிம்பு நிலை இஸ்லாத்தில் பின்நவீனத்துவத்தின் தாக்கம் அதிகம் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.பின்நவீன சிந்தனை வெளிச்சத்தில் சமூக விஞ்ஞானத்திற்கும்,இயற்கை விஞ்ஞானத்துக்குமான தொடர்பை ஆயும் முறையியல்(methodology) பல விஷயங்களைத் தெளிவாக்கும்.முறையியல் சார்ந்த விவாதங்கள் சமூக விஞ்ஞானங்களில் நேர்காட்சிவாதமாகவோ(positivism)அல்லது அனுபவவாதமாகவோ (empiricism) இஸ்லாமிய சிந்தனை வட்டத்தில் முன்வைக்கப்படுகிறது.பின்நவீனத்துவம் பெரும்கதையாடல்களின் தகர்வை வலியுறுத்துவதால் இஸ்லாமிய பெரும்கதையாடல்களின் தகர்வும் சாத்தியமாகியுள்ளது

விளிம்பு நிலை இஸ்லாத்தில் அது ஒரு கோட்பாட்டுருவாக்க நிகழ்வாக நடைபெறுவதால்.அறிவுவாதத்தின் சட்டகம்(paradigm)விஞ்ஞான முறையாக இருந்த போதிலும் நேர்காட்சிவாதமோ,மனிதாபிமானவாதமோ இயற்கை விஞ்ஞானத்தை அதிகம் விவாதித்ததில்லை.எனவே தான் பெண்சார்ந்த மரபார்ந்த பார்வை இஸ்லாத்தில் நவீன காலத்திலும் நீடித்து வருகிறது.விஞ்ஞானம் கூட ஆண்,பெண் பாலின பேதத்தை ஆமோதிப்பதால் இஸ்லாம் அதை அங்கிகரித்ததில் வியப்பேதுமில்லை.ஆனால் பின்நவீனத்துவம் அறிவின் படிநிலைதரம் பற்றிய பார்வையை கேட்விக்குட்படுத்திய போது அறிவு வாதம் நெருக்கடிக்குள்ளானது. விளிம்புநிலை இஸ்லாம் என்ற இப்புதிய கோட்பாடு சமூக,இயற்கை விஞ்ஞானங்களின் பார்வைக் கோளாறுகளை கண்டும் காணாமல் இருக்க முடியவில்லை.அறிவுவாதம் ஆணாகவும் பகுத்தறிவின்மை பெண்ணாகவும் உருவகப்படுத்தப்பட்டிருப்பதால் பெண் இயல்பு போன்ற விஷயங்களை மரபார்ந்த சிந்தனையோடு தான நவீன இஸ்லாமும் பார்த்தது என்பதை சொல்லத் தேவையில்லை.ஹெபர்மாஸ் போன்ற சிந்தனையாளர்கள் கூட நவீனத்துவத்தின் தவறுகளிலிருந்தும்,நிகழ்வுகளிலிருந்தும் நாம் பல பாடங்களைப் படிக்கவேண்டியிருக்கிறது என்று கூறியது சிந்திக்கதக்கதாகும்.ஏனெனில் விடுதலை,சமத்துவம்,உரிமை போன்ற நவீன சொல்லாடல்கள் வெற்று கோஷங்களாகிப்போனதைக் கடந்த கால வரலாறு நமக்கு கற்று தருகிறது.எனவே விளிம்புநிலை இஸ்லாம் என்ற கோட்பாடு எடுத்திருக்கும் முக்கிய நிலைபாடுகளை பார்க்க வேண்டும்.முதலாவதாக சமூக விஞ்ஞானங்கள் குறித்து இதுவரை இஸ்லாம் கட்டமைத்துள்ள உண்மைகளையும் இஸ்லாம் குறித்து சமூக விஞ்ஞானங்கள் கட்டமைத்துள்ள கற்பிதங்கள் குறித்தும் மறுவாசிப்பு செய்யப்பட வேண்டும்.இரண்டாவதாக் நவீனத்துவம் சார்ந்து இஸ்லாம் உருவாக்கியுள்ள கருத்தாக்கங்கள் பற்றி விவாதிக்க வேண்டும்.மூன்றாவதாக இன்றைய பின்நவீன காலத்தில் வாழும் ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை முஸ்லிம்கள் குறித்த உரையாடலை மேற்கொள்ள வேண்டும்.இதை ரிச்சர்டு ரோட்டியின் வார்த்தைகளில் சொல்வதானால் 'மனிதயினத்தின் உரையாடல்" எனலாம்.

வைதிக இஸ்லாமும்,நவீன இஸ்லாமும் முன்வைக்கும் உண்மை பற்றிய விளக்கம் அறிவொளிகால சிந்தனையை ஒத்திருக்கிறது.எனவே உண்மை மற்றும் பகுத்தறிவு\அறிவுவாதத்தை விமர்சனப்படுத்த வேண்டியிருக்கிறது.இதை மொழிமையவாததில்(logocentarism) இருந்து தான் கண்டடையவேண்டியிருக்கிறது.அமெரிக்க பின்நவீனத்துவச் சிந்தனையாளரான ரிச்சர்டு ரோட்டி தனது தத்துவம் மற்றும் இயற்கை கண்ணாடி என்ற நூலில் அடிக்கட்டுமானவாத சிந்தனைகள் மீது தாக்குதல் தொடுத்திருப்பார்.அடிக்கட்டுமான சிந்தனைகளைத் தகர்ப்பதும் விளிம்புநிலை இஸ்லாமிய கருத்தாக்கமாகும்.மேலும் உண்மை பற்றிய கருத்தாக்கங்களை விவாதிக்கவேண்டியுள்ளது .மேற்கத்திய தத்துவவியலாளர் ஹர்சலை பொறுத்த வரை உண்மை என்பது அகவயமானது .எனவே உண்மை பற்றிய அறிதலையே தத்துவவாதிகள் காலம்காலமாக நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்றும் உண்மை,அறிவு,அறிதல் என்பன போன்ற பகுத்தறிவுக்கு உட்பட்ட நிலைபாடுகளே சகல கற்பிதங்களுக்கும் காரணமாக அமைந்துள்ளது என்ற சீரிய சிந்தனையினை விளிம்பு நிலை இஸ்லாம் ஏற்றுக்கொண்டு உண்மை பற்றிய விவாதங்களை தொடம்கியுள்ளது.இதை காடமர்(Gadamer) என்ற தத்துவவாதியின் விவாதங்களில் இருந்து உருவாக்கிக்கொள்வோம்.

அறிவுக்குப் பகுத்தறிவுவாதம் தேவை என்பது ஆர்கிமிடியன் பார்வையில் இருந்து உருவானதாகும்.ஆர்கிமிடியன் பார்வையானது அறிபவரையும்,அறிவதையும் பருண்மையாக பகுத்தறிவிலிருந்து பெறலாம் என்கிறது.காடமரை பொறுத்தவரை முறையான அறிவு தளம் என்பதை மறுக்கிறார்.காடமரின் சிந்தனையின்படி பகுத்தறிவுவாதத்தின் பெரும்கதையாடல்களை மறுப்பதோடு அறிவு என்பது மரபு, தப்பெண்ணம்(prejudice) ஆகியவற்றால் ஆனது என்கிறார்.அது சர்வபொதுவானதோ பருண்மையானதோ நிச்சயம் மனித புரிதலுக்கு உட்பட்டதாகவோ இருக்கவேண்டும் என்பதில்லை.மேலும் காடமர் பண்பாட்டு அதிகாரத்தின் நெருக்கடி பற்றியும் விவாதித்துள்ளார். நவீனத்துவத்தின் சட்டபூர்வமான அறிவு மாற்றப்பட்டதும் அறிவுசார் சொல்லாடல்கள் புதிய திசைவழியில் பயணிப்பதும் தற்காலத்தில் புதிய நிகழ்வுகளே.விளக்கவுரை(hermeneutics) மரபில் ஒரு தத்துவவாதி மரபு,தப்பெண்ணம்,செவ்வியல் பார்வைகளுடன் பிரதிகளை வியாக்கியானப்படுத்துவார்,ஆனால் காடமர் உண்மையும்,முறையியலும் என்ற நூலில் காரணகாரிய கருத்தாக்கத்தை விமர்சனம் செய்தார்.தத்துவ விளக்கம் (philosophical hermeneutics) வழியாக மனித விஞ்ஞானம் குறித்த முறையிலை அவர் வகுத்துகொண்டார். Schleiermatcher,Delthey,Gadamar போன்றோர்கள் ஹைடேக்கருக்கு பிறகு விளக்கவுரை இயலை தத்துவ அடிப்படையில் விளக்கியவிதம் சற்று மாறுபாடானதாக இருந்தது.காடமரின் நூலில் மொழியியல் வழியாக மனித தொடர்பு எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பது குறித்து அதிகமாக விவாதிக்கப்பட்டிருக்கிறது.உண்மையின் அனுபவம் என்ற கருத்து மூலம் இயற்கை விஞ்ஞானங்களை விளக்கினார்.

காடமரின் கோட்பாட்டின் மூலம் உண்மை,காரணம்,பகுத்தறிவு,மனித விஞ்ஞானங்கள்,இயற்கை விஞ்ஞானங்கள் அணுகிற போது எல்லா அறிவுகளும் அதிகாரத்தை நிறுவும் பொருட்டு கட்டமைக்கப்பட்டவை என்பதை புரிந்து கொள்ளமுடியும்.இந்த முறையியல் மூலம் இஸ்லாமிய வரலாற்றில் வைதீகமரபையும்,நிறுவன ஆதிக்கங்களையும்,நவீன சொல்லாடல்களையும் புரிந்து கொள்ளமுடியும். விளிம்புநிலை இஸ்லாம் என்ற இக்கோட்பாடு இஸ்லாமிய பெருங்கதையாடல் பரப்பில் இதுவரை நிலவிவந்த அத்துணை கோட்பாடுகளையும் சர்ச்சைக்கு உட்படுத்துகிறது.பண்பாட்டு இஸ்லாம்(cultural islam), மதநீக்க இஸ்லாம் (seculer islam),தாரளவாத இஸ்லாம்(liberal islam), நாட்டார் இஸ்லாம் (folk islam) போன்ற பின்நவீன இஸ்லாமிய கருத்தாக்கங்களுடன் இக்கோட்பாடு புதிய உரையாடலை நடத்துகிறது.பின்நவீன காலத்தில் இச்சொல்லாடல்கள் பயன்படுத்தப்படும் விதம் நிறுவன,வைதீக,நவீன இஸ்லாத்தில் வேறுபட்டதாக இருக்கிறது.எனவே அனைத்துவகை நிறுவன,அதிகார கட்டமைப்புகளுக்கு வெளியே நிற்கும் விளிம்பு நிலை முஸ்லிம்களின் சார்பாகவே இக்கோட்பாடு விவாதிக்கப்படுகிறது. பகுத்தறிவு x அ-பகுத்தறிவு(பகுத்தறிவின்மை) வினைசெய் உயிரி(அகம்) x வினைபடு பொருள் (புறம்) பண்பாடு x இயற்கை விதியொழுங்கு x விதிமீறல்(விடுபடல்கள்) என்ற வகையில் இக்கோட்பாடு அறிவாதரங்கள் மீது சர்ச்சையை உருவாக்கிறது. இதில் பண்பாடு x இயற்கை பற்றிய எதிர்வுகள் விளிம்புநிலை முஸ்லிம்களை இயற்கையோடும் வைதீக,நவீன முஸ்லிம்களை பண்பாடோடும் இணைக்கிற அரசியல் முக்கியமானதாகும்.இயற்கையோடு இயந்திருக்கிற ஒடுக்கப்பட்டோர்கள் பகுத்தறிவற்றவர்,பண்பாடற்றவர் என்ற சட்டகத்தின் கீழ் இணைக்கப்படுவதை காணமுடியும்.

இயல்போடு வாழுதல் என்பது மோசமானது என்பதை பகுத்தறிவு சித்தரிக்கிறது.விலங்குகள் தாம் இயல்போடு வாழும் பகுத்தறிவுள்ளவர்கள் பண்பாடோடு வாழுவார்கள் என்று பகுத்தறிவு கூறுகிறது.இஸ்லாம் ஒரு விஞ்ஞான மார்க்கம் என்ற பெயரில் பகுத்தறிவு,பண்பாடு,விதியொழுங்குகள் கடைபிடிக்கப்படுகின்றன.பின்நவீனத்துவம் பகுத்தறிவு வாதத்தை கேள்விக்குட்படுத்தியதும்,பெண்ணியம் விஞ்ஞானத்தின் பாலியல் பேதத்தை கட்டுடைத்ததையும் விஞ்ஞான பகுத்தறிவுவாதத்தின் பலகீனமாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.பண்பாடு எப்போதுமே பெருமரபுகளை ஆதரித்து சிறுமரபுகளைப் புறம் தள்ளி விடும். உயர்பண்பாடும்,வெகுஜன பண்பாடும் இடைவெளிகளால் நிரம்பினாலும் ஒடுக்கப்பட்டோர்களின் பண்பாடுகளை இழிவாகவே பார்க்கிறது.ஏனெனில் ஒடுக்கப்பட்டோர்கள் காட்டாண்டி நிலையில் இருப்பதாக பகுத்தறிவு கட்டமைத்துள்ளது. காடமரின் சிந்தனை எதிர்கட்டுமான தத்துவத்துடன் நெருங்கியதாக இருப்பதால் எல்லாவகை அறிவும் சூழல்சார்ந்து,வரலாறு சார்ந்து,சமூகம் சார்ந்து இயங்குகிறது என்பதை தவிர்த்து முக்கியத்துவம் ஏதுமில்லை என்கிறார் அவர். தேவையியல்(essentialism) மற்றும் அடிக்கட்டுமானவற்றை சர்வ பொது பண்பாக ஒருபோதும் அவற்றால் இருக்க முடியாது என்பதால் அதை நிராகரிக்கிறார்.அடிக்கட்டுமானம் மற்றும் தேவையியல் சார்ந்ததாக பண்பாடு,ஒழுக்கம்,சட்டம்,விதிகள் ஆகியவை இருப்பதாக கொள்வோம்.

ஒரு கட்டுமானவாதம் மற்றொரு காலத்தில் நிராகரிக்கபடுவதால் இஸ்லாமிய பெருங்கதையாடல்களை இக்கோட்பாடு நிராகரித்துவிடுகிறது,மேலும் சூழல்,காலம் சார்ந்த பொது பண்பேதும் இஸ்லாத்தால் நிலைநிறுத்திகொள்ளமுடியாது என்பதை வரலாறு பல கட்டங்களிலும் காண்பித்து தந்துள்ளது.எனவே இஸ்லாம் கட்டமைத்துள்ள அறிவு,விதிகள்,பண்பாடு ஆகியவை ஒடுக்கப்பட்டமக்களுக்கு எதிரானதாக இருக்கிறது.அதேசமயம் இஸ்லாமிய தத்துவமரபில் எழுப்பட்டுள்ள பலசிந்தனைகளும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஒருக்கிறது.இந்த வகையில் விளிம்பு நிலை இஸ்லாமிய கருத்தோட்டத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் அறிவு பற்றிய பிரக்ஞையை வேறு தளத்தில் உருவாக்கம் செய்வது என்பது முக்கியமானதாக இருக்கிறது.பின் நவீனத்துவ சிந்தனையாளரான பூக்கோ அறிவு அதிகாரமாக மாறி ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராக எப்படி செயல்படுகிறது என்பதை முன்னமே விவாதித்துள்ளார்,ஆக அடுத்ததாக அதிகாரம் பற்றிய இக்கோட்பாட்டின் நீட்சியை காண்போம்.

The theory of the State, the traditional analysis of State apparatuses certainly do not exhaust the field in which power functions and is exercised. This is today's great unknown: who exercises power? and where? Today, we know more or less who does the exploiting, where the profit goes, into whose hands, and where it gets reinvested, whereas power… We know very well that power is not in the hands of those who govern. But the notion of "ruling class" is neither clear nor well developed. There is a whole loosely knit group of notions that need analysis: "dominate," "manage," "govern," "state apparatus," "party," etc.

எலியா கானெட்டி என்ற தத்துவியலாளர் அதிகாரத்தின் மூலக்கூறுகளை பற்றி சொல்லுகிறபோது ஆற்றல்,அதிகாரம்,வேகம்,தீர்ப்பு,கருணை போன்ற விஷயங்கள் அதிகாரத்தை நிறுவும் தன்மை உடையது என்பதை விளக்கினார்.விளிம்பு நிலை முஸ்லிம்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டிருந்தாலும் வைதீக,நவீன,நிறுவன இஸ்லாம் சொல்லும் வாழ்க்கையை வாழ்பவரல்லர்.ஆனால் அவர்களை போல பாவனை செய்வதன் மூலம் தமது ஒடுக்கும் நிலையை உறுதிசெய்கின்றனர்.இவர்கள் தங்களைத் தாழ்ந்தவர்களாகவும்,தகுதியற்றவர்களாகவும்,கேவலமானவர்களாகவும்,பேசுவதற்கு சொல்லற்றவர்களாகவும் உணர்ந்து மௌனமாகி வினைசெய் உயிரி என்ற நிலையை இழந்து வினை படு பொருளாக மாறிபோயினர். இந்த பாவனையை மௌனப்பண்பாடு மூலம்,பண்பாட்டு ஆக்கிரமிப்பாக ஒடுக்கப்பட்டவர்கள் மீது மற்றவர்கள் நடத்துகின்றனர்.ஒடுக்கப்பட்ட முஸ்லிம்கள் மீது மற்றவர்கள் முஸ்லிம்களாக இவற்றை கடைபிடியுங்கள் என்று சொல்வது ஆற்றலுக்கும்,அதிகாரத்துக்கும் அவர்களை அடிபணிய வைப்பதற்க்கான முறையே அன்றி வேறல்ல.அதிகாரத்தின் தொடக்க நிலையான, ஒழுங்கற்ற வெளிபாடுகளே ஆற்றல் என்கிறார் எலியா கானெட்டி.பூனை எலியை பிடிக்க ஆற்றலை பயன்படுத்துகிறது.அதைப்பற்றி பிடித்து தனது பாதங்களில் இறுக்கி இறுதியில் கொல்கிறது.ஆனால் எலியோடு பூனை விளையாடும் போது அங்கு வேறொரு தன்மையும் காணப்படுகிறது.எலியை போக விட்டு கொஞ்சம் ஓடவிட்டு வேறுபக்கம் கூட பூனை உட்கார்ந்து கொள்ளும்.இச் சமயத்தில் எலி பூனையின் ஆற்றல் வளையத்துக்குள் இருப்பதில்லை.ஆனால் இப்போதும் எலி பூனையின் அதிகாரவளையத்துக்குள் தான் இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் அது பிடிக்கப்படலாம். பூனை ஆதிக்கம் செய்யும் அந்த வெளி எலிக்கு நம்பிக்கை தரும் விதமாக அது அனுமதிக்கும் தருணங்கள் எலியை அழிக்கும் எண்ணத்தை கொஞ்சமும் தளர்த்திக் கொள்ளாமல் எலியை கண்காணித்து கொண்டிருக்கும் தன்மை இவையாவும் சேர்த்து வெளி, நம்பிக்கை, கண்காணிப்பு, அழிக்கும் எண்ணம் இவையாவும் சேர்த்தே அதிகார அமைப்பு எனப்படுகிறது. இந்தநிலையில் தான் விளிம்புநிலை முஸ்லிம்கள் இருக்கிறார்கள்.பார்க்கும் போது சுதந்திரமாக,ஜனநாயகமாக திரிவதாக தோன்றினாலும் அதிகார வளையத்துக்குள் தான் இருக்கிறார்கள் என்பதை உணரவேண்டும்.இந்த அதிகாரத்தை நிறுவன இஸ்லாம் செய்து கொண்டிருக்கிறது.

ஆனால் நவீன இஸ்லாம் வேறொரு விதத்தில் அதிகாரத்தைக் கட்டமைக்கிறது.அதாவது கடவுள் மீது நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவருக்கும் கடவுள் சர்வ அதிகாரம் கொண்டவராக இருக்கிறார் என்று தெரியும். கடவுள் தமது பிரத்யேகமான வழியில் அதிகாரத்தைச் செலுத்துகிறார்.எனவே கடவுளின் ஆணைகளை நிறைவேற்றுவது தான் விசுவாசியின் மீது கடமையாக இருக்கிறது. இது கடவுளின் வாய்க்குள் இருப்பது போல அடுத்த கணமே விழுங்கபடுவது போன்றதாகும்.எனவே தான் வாழ்வை ஒரு போராக கருதுகிற, போர் என்பதையே வாழ்வின் உண்மையான வெளிப்பாடு என கருதுகிற ஒரு போர்விரனை ஒத்த நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பதன் காரணமாகவே ஜிஹாத் அவர்களுக்கு நம்பிக்கை தருகிறது. இத்தகைய நம்பிக்கையே புனித போர் நடக்கவும் காரணமாகிறது. ஆக விளிம்பு நிலை முஸ்லிம்கள் அதிகார வளையத்துக்குள்தான் இருக்கிறார்கள் என்பது புலனாகிறது. இந்த வளையத்துக்குள் இருந்து கொண்டு அதிகாரத்தை எதிர்ப்பது முக்கியமான செயல்திட்டமாகும். பாதிப்பை அறிந்து கொள்வதையும் அதை உணர்வோடு எதிர்க்க வேண்டும் என்ற பிரக்ஞையையும் விளிம்புநிலை இஸ்லாம் அளிக்கிறது. இனி முக்கியமாக விளிம்புநிலைமுஸ்லிகளை விளிம்புநிலையில் வைத்திருக்க விரும்புகிற அதிகார குணம் முக்கியமாக விவாதிக்கப்படவேண்டும்.



விளிம்பு நிலையினர் மோசமாக தான் இருப்பார்கள் என்று சொல்லுவதன் மூலம் தீர்ப்பொன்றை வழங்குவதிலுள்ள சந்தோஷம். இப்படி சொல்லுவதன் மூலம் தன்னை நடுநிலைவாதியாக காண்பித்து கொள்ளும் மனோபாவம் முக்கியமானதாகும்.அந்த சந்தோஷம் வக்கிரமான உணர்வாகும். நாம் ஓர் உயர்ந்த குழுவைச் சேர்ந்தவர்கள் என்று யூகித்துக் கொண்டு தம்மைவிட கீழான நிலையில் உள்ள குழுக்கென்று சிலவற்றை ஒதுக்குகிறது.பிறரை இழிவுபடுத்துவதன் மூலம் நம்மை நாம் உயர்த்திக் கொள்கிறோம்.எதிரெதிரான தன்மை கொண்ட எதிரெதிரான மதிப்பு கொண்டவற்றின் இருப்பு இயற்கையானது என்றும் தவிர்க்க முடியாது என்றும் கருதப்படுகிறது. நல்லது எப்போதும் கெட்டதற்கு எதிரானதாக இருக்கும் என்று புரிந்து கொள்ளபடுகிறது.இதில் எதை எது சார்ந்தது என்பதை நாம் தான் தீர்மானிக்கிறோம். எனவேதான் விளிம்புநிலையினர் பகுத்தறிவற்றவர்களாக, பண்பாடு அற்றவர்களாக, விதிமீறல் புரிபவர்களாக, வினைபடு பொருளாக கருதுவதின் மூலம் தன்னை அதிகாரம் மிக்கவர்களாக காட்டிக்கொள்வதும் சந்தோஷம் அடைவதும், உயர்ந்தவர்களாக மதிப்பதும் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது.வைதீகமும்,நவீனமும்,நிறுவனமும் போர்க்கள அணிவகுப்பை எப்போதும் விரும்புகின்றன.எனவே சில முரண்களை அவை உருவாக்குகின்றன.நட்பு முரண்,பகை முரண்,விருப்ப முரண் என்பன போன்றவை.விருப்ப முரணில் விளிம்பு நிலையினரை வைத்து நல்லது,கெட்டது என உருவாக்கிய தீர்ப்பின் மூலம் உள்ளார்ந்த உஷ்ணத்தை எப்போதும் தக்கவைத்துகொள்கின்றன.இவ்வாறான விருப்ப முரணை கட்டமைத்துக் கொள்வதன் மூலம் கருணையை அதிகாரமாக மாற்றுகின்றனர்.

விருப்ப முரணை தண்டனைக்கு உட்படுத்தாமல் கருணை மூலம் அதிகாரத்தின் வளையத்துக்குள் சிக்கியிருக்க செய்யும் தந்திரம் அதிகாரத்தின் அரசியலில் பட்டதாகும். இதன் மூலம் இறந்தவர்களை உயிர்ப்பிக்க முடியும் என்ற வைதீக சிந்தனையை புதுப்பித்து சந்தோஷம் அடைகின்றனர்.விருப்ப முரணை தண்டிக்கும் புனித கடமையை காரணம் காட்டி தண்டனையை வழங்கிப் பின்னர் மன்னித்தல் என்ற சலுகை அளித்து அவர்களை பாதுகாப்பதும் அதிகாரத்தின் மூலக்கூறுகளேயாகும். theoretical totalization in the form of the "truth." What constitutes the generality of the struggle is the system of power itself, all the forms in which it is exercised and applied. முரண்களை கட்டமைக்கின்ற போது விருப்ப முரணை ஏமாற்றுவதற்க்காக மற்ற முரண்களின் முகமூடிகளை அம்பலப்படுத்துவதும் வேகமாக நடைபெறும். எனவே அதிகாரம் முகமூடிகளை அணிந்து கொண்டு மற்ற முரண்களின் முகமூடிகளை பேசச் செய்வதன் மூலம் தனது இருப்பை தக்க வைத்துக் கொள்கிறது.வைதீகம்x நவீனம் என்கிற நட்பு முரணை பாசிசம் என்கிற முகமூடியை பேசச் செய்வதன் மூலம் தங்களது பாசிச முகமூடிக்கு பங்கம் வராதவாறு பார்த்து கொள்வதும் இதன் உள் கிடக்கையாகும். இந்நிலையில் ஒடுக்கப்படும் மக்களின் பிரச்சனையை எளிதில் புரிந்து கொள்ளவிடாதவாறு அரைகுறையாக புரியப்ப்டும் அரைகுறை உணர்வுநிலையைக்[semi-intransitive] கட்டமைக்கிறது.இந்த உணர்வு நிலை பழமையை நோக்கிய ஏக்கமாக உருவாக்கமுடியும். பிரச்சனையை உருவாக்கி வீண்விவாதங்களில் மக்களை பேச வைப்பது அதிகாரத்தோடு தொடர்புடைய விஷயமாகும்.வீண்விவாதங்கள் உருவாகிற போது உண்மையான பிரச்சனை என்ன என்று புரியாமல் மாற்றத்துக்கெதிரான உணர்வு நிலை[Intransitive consiousness) அமிழ்த்து விடப்படுகிறது [Submerge].

பல சமயங்களிலும் உண்மைநிலை வெளியாகுகின்ற தருணத்தில் அச்சவுணர்வை உருவாக்குவது அவர்களை மந்தைகளுக்குள் முடக்கும் [Gregariousness] தந்திரமேயாகும். முரண்பாடுகளில் இருந்து பிரச்சனையை கவனமாக கட்டமைத்து அதன் மூலம் அச்ச உணர்வை அல்லது அச்ச வளையத்தை ஏற்படுத்துவது தங்களின் அதிகார வளையத்தில் தொடர்ந்து இருக்க செய்வதே அன்றி வேறல்ல.அச்ச வளையத்துக்குள் சிக்குகின்ற போது பெருங்கதையாடல்களின் எடுத்துரைப்பை பின்பற்ற வேண்டிவரும். இப்படி எடுத்துரைப்பை சொல்லும் போது பாதுகாப்பு தேடியலையும் மனநிலை உருவாகும். பொது முரணைக் காரணம் காட்டி நட்பு முரணும், விருப்ப முரணும் நட்புறவு கொண்டாடி படித்தர அதிகாரத்தை எளிமையாக பொதுமைபடுத்தி விடுகின்றன. படித்தரம் தோன்றிய உடனே அவர்கள் மீது அதிகாரத்தை செலுத்துகின்றன. அடுத்ததாக அதிகாரத்தின் இலக்கு மொழியேயாகும்.பண்பாடற்றவர்களின் மொழி கொச்சையானதாக,பாமரத்தன்மை மிக்கதாக இருப்பதன் காரணமாக தாழ்ந்தவர்களாகத் திகழ்கிறார்கள் என்பன போன்ற அதிகார செயல்பாடு மொழியின் வாயிலாக மௌனமாக நடைப்பெற்று வருகிறது.

வைதீகமும்,நவீனமும் புனித மொழியை அதிகம் பயன்படுத்துவதன் காரணமாக புனித மொழியை கற்காதவர்களை மோசமானவர்களாக சித்தரிக்கிறார்கள். தரமான மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லுவது அதிகாரத்தின் செயல்பாடேயாகும்.பிரதேச வழக்குகளும்,இழிவழக்குகளும்,கொச்சைத்தனமும் மிக்க மொழியைப் பேசும் விளிம்பு நிலையினர் மற்றவர்களின் மொழியைப் புதுமையாக பார்ப்பதும் அதன் மேல் விருப்புறுவதும் அதிகாரம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதன் அடையாளங்களாகும். தாங்கள் பேசுகின்ற மொழி இழிவானது என்று எண்ணவைக்கின்ற சாதுர்யம் முக்கியமானதாகும். விளிம்பு நிலையினர் கல்வியறிவற்று இருப்பதன் காரணமாக பேச்சு மொழியையே பிராதானமாக பயன்படுத்துவதாலும் மொழிச்செயல்பாடு அவர்களவில் சுருங்கியதாகவே இருக்கிறது. ஆனால் பொழுது போக்க பாடல்கள் பாடியும், உயர்மொழியை போல செய்தும் பயன்படுத்தும் பயன்பாடுகள் மொழி விழிப்புணர்வை அவர்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதாகும். மொழியைச் சார்ந்து அவர்களது உணவு, இருப்பிடம், ஆடை, தொழில் போன்ற நடவடிக்கைகள் அமைவதால் தொழிற்சார்ந்த மொழியே அதிகம் புழக்கத்திலுள்ளது. பெண்கள்,சிறுவர்கள் என்று அனைத்து தரப்பினரும் தொழில்களில் ஈடுபடுவதால் நளினமான மொழியை அவர்கள் உபயோகிப்பது இல்லை.இவ்விதமான மொழியின் மீது அதிகாரத்தின் நிழல் படிகிற போது தங்களது உணர்வுகளும்,உணர்வு சார்ந்த நடவடிக்கைகளும் கட்டுப்படுத்தப்படுகிறது. மொழியைக் கட்டுப்படுத்தும் இந்த அதிகார செயல்பாடு மொழியை மொழியில் இருந்து அன்னியபடுத்தும் நோக்கில் அமைந்ததாகும். மேலும் அதிகாரத்தின் குரலுக்குச் செவிமடுத்து தங்கள் மொழியைப் பயன்படுத்தாமல் மௌன மொழியை கடைபிடிப்பதை காணலாம்.மௌனமொழி பயன்படுத்துதல் அதிகாரத்தின் ஆட்சியை உறுதி செய்வதாகும்.

மேலும் பயத்தின் அரசியல் விளிம்புநிலை இஸ்லாமிய கருத்தாக்கத்தில் முக்கிய இடம் வகிக்கிறது. நம்பிக்கை சார்ந்த பயம் என்ற உணர்வுக்குப் பதிலாக அஞ்சி நடுங்க வைப்பதும்,அச்சவுணர்வில் எப்போதும் இருக்கும்படியாக செய்வதும் அதிகாரத்தின் மற்றொரு வன்கொடுமையாகும். நம்பிக்கையின் வாயிலாக தொடங்குகின்ற இந்த அச்சவுணர்வைப் போதிய அளவில் விளிம்புநிலையினரிடத்தில் காணமுடியாது. இதற்கு காரணம் கடவுள் என்ற பயவுணர்வுக்குப் பதிலாக அவர்களிடம் தீய ஆவிகள், மந்திரதந்திரம், சோதிடம் போன்ற இன்னபிற சிறுமரபு நம்பிக்கைகள் அவர்களின் பயவுணர்வுக்கு அடித்தளமாக இருக்கிறது.தொழில் சார்ந்தும்,பரிவர்த்தனைகள் சார்ந்தும் சமூகத்தில இயங்க வேண்டியிருப்பதால் மற்றவர்கள் குறித்த பயமும்,இயற்கை பற்றிய பயமும் அதிகமாக இருக்கிறது.எனவே அச்சம்,குறித்த தன்மையானது இயல்பிலேயே அமையப்பட்டாலும் எப்போதும் அச்சவுண்ர்வில் அல்லது அச்ச வளையத்தில் இருக்க செய்யும் வழிகள் நிறுவன, நவீன, வைதிக இஸ்லாமியக் கூட்டமைப்பில் மிகவும் பயங்கரமானதாக இருக்கிறது.

மேலும் இஸ்லாத்தில் உடலரசியல் வன்முறையைத் தூண்டுவதாக அமைந்திருக்கிறது. இஸ்லாமிய பயங்கரவாதம் தோன்றவும் இந்த உடலரசியல் காரணமாக இருந்தது. இன்னும் விவாதிக்கப்படவேண்டிய பல விஷயங்களும் விளிம்புநிலை இஸ்லாமிய கோட்பாட்டின் இரண்டாம்நிலை,மூன்றாம் நிலை ஆகியவை. இனிவரும் காலத்தில் நாம் பங்கு கொள்வோம்.

intellectuals realize that the masses can do without them and still be knowledgeable: the masses know perfectly well what's going on, it is perfectly clear to them, they even know better than the intellectuals do, and they say so convincingly enough. But a system of power exists to bar, prohibit, invalidate their discourse and their knowledge-a power located not only in the upper echelons of censorship, but which deeply and subtly permeates the whole network of society. The intellectuals are themselves part of this system of power, as is the idea that intellectuals are the agents of "consciousness" and discourse. The role of the intellectual is no longer to situate himself "slightly ahead" or "slightly to one side" so he may speak the silent truth of each and all; it is rather to struggle against those forms of power where he is both instrument and object: in the order of "knowledge," "truth," "consciousness," and "discourse."

Michel Foucault

Sunday, August 29, 2010

உலகச் செம்மொழித் தமிழ் மாநாடு உசுப்புகிற சிந்தனைகள் - அ.மார்க்ஸ்

(தமிழக அரசால் கோவையில் நடத்தி முடிக்கப்பட்ட உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு குறித்து இருதரப்பிலிருந்தும் ஒருபட்சமான கருத்துக்களே  முன்வைக்கப்பட்டன. கருணாநிதியைத் தமிழினத் துரோகியாக வரையறுக்கும் தமிழின ஆதரவாளர்கள், மாநாட்டில் பேசப்பட்ட ஆய்வுக்கருத்துக்கள் குறித்து பேசத்தயாராக இல்லை. இன்னொருபுறம் சுயநலம் தவிர வேறுதும் அறியாத கருணாநிதி ஆதரவாளர்கள் இந்த மாநாட்டைக் கருணாநிதியின் உச்சபட்ச சாதனையாக வர்ணித்துக் கொண்டாடத் தயங்கவில்லை. இந்த இரு நிலைகளிலிருந்தும் விலகி வேறுபல முக்கியமான பார்வைகளை முன்வைக்கிறது தோழர் அ.மார்க்சின் இந்த கட்டுரை. குறிப்பாக ஈழத்தில் நடந்த இறுதிப்போருக்குப் பின்னால் இணையத்திலும் வெளியிலும் உருவாகியுள்ள புதிய தமிழின ஆதரவுச்சக்திகளும் ஏற்கனவே உள்ள தமிழ்த்தேசிய சக்திகளும் கருணாநிதியை எதிர்ப்பது என்றபெயரில் திராவிடத்தையும் திராவிடச்சிந்தனைகளையும் குறிப்பாக பெரியாரின் பணிகள் மற்றும் கருத்தியல் பங்களிப்பையும் முற்றாக நிராகரிப்பது என்னும் நிலைப்பாட்டையும் எடுத்துள்ளனர். ஏற்கனவே இந்த நிலைப்பாட்டில் உள்ள குணா, நெடுமாறன், பெ.மணியரசன் போன்றவர்களுடன் இப்போது சீமான், பாரதிராஜா போன்றோரின் குரல்களும் இணைவதைக் காணமுடிகிறது. ‘திராவிடர்கள் பூர்விகக் குடியல்லர்’ என்பது போன்ற கருத்துக்களையும் ஆரியர் வருகை, சிந்துச்சமவெளியில் அமைந்த திராவிடர் நாகரிகம் போன்ற கருத்தாக்கங்களை மறுப்பதில் பார்ப்பனிய-இந்துத்துவவாதிகளுடன் தமிழ்த்தேசியவாதிகளும் இணைவது என்பது கவனிக்கத்தக்கது மட்டுமல்ல, ஆபத்தானதும்கூட. இந்நிலையில் தமிழ்த்தேசியவாதிகள், இந்துத்துவவாதிகள் என இருதரப்பினரும் மறுக்கும் திராவிடத்தின் இருப்பை செம்மொழி ஆய்வரங்கக் கருத்துக்கள் உறுதிசெய்வதைக் கவனப்படுத்துகிறது அ.மாவின் இந்த கட்டுரை.அதேநேரத்தில் இந்த மாநாட்டின் பின்னணியில் உள்ள கருணாநிதியின் தமிழினத்துரோகம் மற்றும் புழுத்துநாறும் வாரிசு அரசியல், புகழ்ச்சி விருப்பம் ஆகியவை குறித்தும் கடுமையாக விமர்சிக்கிறது. அதனாலேயே பொதுவாக லும்பினிக்காக எழுதப்படும் கட்டுரைகளைத் தவிர வேறு இதழ்களிலோ இணையங்களிலோ வெளியாகும் கட்டுரைகளை வெளியிடுவதில்லை என்னும் வழக்கத்திற்கு மாறாக அ.மார்க்சின் இந்த கட்டுரையை முக்கியத்துவம் கருதி வெளியிடுகிறோம். - லும்பினி)

எள்ளளவும் மனக் குறுகுறுப்போ தயக்கமோ இல்லாமல் ஒரு குடும்பத் திருவிழாவாக செம்மொழி மாநாட்டைக் கருணாநிதி அரசு நடத்தி முடித்தது குறித்த கூர்மையான விமர்சனங்கள் தமிழ் இதழ்களில் ஏராளமாகப் பதிவாகியுள்ளன. அது குறித்துப் பேசுவதல்ல இங்கு எனது நோக்கம்.
ஏனெனில் இதில் பங்குபெற்ற நமது உள்ளூர்த் தமிழ் ‘அறிஞர்கள்’, பேராசிரியர்கள் முதலானோர் கொஞ்சமும் வெட்கமின்றி பேரசர் மற்றும் இளவரசியின் புகழ்பாடி நின்றதில் எள்ளளவும் வியப்பில்லை. நமது தொன்மைத் தமிழ்ப் பாரம்பரியத்தின் தொடர்ச்சிகளில் ஒன்றாக இதையும் நாம் கொள்ள முடியும் தானே. தமிழின் தொன்மையையும் தொடர்ச்சியையும் இம்மாநாட்டில் ஜார்ஜ் ஹார்ட் முதலான அறிஞர்கள் வியந்து பாராட்டவில்லையா? அதிகாரத்தை நத்திப் பிழைக்கும் புலமைப் பாரம்பரியமும் இந்தத் தொல் மரபுகளில் ஒன்றுதான் என விட்டுவிட வேண்டியதுதான். பெரியார் நமது புலமைப் பாரம்பரியம் குறித்து, அவருக்கே உரித்தான கிண்டல், நகைச்சுவை, கூர்த்த நுட்பம் ஆகியவற்றுடன் கூறியுள்ள கருத்துக்கள் நினைவில் புரள்கின்றன.
வெளிநாட்டிலிருந்து முக்கிய பல தமிழறிஞர்கள் வந்திருந்தனர். தமிழகப் பேராசிரியர்கள் பலரும் பங்குபெற்றனர். ஆனால் இன்றும் தமிழை அதன் படைப்பாற்றல் திறனை வீச்சுடன் பயன்படுத்தி வரும் நவீன எழுத்தாளர்கள் யாரும் இதில் பங்கு பெறாதது நமது கவனத்திற்குரியது. எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி முதலானோரின் பெயர்கள் நிகழ்ச்சி நிரலில் இருந்தபோதும் அவர்களும் கலந்து கொள்ளவில்லை. ராமகிருஷ்ணன் ஏதோ வெளிநாட்டுப் பயணத்தில் இருந்ததாக யாரோ சொன்னார்கள். கோணங்கி தன்னைக் கேட்காமலேயே பெயரைப் போட்டு விட்டார்கள் என வெளிப்படையாகச் சொல்லி தன் மரியாதையைக் காப்பாற்றிக் கொண்டார். மற்றபடி ஒரு காலத்தில் தவிர்க்க இயலாத இலக்கிய மற்றும் அறிவு ஜீவித ஆளுமைகளாக இருந்து, இன்று சுய முன்னேற்றத்திற்காகவும், அரசியல் மற்றும் வணிக நலன்களுக்காகவும் தமது அறிவு நேர்மை அனைத்தையும் இழந்து கருணாநிதி குடும்பப் புகழ் பாடுபவர்களாக மாறியவர்கள், பொது நிகழ்வுகளில் இரட்டைக் கரை வேட்டியுடன் வரத் தயங்காதவர்கள். இப்படியான ‘நவீன எழுத்தாளர்கள்’ சிலர் மட்டுமே மாநாட்டில் முகங்காட்டினர். (பொன்னீலனை மட்டும் வேண்டுமானால் ஒரு விதிவிலக்கு எனலாம்)
கடுமையாக அரசை விமர்சித்து வருவதாகக் காட்டிக் கொள்ளும் நூல் வெளியீட்டாளர்கள் சுருக்கமாக மாநாட்டில் கடை போட்டுத் தன் பங்களிப்பைச் செய்தனர். ஜெயமோகன், சாருநிவேதிதா போன்றோர் அழைக்கப்படாததைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஜெயமோகன் ஏற்கெனவே கருணாநிதியை விமர்சித்தவர். அவரை அழைக்கமாட்டார்கள். தமிழவன் போன்ற பேராசிரியர்கள், எல்லோராலும் மதிக்கப்படக்கூடிய ஆ.சிவசுப்பிரமணியம் தொ. பரமசிவன் போன்ற ஆய்வறிஞர்கள், ஞானி, தி.க.சி போன்ற ஆபத்தற்ற மூத்த விமர்சகர்கள் கூட அழைக்கப்படாததை இப்படித்தான் நாம் புரிந்து கொள்ள முடிகிறது. தப்பித் தவறியும் கூட அரச குடும்பத்தின் மீதும், மாநாடு குறித்தும் விமர்சனங்கள் ஏதும் பதிவாகிவிடக் கூடாது என்பதில் ஏற்பாட்டாளர்கள் கவனமாக இருந்துள்ளார்கள்.

மாநாடு நடத்தும் இக் காலகட்டம் குறித்தும், நோக்கம் குறித்தும் மிக அடிப்படையான ஒரு விமர்சனம் தமிழ்ச் சூழலில் இருந்தது. உலகத் தமிழ் மாநாடுகளை இதுவரை நடத்தி வந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தற்போதைய தலைவரும், எதற்காகவும் அறிவு நாணயத்தை இழக்கத் தயாராக இல்லாதவருமான ஜப்பானியத் தமிழியல் அறிஞர் நொபோரு கராஷிமா அவர்கள், இப்படியான ஒரு மாநாட்டுத் திட்டத்தைத் தமிழக அரசு முன் வைத்தபோது, இன்று உடனடியாக அதை நடத்துவதற்கு வாய்ப்பில்லை என உறுதியாக மறுத்தார். இன்றைய சூழலில் இப்படியான ஒரு மாநாடு குறித்த தயக்கம் என்பது ஒருபுறம். மற்றபடி ஒரு ஆராய்ச்சி மாநாட்டை இப்படி அவசர கோலத்தில் நடத்த இயலாது. 2011 வாக்கில்தான் அது சாத்தியம் என்று அவர் உறுதிபடக் கூறினார். தமிழக அரசின் அவசரத்தை எல்லோராலும் புரிந்துகொள்ள முடிந்தது. ஊரறிந்த ரகசியம்தான் அது. ஈழப் பிரச்சினையில் சரிந்துவிட்ட தனது பிம்பத்தைக் தேர்தலுக்கு முன்னதாகத் தூக்கி நிறுத்தி உலகத் தமிழ்த் தலைவர் என்கிற பெருமையைத் தக்க வைத்துக் கொள்ளும் அவரசத்தின் முன் கராஷிமாவின் உறுதி எம்மாத்திரம்.

தமிழாராய்ச்சி மாநாட்டைத்தானே நடத்த முடியாது என்கிறீர்கள், ‘உலகச் செம்மொழித் தமிழ் மாநாடு' என்பதாகப் புதிய பெயரைச் சூட்டி நடத்துகிறேன் பாருங்கள் எனக் களமிறங்கினார் கருணாநிதி. சிவத்தம்பி முதலான மூத்த தமிழறிஞர்கள் அதற்கு ஒத்துழைத்தனர். சிவத்தம்பி அவர்களுடன் மிக நெருக்கமாகப் பழகியவன் என்கிற முறையில் அவர் இத்தகைய முடிவெடுத்ததில் எனக்கு வியப்பில்லை. ஒரு நேரத்தில் விடுதலைப் புலிகள் இடைக்கால அரசு ஒன்றை அமைக்க வாய்ப்பிருந்தபோது சிவத்தம்பி பெயர்தான் அதற்குச் சிபாரிசு செய்யப்பட்டது என்பது நினைவிருக்கலாம். நாங்களெல்லாம் அப்போது அவருக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பினோம். இன்னொரு சந்தர்ப்பத்தில் இலங்கை அரசு அவரை வெளிநாட்டுத் தூதுவராக நியமிக்க முன் வந்ததாகவும் ஒரு பேச்சு உண்டு. (எனினும் பேராசிரியர் அதை ஏற்கவில்லை) அந்த அளவிற்கு இரு தரப்பினரும் மதிக்கத்தக்கவராக இருந்தவர், இருப்பவர் அவர்.

பேராசிரியர் அவர்கள் வந்தது மட்டுமல்ல. அவர் அளித்த பேட்டிகள் இங்கே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தின. ‘ஈழம்’ என்கிற சொல்லே சிங்கள மூலத்திலிருந்து உதிந்த சொல், அதை நான் தவிர்க்க விரும்புகிறேன்’ என்றார். தவிரவும் அப்பெயர் இளைஞர்களின் ஆயுதப் போராட்ட அரசியலுடன் தொடர்புடையதாகி விட்டதையும் சுட்டிக் காட்டினார். ‘நான் முதலில், இலங்கையன், எனது அடுத்த அடையாளமே தமிழன்’ என்றார். உங்களுக்கும் அப்படித்தானே, முதலில் நீங்கள் இந்தியர்கள், அப்புறம் தானே தமிழர்கள் என்றார். வெறுமனே ஈழத் தமிழன் எனக் கூறி இலங்கை மீதுள்ள எனது பாரம்பரிய உரிமையை விட்டுவிட முடியுமா’ என்றார். உள்நாட்டுத் தமிழ் அகதிகள் பற்றி ஒரு பத்திரிகை வினவியபோது ‘அதெல்லாம் எங்கள் உள்நாட்டுப் பிரச்சினை. இங்கே வந்து பேசக் கூடாது’ என்றார். ஆமாம் அவர்கள் பெரிய துன்பத்திற்காளாகியுள்ளார்கள். உடனடியான நிவாரணம் அவர்களுக்குத் தேவை என்கிற ரீதியிலும் கூட அவர் பேசத் தயாராக இல்லை. எனினும் முன்னதாக தினமணி இதழுக்கு அவர் பேட்டியளித்த பொழுது, ‘இலங்கை எங்களது தீவு. தமிழர்கள் அங்கு இருந்தார்கள். இருக்கிறார்கள். எதிர்காலத்திலும் இருப்பார்கள். இந்த உரிமையை நாங்கள் விட்டுவிட மாட்டோம்’ என்கிற ரீதியில் கூறியதைப் படித்தபோது, எத்தகைய நைந்த நெஞ்சிலிருந்து இந்தச் சொற்கள் எழுகின்றன என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது. எனினும் உலக அளவில் ஏற்கப்பட்ட தமிழாய்வின் தலைமகன் என்கிற பரிமாணத்தைத் தாண்டுவதற்கு அவர் விரும்பவில்லை.
தமிழர்கள் இன்று குறைந்த பட்சம் ஆறேழு நாடுகளில் பாரம்பரிய உரிமைகளோடு வாழ்கின்றனர். எனினும் தமிழகத்திற்கு அடுத்தபடியான தமிழர்களின் நாடாக இருப்பது ஈழம் தான். அங்கு இப்படியான ஒரு பேரழிவு நிகழ்ந்துள்ளபோது இந்தக் கொண்டாட்டம் தேவைதானா என்கிற நியாயமான கேள்வி எல்லோர் மத்தியிலும் இருக்கத்தான் செய்தது. உண்மையில் இந்த கேள்வியை முன்னெடுத்துச் சென்றிருக்க வேண்டியவர்கள் தமிழ் எழுத்தாளர்களாகிய நாம்தான். உலகத் தமிழ்க் கொண்டாட்டங்களைப் புறக்கணிக்க இயக்கம் நடத்திய மரபும் நமது தமிழ்ச் சிறு பத்திரிகைகளுக்கு உண்டுதானே. ஆனாலும் இங்கே தமிழ் எழுத்தாளர்களுக்கு இன்று ஒரு பொதுவான அமைப்பு இல்லை. கலை இலக்கியப் பெருமன்றம், முற்போக்கு எழுத்தாளர் சங்கம் முதலான இடதுசாரிக் கட்சிகளின் கலை இலக்கிய அமைப்புகள் அவர்களது கட்சி நிலைப்பாட்டை ஒட்டிப் பெரிய விமர்சனமின்றி மாநாட்டில் பங்கு பெற்றன. ‘தமிழ்ப் படைப்பாளிகள், உணர்வாளர்கள் கூட்டமைப்பு’ என்றொரு அமைப்பு சில எழுத்தாள நண்பர்களால் உருவாக்கப்பட்டபோது எனக்கு அவர்களோடு அரசியல் ரீதியாகக் கருத்து வேறுபாடு இருந்தபோதும் மனதார மகிழ்ச்சியுற்றேன். குறிப்பான அரசியல் திட்டத்துடன் செயல்படுபவர்கள் இப்படியான ஒரு ஒருங்கிணைப்பைச் செய்யக் கூடாது என்பதில்லை. சொல்லப்போனால் அவர்கள்தான் முன் கை எடுக்க முடியும். ஆனால் பெரிய அளவில் பொதுவான எழுத்தாளர்களை ஒருங்கிணைக்கும் வண்ணமாக அவர்களின் செயல்பாடுகளும், அறிக்கைகளும் அமைந்திருக்க வேண்டும். அப்படி அமையவில்லை. இறுதி நேரத்தில் அவர்களும் எந்தச் சிறு எதிர்ப்பையும் காட்டாமல் ஒதுங்கிக் கொண்டார்கள்.
   
இங்கொன்றைச் சொல்லியாக வேண்டும். ஈழப் பிரச்சனையில் கடுமையாகக் கருணாநிதி அரசை விமர்சித்துக் கொண்டிருந்த இந்த நேரத்தில் இம் மாநாடு தேவைதான எனக் கேட்டுக் கொண்டிருந்த தமிழ்த் தேசிய அமைப்புகள் எதுவும் எந்தப் பெரிய எதிர்ப்பையும் மாநாட்டு நேரத்தில் காட்டவில்லை. போதாக்குறைக்கு விழுப்புரத்தில் நடைபெற்ற தண்டவாளப் பெயர்ப்பு நிகழ்வு ஒன்றைக் காரணம் காட்டி தமிழ்த் தேசிய அமைப்புகள் மீது தமிழக அரசு ஒரு தாக்குதலை மேற்கொண்டு கடும் அடக்குமுறைக்குத் தான் தயாராக உள்ளதைக் காட்டிக் கொண்டது. நக்சல்பாரிப் பாரம்பரியத்தில் வந்த புரட்சிகர இளைஞர் முன்னணி, மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், மக்கள் கலை இலக்கியக் கழகம் முதலான அமைப்பினரே இந்த அச்சுறுத்தலுக்கெல்லாம் அஞ்சாமல் ஆங்காங்கு துண்டறிக்கை மற்றும் சுவரொட்டிகளை வெளியிட்டுக் கைதாயினர். இதைக் கண்டித்து மனித உரிமை அமைப்புகள் சார்பாக நாங்கள் வெளியிட்ட அறிக்கை மாநாட்டு களேபரங்களுக்கிடையில் இரண்டு வரிச் செய்திகளாக மட்டுமே பத்திரிகைகளில் இடம் பிடித்தன.
சரி, இப்போது மாநாட்டில் முன் வைக்கப்பட்ட உருப்படியான கருத்துக்களைக் கொஞ்சம் அசை போடுவோம். உருப்படியான கருத்துகளை சிந்துவெளி முத்திரைகளை வாசிப்பதில் பல ஆண்டுகளாகத் தன்னை ஈடுபடுத்தி வரும் பின்லாந்து நாட்டு இந்தியவில் அறிஞர் அஸ்கோ பர்போலா, மாஸ்கோ பல்கலைக்கழகப் பேராசிரியர் அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி, கலிஃபோர்னியா பல்கலைக்கழகத் தமிழியல் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் ஆகியோரே முன் வைத்தனர். 23 ஆய்வரங்குகளில் 239 அமர்வுகள் நடைபெறும் என முன்னதாக அறிவித்திருந்தபோதும் வெறும் 168 அமர்வுகள் மட்டுமே நடந்தன. அவற்றிலும், விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே பார்வையாளர்களாக இருந்தனர் எனப் பத்திரிகைகள் எழுதின. இவற்றில் துதிபாடல்கள் தவிர்த்த உருப்படியான கட்டுரைகள் மிகச் சிலவே. நமது ‘high profile’ பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் பலரும் குறிப்பிடத்தக்க எந்தப் பங்களிப்பையும் செய்யவில்லை என்பது கவனிக்கத்தக்கது. சாதி அரசியல், ஆராய்ச்சி மாணவர்களை நோண்டுவது, எப்படி துணை வேந்தராக ஆகலாம் என யோசிப்பது ஆகியவற்றிற்கு மத்தியில் ஆராய்ச்சிக்கு அவர்களுக்கு நேரமேது?

மேற்குறித்த மூன்று முக்கிய அறிஞர்களும் ஆரம்பத்தில் கருத்தொருமித்து குறிப்பிடத்தக்கது. இம்மாநாட்டின் மிகப் பெரிய பங்களிப்பு என நாம் அதைத்தான் சொல்ல வேண்டும். வடமொழியின் செல்வாக்கு, பாதிப்பு ஆகியவற்றிற்கு ஆட்படாது. முற்றிலும் சுயேச்சையாகவும் முன்னோடியாகவும் ஒரு இலக்கியப் பாரம்பரியத்தைத் தமிழ், தமிழ் மட்டுமே கொண்டிருந்தது என்பது ஒன்று. மற்றது சிந்துவெளி நாகரிகம் என்பது ஆரிய வருகைக்கு முற்பட்ட, முற்றிலுமான ஒரு உள்ளூர் நாகரிகம் மட்டுமல்ல. அது திராவிட வேர்களைக் கொண்டிருந்தது என்பது. மூன்றாவது திராவிட, தமிழ்க் கூறுகள் கங்கைச் சமவெளி நாகரிகத்திலும் சமஸ்கிருத மொழியிலும் ஊடுபாவியுள்ளன என்பது. சொற்கள், இலக்கிய வடிவங்கள், அழகியல் கோட்பாடுகள் எனப் பலவும் சமஸ்கிருதத்திலிருந்து தான் தமிழுக்கு வந்தன என்பதை இந்த அறிஞர்கள் ஒத்த குரலில் மறுத்துள்ளனர். சிந்துவெளி நாகரிகம் குறித்த வரலாற்றுப் புரட்டு ஒன்றை இந்திய அளவில் வலதுசாரி பாசிச சக்திகள் மேற்கொண்டு வரும் சூழலில் இந்த மாநாட்டின் ஊடாக இந்த அம்சங்கள் வலியுறுத்தப்பட்டது மிக முக்கியமான ஒரு பங்களிப்பு எனலாம்.
நீண்ட காலமாகச் சிந்துவெளி முத்திரைகளை வாசிக்க முனைந்து வரும் அஸ்கோ பர்போலா இதற்கு முன்னதாக சிந்துவெளி நாகரிகத்தை திராவிட நாகரிகம்தான் என இந்த அளவிற்கு உறுதியாகச் சொன்னதில்லை. அப்படியும் ஒரு கருத்துண்டு என்றே குறிப்பிட்டு வந்தார். எனது ‘ஆரியக் கூத்து’ நூலிலும் வேறு சில கட்டுரைகளிலும் இதைக் குறிப்பிட்டுள்ளேன். ஆனால் இன்று அவர் ஹரப்பா மக்களின் மொழி திராவிடக் கூறுகளைக் கொண்டிருந்தது (Proto Dravidian) என்பதை உறுதிபடக் கூறியுள்ளார். கலைஞர் கருணாநிதி செவ்வியல் தமிழ் விருதைப் பெற்றுக் கொண்டு அவர் ஆற்றிய உரையில் அவர் இதைப் பதிவு செய்தார். மூவாயிரம் ஆண்டுப் பாரம்பரியம் மிக்க சமஸ்கிருதம் இணை சொல்லத் தக இயலாத அளவு இலக்கிய வளம் மிக்கது என்பது உண்மையே. கி.மு.1500-1300 வாக்கில் சிரியாவிலிருந்த மிடானி அரசு காலத்திய மூல இந்தோ-ஆரிய மொழிக் கூறுகளைக் (Proto Indo-Anjam) கொண்டுள்ள பழமையான மொழி அது என்பதிலும் ஐயமில்லை. கி.மு.2000-க்குரிய, மத்திய ரஷ்யாவில் வழங்கப்பட்ட இந்தோ-ஈரானிய மொழிக் கூறுகளையும் கூட அதில் காணலாம். “ஆனால் இவை எதுவுமே தமிழின் வேர்களுக்கு முந்தியதில்லை. மூல திராவிட மொழிக் காலகட்டத்திற்குக் கொண்டு செல்லத்தக்கது தமிழ். கி.மு. 2600-1700 காலகட்டத்தில் சிந்துவெளிக் குறும்பிரதிகள் பலவற்றையும் இத்தோடு அடையாளம் காண இயலும்” என்றார் பர்போலா. கி.மு. 1000 வாக்கில் எழுதப்பட்ட ஆகப் பழைய இலக்கியமான ரிக் வேதத்தில் குறைந்த பட்சம் ஆறு திராவிடக் கடன் சொற்களைக் காண முடியும். அவை: ‘முகம்’, ‘களம்’, ‘பழம்’, ‘குண்டம்’,கான (குருடு), கியாம்பு (நீர்த் தாவரம்)
பர்போலா அத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை. ஹரப்பா மொழி திராவிடம் எனும் போது சிந்துவெளி முத்திரைகள் மற்றும் நாகரிகத்தை விளங்கிக் கொள்வதில் சங்க இலக்கியத்தின் பங்கு அதிகமாகிறது என்றார். மூல திராவிட, சொற்களஞ்சியம், மொழி அமைப்பு ஆகியன குறித்து போதிய ஆய்வுகள் இன்று இல்லாததே சிந்துவெளி நாகரிகத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள இயலாமைக்குக் காரணம் என்றும் கூறினார். அவரது கட்டுரையின் தலைப்புகூட ‘சிந்துவெளி எழுத்துப் பிரச்சினைக்கு ஒரு திராவிடத் தீர்வு’ என்பதுதான். மொழி மட்டுமின்றி வடநாட்டு மக்களிலும் ஒரு சாரார் திராவிட இன வழியில் வந்தவர்களே. நுணுக்க ஆய்வுப் பயிற்சி அற்ற சாதாரண மக்களும் கூட தமது தமிழறிஞன் ஊடாக சிந்துவெளி முத்திரைகளை வாசிக்க உதவி செய்ய முடியும் எனவும் அவர் கூறினார்.
சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே. ஆரிய ஊடுருவல் பின்னரே நிகழ்ந்தது. தென்னகம் நோக்கி நகர்ந்த திராவிடர்கள் எல்லோரும் ஆரியர்களால் தோற்கடிக்கப்பட்டு விரட்டப்பட்டவர்கள் அல்லர். மேய்ச்சல் நிலம் தேடிக் கொஞ்சம் கொஞ்சமாக வந்து குடியேறித் தம் மேலாண்மையை நிறுவிய ஆரியர்கள் பூர்வ திராவிடக் குடியில் மேல் தட்டிலிருந்தவர்களிடம் தமது ஆரிய மொழியைப் பயிற்றுவித்தனர். கங்கைச் சமவெளி முழுமையும் இப்படியாக ஆரியம் பரவியபோதும் மூல திராவிடக் கூறுகளை இன்றும் அதில் காண இயலும். ஆரியப் படை எடுப்பிலிருந்து விலகி நின்ற தென்னகத்தில் திராவிடம் செழித்தோங்கியது.
சிந்துவெளி எழுத்தின் அடிப்படைக் கூறுகளில் ஒன்றான ‘மீன்’ குறி, ‘மீன்’ எனும் சொல்லுக்கு தமிழில் உள்ள இரு அர்த்தங்கள் (மற்றது நட்சத்திரம்) ‘வெளி’யைக் குறிக்க குத்துக் கோடுகளுக்கு இடைப்பட்ட வெளியைப் பயன்படுத்துதல், இவற்றை எல்லாம் இணைத்து சிந்துவெளி முத்திரைகளில் உள்ள கார்த்திகை நட்சத்திரக் கூட்டத்தைத் தமிழ்ச் சொற்களின் ஊடாக அவர் பிறிதொரு கூட்டத்தில் வாசித்து விளக்கியது நம்மை வியப்பிலாழ்த்துகிறது. கார்த்திகை நட்சத்திரக் குறிகளை அவர் மீன், மேமீன், பசுமீன், வெள்ளிமீன், வடமீன், வடவெள்ளி, அனுமீன் என்பாகத் தமிழால் வாசித்தார். சிந்துவெளி திராவிடர்கள் முருகளை வணங்கியிருக்கலாம் எனவும் அவர் கருத்துரைத்தார்.
மொழியிலாகட்டும் இலக்கியப் பாரம்பரியத்திலாகாட்டும் சமஸ்கிருதத்திலிருந்து முற்றிலும் தனித்தியங்கியது சங்கத் தமிழ்’ என்றார். ஜார்ஜ் ஹார்ட் எல்லாமே சமஸ்கிருதத்திலிருந்துதான் சென்றது. சமஸ்கிருதம் எதையும் பிறமொழகளிலிருந்து பெறவில்லை என்கிற கருத்து தவறு. நேரெதிராகவே வரலாறு அமைந்துள்ளது. திராவிட மொழிகளுக்குள்ளும் தமிழ் தனித்துவமானது. தெலுங்கு, கன்னடம், மலையாளம் இவை எல்லாம் 70 முதல் 80 சதம் வரை சமஸ்கிருதத்தைச் சார்ந்திருந்தன. அது மட்டுமல்ல. தமது மொழியிலிருந்த ஆற்றல் மிகுந்த பல சொற்களை அவை கைவிட்டன. தமிழ் ஒன்றே சமஸ்கிருத மொழிச் சொற்களைக் கூடியவரை தவிர்த்து நின்றது. தவிரவும் இன்றுவரை ஆற்றல் மிகுந்த தனது தொடக்க காலச் சொற்களை அது கைவிட்டதில்லை.
சமஸ்கிருதத்திற்கும் தமிழுக்கும் இன்னொரு முக்கிய வேறுபாடும் உண்டு என்றார் ஹார்ட். சங்கத்தமிழ் என்பது சாதாரண மக்களின் அன்றாட வாழ்வைப் பாடிய மொழி. இன்றளவும் தமிழ் சாதாரண மக்களின் அன்றாட வாழ்வைப் பேசக்கூடிய தன்மையைத் தொடர்ச்சியாகப் பேணி வருகிறது. சமஸ்கிருதமோ அன்றாட வாழ்வியலுக்கு அப்பாற்பட்ட ஒருவகை உலகியல்சாராத் தன்மையைப் பேசிய மொழியாக இருந்தது.
சங்கத் தமிழ் ஆற்றலின் தொடர்ச்சியை நம்மாழ்வார் முதலானோரின் பக்திப் பாடல்களில் காண முடியும். தமிழக பக்தி இயக்கச் செல்வாக்கு தமிழக எல்லைகளைத் தாண்டி விரிந்தது. துளசி ராமாயணம் முதலியன தமிழ்ப் பக்தி இயக்கத்தின் தாக்கத்தில் உருவானவை. அந்த வகையில் சங்க இலக்கியத் தாக்கத்தை அவற்றில் காண இயலும். இந்திய அளவில் மிக முக்கியமான, ஆகப் பெரிய இலக்கியமான கம்பராமாயணம் சில சமஸ்கிருதக் கூறுகளைக் கொண்டிருந்த போதும் தமிழின் பாரம்பரிய மரபுக் கூறுகளே அதில் மிகுந்துள்ளன. சங்கப் புலவர்கள் சமஸ்கிருத இலக்கியங்களை அறிந்திருந்தனர். ஆனால் அவற்றை அப்படியே அவர்கள் பின்பற்றவில்லை. காலப்போக்கில் சமஸ்கிருதச் செல்வாக்கு தமிழில் படிந்தது உண்மைதான். ஆனால் தமிழ் இலக்கியங்கள் அதன் சங்க வேர்களையே அடிப்படைக் கூறுகளாகக் கொண்டிருந்தன. இந்திய மொழியில் பரவும் சமஸ்கிருதம், அரபி, பாரசீகம் முதலான வேர்களைக் கொண்டுள்ளன. ஒரே விதி விலக்கு தமிழ்தான் இந்த வகையில் சுயேச்சையானது. வாய்மொழிப் பாரம்பரியத்திலிருந்து அது உருவானது என்றார் ஹார்ட்.

தொல்காப்பிய அமைப்பு வெளிப்படுத்தும் ஆழமான அறிவு நுட்பத்தையும், விசாலாமான பார்வையையும் திறந்த நோக்கையும் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி கூறியதை வாசித்தபோது பல ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் பொ.வேல்சாமி இந்த அம்சத்தை அடிக்கடி வலியுறுத்திக் கூறியது என் நினைவுக்கு வந்தது. தொல்காப்பியம் சமஸ்கிருத மரபைச் சார்ந்து எழுதப்பட்ட நூல் என்பதை துப்யான்ஸ்கி மறுத்தார். ஐந்திர மரபைப் பின்பற்றி தொல்காப்பியம் எழுதப்பட்டது என்பதையும் பாணினியின் ‘அஷ்டத்யாயி’, யஸ்கரின் ‘நிருத்தம்’, ரிக் வேதத்தின் ‘பிரதிஷ்க்யா’ முதலியவற்றிலிருந்து சில பகுதிகள் அப்படியே தொல்காப்பியத்தில் மொழியாக்கப்பட்டுள்ளன என சுப்பிரமணிய சாஸ்திரி கூறுவதையும் துப்யான்ஸ்கி ஆணித்தரமாக மறுத்தார். பிரதிநிதிகளுக்கிடையேயான பரஸ்பர உறவு என்று மொழிபெயர்ப்பு என்ற வடிவில் அக்கால கட்டத்தில் அமையவில்லை. மற்றவற்றை மீண்டும் எழுதுதல் (Rendering) என்கிற வடிவத்திலேயே பிரதிஉறவுகள் அன்று அமைந்தன. ஒன்றிலிருந்து இன்னொன்று சிலவற்றை எடுத்துக் கொள்வது எங்கும் நடக்கக் கூடியதே. தவிரவும் தான் பிறவற்றிலிருந்து எடுத்துக் கொண்டதை தொல்காப்பியர் மறைப்பவரும் அல்லர். சுமார் 150 இடங்களில் ‘என்மனார் புலவர்’ எனக் கூற அவர் தயங்கவில்லை.
ஒரு செவ்வியல் மொழி என்பது அம்மொழி மற்றும் அதிலுள்ள இலக்கியங்களின் அமைப்பைப் பகுத்து, விமர்சித்து, தொகுத்து அறிவுத் தொகுதிகளாகத் (treatise) தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருக்கும். இந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் ‘நன்னூல்’, ‘யாப்பருங்கலம்’, ‘அகப்பொருள்’, முதலான இத்தகைய நூற்கள் தமிழில் உருவாகியுள்ளதே அது ஒரு செம்மொழி என்பதற்கான சான்று என்றோர் துப்யான்ஸ்கி.
‘ஆரியம் X திராவிடம் என்கிற எதிர்வு ஒரு கற்பனை; ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்களல்லர். ஆரியத்துக்கு முந்திய சுயேச்சையான நாகரிகம் ஒன்று இங்கே கிடையாது. சிந்துவெளி நாகரிகம் என்பது ஆரிய நாகரிகமே’ என்றெல்லாம் இந்துத்துவவாதிகள் சமீப காலங்களில் பரப்பி வந்த கருத்துகளுக்கு செம்மொழி மாநாட்டினூடாக மேலுக்கு வந்த இந்தச் சிந்தனைகள் இறுதி ஆப்பை அடித்துவிட்டன. அமெரிக்காவில் ‘செட்டில்’ ஆகியுள்ள சில இந்துத்துவ மூளைகள் தாம் சிந்துவெளி எழுத்துக்களை வாசித்து விட்டதாகப் பொய்யுரைத்து மாட்டிக் கொண்ட செய்திகள் மிக விரிவாக அன்றே இந்து மற்றும் ஃப்ரண்ட்லைன் முதலான இதழ்களில் வெளியாகின. எனது ‘ஆரியக்கூத்து’ நூலில் மிக விரிவாக இதை எழுதியுள்ளேன். மேலும் ஒரு நிரூபணமாக அஸ்கோபோலா போன்றோரின் செம்மொழி மாநாட்டுக் கருத்துகள் அமைந்துள்ளன.
நல்ல நகைச்சுவை ஒன்றை ரசிக்க விருப்பமுள்ளவர்கள் ரெடிஃப்’ இணையத்தளத்தில் இத்தகைய அமெக்க வாழ் அறிஞர்களில் ஒருவரான எஸ். கல்யாணராமன் என்பவர் செம்மொழி மாநாட்டில் மேலுக்கு வந்துள்ள இச்சிந்தனை குறித்துப் புலம்பியுள்ளதைப் பாருங்கள். அகில இந்தியத் தேசியத்திற்கு இந்தக் கருத்துக்கள் எதிரானவையாம். கல்யாணராமன் போன்றோர் இப்படிச் சொல்கிறார்கள் என்றால் நமது தமிழ்த் தேசியவாதிகள் பர்போலா போன்றோரின் இந்தக் கருத்துக்களை இது தமிழ்த் தேசியத்திற்கு எதிரானது என்று கூறி அவர்களோடு இணைவதற்கு வாய்ப்புண்டு. ஏனெனில் அவர்களும் ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ எனப் புலம்புகிறவர்கள்தானே.
முக்கிய தமிழ் இலக்கியங்கள் பிறமொழிகளில் பெயர்க்கப்படுதல், குறிஞ்சி, முல்லை முதலான ஐந்து நிலங்களை காட்சிப்படுத்தும் பூங்காக்களை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அமைத்தல், கராஷிமா தலைமையில் இன்றுள்ள உலகத் தமிழாராய்ச்சி மன்றத்திற்குப் போட்டியாக மதுரையில் ‘தொல்காப்பியர் செம்மொழித் தமிழ்ச் செம்மொழி மாநாடு' கொண்டாடுதல், குமரிக் கண்டம் தொடர்பான தொல்லியல் ஆய்வுகள் செய்தல், இந்திய தேசிய அளவில் கல்வெட்டியல் நிறுவனம் ஒன்றை அமைத்தல், தமிழ் வளர்ச்சிக்கென ஆண்டு தோறும் 100 கோடி ஒதுக்குதல், முந்தைய சட்டமன்றக் கட்டிடத்தில் ‘செம்மொழித் தமிழாய்வு நூலகம்' அமைத்தல், 16 ‘பிட்’ யுனிகோட் வடிவத்தை கணினித் தமிழுக்கெனத் தரப்படுத்தி ஆணை வெளியிடுதல் முதலானவை மாநாட்டு இறுதியில் அறிவிக்கப்பட்டன. தமிழை ஆட்சி மொழியாக்குதல், நீதிமன்ற மொழியாக்குதல், ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு முதலான தீர்மானங்களும் இயற்றப்பட்டன.இந்த அறிவிப்புகளில் சில வரவேற்கப்பட வேண்டியவைதான். எனினும்,

இளவரசியின் சபையில்
கோமாளி வேஷமிட்டு
கூத்தடித்துக் கும்மாளமிடுகிறது
கலை கலையாய்
கலைஞர் கூட்டம்
அடக்கமாய் அமைதியாய்
மாயச் சாட்டையை
தோளில் துவள விட்டபடி
சாந்தமாய் வீற்றிருக்கிறாள்
பணிவான இளவரசி.
கலைகள் சங்கமிக்கும்
இளவரசியின் ராஜ்ஜியத்தை வியாபித்து
கலை கலையாய்
அலை அலையாய்
வெளியெங்கும் பரவிச் செல்கிறது
வேஷங்களின் துர்நாற்றம்
பெருமிதமாய் சுவாசித்து
அகம் மகிழ்கிறாள் இளவரசி.
தனித்திருந்து என் அறையில் ஆசுவாசமாய் குடித்துக்
கொண்டிருந்தாலும்
காற்றைப் பீடித்திருக்கும்
துர்நாற்றத்தை முகர்ந்தபடிதான்
சுவாசித்திருக்கிறேன் நானும்.


நன்றி: சி. மோகன்
( குமுதம் தீராநதி -  ஆகஸ்ட் 2010)
 
                        

Wednesday, August 18, 2010

மலையக இலக்கியத்தின் செல்நெறியும் தற்காலத்தில் அதன் முக்கியத்துவமும் - லெனின் மதிவானம்


“மலையக இலக்கியம்” எனும் இலக்கியத் தொகுதியானது ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சிப் போக்கின் மிக முக்கியமான கூறாக போற்றப்பட்டு வருகின்றது. இலக்கியத்தில் ஜனநாயக பண்பு வளர வளர இதன் முக்கியத்துவம் சிறப்பாகவே உணரப்பட்டு வெளிக்கொணரப்படுகின்றது. மலையகத்தின் தனித்துவத்தினையும் ஈழத்து தமிழ் இலக்கியத்தின் பொதுமையையும் இணைந்து நிற்கும் தமிழ் இலக்கிய மரபு தோன்றி வளர்ந்துள்ளமையே இதற்கான அடிப்படையாகும்.

மலையக சமூகத்தினை அடிநிலையாகக் கொண்டு தோன்றிய இலக்கியங்களை ஈழத்;து இலக்கியத்துடன், அல்லது முழுத் தமிழ் இலக்கியத்துடன் ஒப்புநோக்கி, அவற்றின் இலக்கியத் தரத்தை மட்டிடுவது இக்கட்டுரையின் நோக்கமல்ல. மலையகத்தில் இத்தகைய இலக்கியங்கள் தோன்றுவதற்குக் காலாக இருந்த சமூக, பண்பாட்டு, வரலாற்று சக்திகளை குறித்துக் காட்டுவதுடன் ஈழத்து தமிழ் இலக்கிய பரிணமிப்பில் இதன் முக்கியத்துவத்தைச் சுட்டி காட்ட முனைவதாகவே இவ்வாய்வு முயற்சி அமையும்.

மேற்குறித்த கருதுகோளின் அடிப்படையில் மலையக இக்கியம் குறித்து எழுத முற்படுகின்ற இவ்வாய்வு அதன் முனைப்புற்ற போக்குகளை மட்டுமே சுட்டி காட்ட முனைவதாக அமைகின்றது. இதனை நிரூபிப்பதற்காக நீண்ட பட்டியல் நீட்ட நான் விரும்பவில்லை. அட்டவணை போட்டு இலக்கியக் கணக்கெடுக்கும் இரசிக விமர்சகர்களுக்கு அப்பணியினை விட்டுவிட்டு ஈழத்து தேசிய இலக்கிய வளர்ச்சி போக்கில் மலையக இலக்கியம் எத்தகைய வளர்ச்சியினைப் பெற்று வந்துள்ளது என்பதனையும் அதற்கு அனுசரணையாக இருந்த இலக்கியங்களையும் எழுத்தாளர்களையும் சுட்டிக் காட்டிச் செல்வது இதன் சாராம்சமாகும். தனிப்பட்ட எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காது குறிப்பிட்ட போக்கினைப் பிரதிநிதித்துவப்படுத்திய எழுத்தாளர்களின் பெயர்களே இங்கு சுட்டிக்காட்டப்படுகின்றது.

இலங்கை தமிழ் இலக்கியத்தில் மலையக இலக்கியம்

இலங்கையை “ஈழம்” எனக் கூறுதல் பழந்தமிழ் இலக்கிய மரபு, தமிழுடனுள்ள பொதுத் தொடர்பையும் அதே வேளையில் தனித்துவத்தையும் நன்கு எடுத்துக் காட்டுவதற்கு இப்பதப் பிரயோகம் பொருத்தமானதாக அமைந்துள்ளது. இதனால் தமிழ் இலக்கிய வளர்ச்சியைக் குறிப்பிடும் போது “இலங்கை” எனும் சொல்லிலும் பார்க்க, “ஈழம்” எனும் சொல்லே பெரும் வழக்காக கையாளப்படுகின்றது. இப்பதப் பிரயோகத்தினை மீட்டெடுத்து சனரஞ்சகப்படுத்தியோர், 1954 முதல் இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் தேசிய பரிணாமத்துக்காக போராடிய முற்போக்கு இலக்கிய இயக்கத்தினரே.”1

ஈழத்து தமிழ் இலக்கிய வரலாற்றினைக் கூர்ந்து நோக்குகின்ற போது, இலங்கையில் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்களின் வாழ்வியலையும் சமூக அடிப்படைகளையும் வெளிப்படுத்துகின்றவையாக அவை அமைந்து காணப்படுகின்றது. இலங்கையில் தமிழை தாய்மொழியாக கொண்டுள்ள மக்கள் குழுமத்தினர் தமது தனித்துவமான சமூக பொருளாதார பண்பாட்டு அம்சங்கள் காரணமாக பலவிதமான தனித்துவப் பண்புகளைக் கொண்டவர்களாக விளங்குகின்றனர். இத்தனித்துவப் பண்புகளை அச்சமூகத்தின் அடியாக தோன்றும் இலக்கியங்கள் பிரதிபலிக்கும் என்பது சமூக யதார்தமாகும்.

பேராசிரியர் கா. சிவதம்பி இத்தகைய தனித்துவமான பண்புகளை ஆதாரமாகக் கொண்டு, ஈழத்தமிழரை பின்வரும் மூன்று பிரிவாக வகைப்படுத்தி காட்டுகின்றார்:

1.இலங்கையில் பாரம்பரியமாக வரலாற்று காலம் முதல் வாழ்ந்துவரும் தமிழ் மக்கள். இவர்கள் இலங்கையில் வடகிழக்கு பிரதேசங்களிலே பெருந்தொகையினராகக் காணப்படுகின்னர்.

2.இலங்கையில் வாழ்ந்துவரும் பாரம்பரிய இஸ்லாமிய மதத்தினர். இவர்கள் வடகிழக்கு, தெற்குப் பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.

3.19ம் நூற்றாண்டின் நடுகூற்றுக் காலப்பிரிவில் பிரித்தானிய ஆட்சியினரால் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு, இலங்கையின் தேயிலை, இறப்பர் பெருந்தோட்டங்களில் வாழ்ந்துவரும் தென்னிந்திய தமிழ் மக்கள். இவர்கள் தம் பாரம்பரிய தென்னிந்திய வாழ்க்கை முறைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வந்தவர்கள் என்றவகையில் இலங்கையரல்லாதவர் எனக் கொள்ளப்பட்டனர். இதனால் அவர்களுள் பெரும்பாலானோரை மீண்டும் தென்னிந்தியாவிற்கு அனுப்பும் முயற்சி மேற் கொள்ளப்பட்டது.

பல்வேறு சமூக அடிப்படைகள் காரணமாக முதலாவது பிரிவினருக்கும், மூன்றாவது பிரிவினருக்குமிடையில் பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன. குறிப்பாக தமிழர் என்ற அடிப்படையில்; சிங்களப் பெருந்தேசியவாதத்தால் கட்டவிழ்த்து விடப்பட்ட இன வன்முறைகள் இவ்விரு பகுதியினரையும் பாதித்தது எனலாம். இப்பாதிப்பு முதலாவது பிரிவினரையே அதிகமாக பாதித்தது என்பதும் இவ்விடத்தில் கவனத்தில் கொள்ளத்தக்கதொன்றாகும். பொருளாதாரம் எனும் அடித்தளமே சமூக அமைப்பினை தீர்மானிப்பதாக உள்ளதால், இவ்விரு பிரிவினரிடையே காணப்பட்ட பொருளாதார அமைப்பு முறையும், அதனடியாக எழுந்த கலாசார, பண்பாட்டு, பாராம்பரியமுமே சமூக வேறுபாடுகளுக்கு அடிப்படையாக அமைந்துள்ளன.

எனவே மலையக இலக்கியம் என்பது தமிழ் இலக்கியத்தின் தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ள அதே சமயம், ஈழத்து தமிழ் இலக்கியத்தின் பிரிக்க முடியாத மிக முக்கிய கூறாகவும் அமைந்து காணப்படுகின்றது. மலையக இலக்கியத்தினை புறக்கணித்தோ அல்லது ஒதுக்கி விட்டோ ஈழத்து தமிழ் இலக்கிய வரலாற்றை எழுத முனைவது பூரணத்துவமுடைய வரலாறு எழுதும் முயற்சியாக அமையாது.

மலையக இலக்கியத்திற்கான பின்புலம்: :

19ம் நூற்றாண்டின் இறுதியிலும், 20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் மேற்கு ஐரோப்பிய காலனித்துவ வாதிகள் மூன்றாம் உலக நாடுகளை தமது காலனித்துவ ஆட்சிக்கு உட்படுத்தியதுடன், அந்நாடுகளி;ல் பெருந்தோட்ட பயிர்ச்செய்கையை அறிமுகப்படுத்தினர். அவ்வாறு அறிமுகம் செய்யப்பட்ட பெருந்தோட்டப் பயிரச்;செய்கையை மேற் கொள்வதற்கு தேவையான தொழிலாளர்களை தமது காலனித்துவ ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடுகளிலிருந்தே கொண்டு வந்தனர். இவ்வடிப்படையில் ஒப்பந்த பிணைப்பு செய்து கொண்டு இங்கு கொண்டுவரப்பட்ட தொழிலளர்களும், அவர்களோடு இணைந்து வந்த வர்க்கமுமே ‘மலையக மக்கள்| என்ற பதம் கொண்டு அழைக்கப்படுகின்றனர்.

தென்னிந்திய தமிழ் கிராமிய பின்னணியில் வாழ்ந்த இம் மக்கள் குழுமத்தினர், ஒரு நிலவுடைமை சமூக அமைப்பின் கீழ் விவசாயிகளாக கட்டுண்டு கிடந்தனர்.அவர்கள் புலம்பெயர்ந்து இலங்கைக்கு வந்த பின்னர் ஒரு முதலாளித்துவ சமூக அமைப்பிலான பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை முறையில் பரந்துபட்ட தொழிலாளி வர்க்கமாக மாற்றப்பட்டனர். இச்சமுதாய அமைப்பு மாற்றம் மிக முக்கியமானதொன்றாகும். இது குறித்து கவிஞர் முத்துவேல் தமது ஆய்வில்,

~~ மலையக சமூக அமைப்பு கலப்பே இல்லாத முதலாளித்துவ சமூக அமைப்பாகவே தோற்றம் பெற்று ஸ்தாபிதமானது. மலையகத்தின் அடிப்படை மக்கள்; (அடிநிலை மக்கள்) இழப்பதற்கென சொத்துடைமை ஏதும் இல்லாத கூலித் தொழிலாளர்களே யாவர். முதலாளித்துவம் தோற்றுவித்த சொற்ப கூலிக்காக உடல் உழைப்பை விற்கும் ‘தொழிலாளர் வர்க்கமாகவே| இப்பிரதேசத்தில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். அவ்வாறு மூலதனக்காரருக்கும உழைப்பை விற்பவர்களான பாட்டாளி வர்க்கத்தினருக்கும் இடையில் நிலவுகின்ற உற்பத்தி உறவே, மலையக சமூகத்து மனித ஊடகத்தின் அடிப்படையாகும். இஃது ஒரு முரண்பாடுடைய உறவு. அதுவும் நேசமுரண்பாடாக அன்றி பகை முரண்பாடாகும். வரலாற்றை பரிணாமம் அடையச் செய்யும் மூலாதார அம்சமான வர்க்கப் போராட்டமானது இப் பகை முரண்பாட்டின் அடிப்படையில் பிறப்பதேயாம்;. இவ்வாறாக மலையக சமூகத்தின் அடிநிலை மக்கள் குறித்து நோக்குகின்ற போது ~~ எங்கிருந்தோ வந்து தயாராக இருந்த பொருளாதார வாய்ப்புகளை அபகரித்துக் கொண்ட மக்கள் அல்ல மலையக மக்கள். இவர்கள் எந்தவொரு நாகரிக சமூகத்தினதும் மூலத்தை போலவே காடுகளை அழித்து வளமாக்கி புதியதோர் பொருளாதார துறையை ஏற்படுத்தியவர்கள். இவர்கள் அமைத்த இந்த மக்களின் வரலாறும் உருவாக்கமும் யாரையும் போலவே இவர்களும் இம்மண்ணின் மக்களே, என்பதை ஆதாரப்படுத்துகின்றன. நமது வரலாறு குறித்த கண்ணோட்டம் நம்மிடையே நம்பிக்கையையும் உறுதியையும் வளர்க்க உதவும்”;

ஒருபுறமான காலனித்துவ ஆதிக்கமும், மறுபுறமான சமூக உருவாக்கமும் இணைந்து தாம் தனித்துவமான தேசிய சிறுபான்மை இனமென்ற உணர்வை உருவாக்கியுள்ளது எனலாம். இன்றுவரை இவர்கள் பல்வேறு விதமான சுரண்டல்களுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் உட்பட்டு வருகின்றனர். ஒரு தேசிய சிறுபான்மை இனத்தின் எழுச்சி பற்றிய கருத்தினை முன் வைக்கும் ஒரு பிற்போக்குவாதியின் பார்வையும், ஓர் மார்க்சியவாதியின் பார்வையும் அடிப்படையில் முரண்பாடுடைய ஒன்றாகும். மலையக தேசிய எழுச்சினை உழைக்கும் மக்கள் சார்பான கண்ணோட்டத்துடன் நோக்குவது (மார்க்ஸிய கண்ணோட்டம்) அதன் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு கால்கோளாக அமையும்.

இவ்விடத்தில் பிறிதொரு விடயம் குறித்தும் கவனம் செலுத்துதல் அவசியமானதாகும். இதுவரை காலமும் மலையக மக்கள் என்ற பதம் பெரும்பாலும் மலையகத் தோட்டத்துறை சார்ந்தவர்களையும் அவர்களோடு இணைந்த மக்கள் குழுமத்தினரையும் குறிப்பதாக அமைந்து காணப்படுகின்றது. அண்மைக் காலத்தில் ஏற்பட்ட முற்போக்கு மார்க்ஸிய சிந்தனை வளர்ச்சியின் விளைவாக ‘மலையகத் தமிழர்’ எனும் கருத்து நிலை பரவலாக்கம் அடைந்துள்ளதை காணலாம். அவ்வகையில் பின்வரும் பகுதியினர் மலையகத் தமிழர் என்ற தேசியத்துடன் இணைக்கப்பட வேண்டியவர்கள்.

1. மலையகத்தை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்டவர்கள் - தோட்டப்புற உற்பத்தியுடன் சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள், உத்தியோகஸ்தர்கள், நகரப்புறவியாபாரிகள் நகர்சார் தொழிலாளர்கள், ரெய்ல்வே தொழிலாளர்கள் போன்றோர்.

2.மலையகத்தை வசிப்பிடமாகக் கொண்ட அதே சமயம் மலையகத்திற்கு வெளியில் வாழ்ந்துக் கொண்டிருப்பவர்கள்.

3.மலையகம் எனும் இனத்துவ அடையாளத்தை கொண்டிருக்கின்ற அதே சமயம் மலையகத்திற்கு திரும்ப முடியாத அல்லது திரும்ப விருப்பம் இல்லாதவர்கள்.

4.மலையகத்திலிருந்து வெளியேறி வடகிழக்கின் எல்லைப் புறங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.

5.தென்பகுதியில் வாழும் மலையக தமிழர்கள். இவர்கள் தங்களை மலையகத் தமிழராக அடையாளம் காட்ட விரும்பாத அதேசமயம், மலையக தலைமைகளும் இவர்களை மலையகத் தமிழராக ஏற்றுக் கொள்வதில்லை. உழைக்கும் மக்கள் தலைமையிலான அமைப்பு இவர்கள் மத்தியில் அரசியல் பண்பாட்டு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து செல்லுமாயின் (அவ்வமைப்பு இனவாத சூழலுக்கு அப்பாற் பட்டதாக இருக்கும் பட்சத்தில்) அம்மக்கள் கவனத்திலெடுக்கப்படுவதுடன், அம்மக்களும் கவனத்தில் கொள்ளப்படுவர்.

6. மலையகத்திற்கு வராத அதே சமயம் மலையக மக்களின் பண்பாட்டு பாராபரியத்தடன் பெரிதும் ஒற்றுமை உடையவர்களாக காணப்படும் மக்கள்.

இம்மக்கள் வடகிழக்கு தமிழரின் பண்பாட்டினை விட மலையக தமிழரின் பண்பாட்டு பாரம்பரியங்களையே தழுவுகின்றவர்களாகவும்;, அவற்றுடன் அதிக ஒற்றுமை கொண்டவர்களாகவும் காணப்படுகின்றனர். இவர்களின் எண்ணிக்கை ஏனைய மக்களோடு ஒப்பிடுகின்றபோது மிகக்குறைவாக காணப்படுகின்றது. இம்மக்களின் சுயநிர்ணய உரிமை, சுரண்டல், ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களை தனித்தனியாக எடுக்க முடியாது. அதே சமயம் அவற்றைப் புறக்கணித்து விடவும் முடியாது. எனவே அவர்களை ”மலையக தமிழர்” என்ற தேசியத்துடன் இணைத்து முன்னெடுப்பதே முற்போக்கானதாகும்.

மலையகம் என்பதை பரந்த அடிப்படையில் நோக்குகின்றபோது மேற்குறிப்பிட்ட மக்கள் பகுதியினரை அடிப்படையாக கொண்டு அமைய வேண்டும் என்ற கருத்து வெளிப்படுகின்றது. மலையக இலக்கியம் பற்றிய ஆய்வும் இத்தகைய பரந்த கண்ணோட்டத்திலேயே முன்னெடுக்கப்பட வேண்டும். இருப்பினும் மலையகம் குறித்த ஆய்வு மிக அண்மைக் காலம்வரை பின்வருவோரையே ஆதாரமாகக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

1.பெருந்தோட்ட உற்பத்தியுடன் தொடர்பு கொண்ட தொழிலாளர்களைப் பற்றியது. இதில் கங்காணிமார்களும் அடங்குவர். அதிலும் தேயிலைத் தோட்ட தொழிளானர்களுக்கு கொடுத்த முக்கியத்துவம் இரப்பர் தோட்டத் துறையோடு சம்பந்தப்பட்ட சமூகத்தினருக்கு வழங்கப்படவில்லை.

2.தோட்டதுறையோடு சம்பந்தப்பட்ட நிர்வாக உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் என்போரைப் பற்றியது@

3.பெருந்தோட்ட துறையை சார்ந்த நகரங்களில் வாழும் வணிகர்களைப் பற்றியது.

மலையக ஆக்க இலக்கியங்களும் ஆய்வுகளும் மேற்குறித்த மக்கள் பகுதியினரைப் பற்றியதாகவே இருந்துள்ளது. மலையக தேசியவாதம் குறித்து மலையக மக்கள் என்ற பதத்தினை சற்று பரந்த கண்ணோட்டத்தில் நோக்கின், இந்நிலை நின்று மலையக இலக்கியத்தினை ஆய்வு செய்வது அறிஞர்களின் கடன். இதன் மூலம் மலையக இலக்கியம் பற்றிய பார்வையை ஆழ அகலப்படுத்திக் கொள்ளலாம்.

மலையக இலக்கியம் பற்றிய ஆய்வின் போது காணப்படுகின்ற சிக்கல்கள்

1.மலையக பிரதேச இலக்கியவாதிகள் பற்றி முழுமையாக விபரப் பட்டியலோ, சுருக்கமான வாழ்க்கை குறிப்புகளோ பூரணத்துவமாக இல்லை.

2. மலையக எழுத்தாளர்களின் படைப்புகளில் அனேகமானவை நூலுரு பெறவில்லை. மூத்த எழுத்தாளர் பலரின் ஆக்கங்கள் கூட இதுவரை நூலுருப் பெறவில்லை.

3. மலையக இலக்கியம் தொடர்பாக சேகரித்து வைத்திருந்த பல ஆக்கங்கள,; ஆய்வுகள் என்பன மலையகத்தில் இடம் பெற்ற இனவன்முறைகளின் போது அழிந்து விட்டன.

4. மலையக கலை இலக்கியம் தொடர்பாக சேகரித்து வைத்துள்ள பத்திரிகை துணுக்குகளைத் தேடிப் பெறுவதில் ஏற்படும் நடைமுறை சிக்கல்கள்.

5. மலையக படைப்புகள், எழுத்தாளர்களின் விபரங்கள் உள்ளிட்ட ஆவண காப்பகம் ஒன்றில்லாமை.

6. மலையகத்திலுள்ள பெரும்பாலான வாசிகசாலைகள் ரமணிச்சந்திரன், பாலகுமாரன் போன்றோர்களின் படைப்புகளினாலேயே நிரப்பப்பட்டுள்ளன. பொதுவாகவே சமூகவியல் நூல்களோ மலையகம் சார்ந்த படைப்புகளோ இங்கு பெற முடியாது உள்ளன.

7. மலையக இலக்கிய வரலாறு பற்றிய பூரணத்துவமான ஆய்வு நூல் ஒன்று இதுவரை காலமும் எழுதப் படவில்லை.

இவ்வாறான பிரச்சினைகள் காரணமாக ஈழத்தின் இலக்கியப் பரப்பில் மலையக இலக்கியத்தை தர நிர்ணயம் செய்வதில் இடரப்;பாடு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மலையக இலக்கியம் குறித்த கனதியான ஆய்வுகள் அவ்வப்போது எழுதப்பட்டுள்ளன என்பதும் இவ்விடத்தில் நினைவு கூரத்தக்கதாகும். முற்போக்கு, மார்க்சிய சிந்தனை நிலைநின்ற இலக்கிய கர்த்தாக்களே இப்பணியினை சீரிய முறையில் செய்து வந்துள்ளனர். அவ்வகையில் இவர்களின் பங்களிப்பு விதந்தோதத்தக்கது.

மலையக இலக்கியமும் அதன் பொதுப் பண்புகளும்

மலையக சமூக அமைப்பில் நிலவும் ஒரு கூட்டு வாழ்க்கை முறையானது, உழைப்புடன் அல்லது உற்பத்தியுடன் தம்மை சம்பந்தப்படுத்திக் கொள்ளும்போது அதன் வெளிப்பாடாக பீறிட்டு எழுகின்ற கலை இலக்கிய உணர்வுகளும் இவ்வம்சத்தினை பிரதிபலிப்பதாகவே அமையும். கூட்டு வாழ்க்கை முறையானது சோகத்தை இசைத்தாலும், அவை கூட சமூக அசைவியக்கத்தை முன்னெடுப்பதாகவே அமையும்.

இவ்வகையில் மலையக இலக்கியத்தினை பின்வரும் அடிப்படை கொண்டு; நோக்குதல் பயன்மிக்கதொன்றாகும். சமூக மாற்ற செயற்பாடுகளில் இலக்கியத்தின் பங்கு முக்கியமான ஒன்றாக இருப்பதோடு சமூகத்தின் அசைவியக்கத்திற்கும், இலக்கியம் வழிகாட்ட வேண்டும். அதனை சாதிப்பதற்கான அணுகுமுறையை, வாழக்கைப் பிரச்சினைகளை தெளிவுப்படுத்துவதாக மட்டுமன்றி அதனை உருவாக்குகின்ற பணியையும் ஆற்றுகின்ற இவ்வம்சம் மலையக இலக்கியத்திற்கும் பொருந்தும்.

மலையக இலக்கிய வரலாற்றை எடுத்து நோக்குகின்றப் போது அவ்விலக்கிய தொகுதி இருவகைப் பட்டோரால் எழுதப்பட்டு வந்துள்ளது. அவை வருமாறு.

1. மலையகத்தை வாழ்விடமாகக் கொண்டவர்கள். அந்த பண்பாட்டிற்குள்ளிருந்து தோற்றம் பெற்று இலக்கியம் படைத்தவர்கள் (மலையக மண்ணை சார்ந்தவர்கள்).

2. மலையகத்தோடு தொடர்பு கொண்ட அதே சமயம் மiலையகத்தை பிறப்பிடமாக கொள்ளாத இலக்கிய கர்த்தாக்கள்.

இதன் முதலாவது பிரிவில், சி. வி. வேலுப்பிள்ளை, கோ. மீனாட்சியம்மாள்,கோகிலம் சுப்பையா, என்.எஸ்.எம். இராமையா, சாரல்நாடன், அந்தனி ஜீவா, மல்லிகை சி. குமார், மரியதாஸ், எம். முத்துவேல், சாந்திகுமார், மாத்தளை வடிவேலன், மலரபன், மாத்தளை சோமு, புசலாவ இஸ்மாலிகா கேகாலை கைலைநாதன், லெனின் மதிவானம், இராகலை பன்னீர், nஐ. சற்குருநாதன் முதலானோரைக் குறிப்பிடலாம்.

இம்மன்ணை சாராத இம்மண்ணுடன் நேசப+ர்வமான உறவினை கொண்டிருந்தவர்களாக யோ. பெனடிக்ற்பாலன், செ. கணேசலிங்கம், நந்தி, புலோலிய+ர் க. சதாசிவம், வ.ஐ.ச. ஜெயபாலன், கே. ஆர். டேவிட், இதயராசன் முதலானோரைக் குறிப்பிடலாம்.

இவ்விரு வகைப்பட்ட எழுத்தாளர்களினாலும் மலையக இலக்கியம் செழுமைப்படுத்தப்பட்டு வந்துள்ளது என்பதில் இருநிலைப்பட்ட கருத்துகளுக்கு இடமில்லை. அதே சமயம், ~~ இந்த இரண்டு எழுத்தாளர்களிடையேயும் சிற்சில வேறுபாடுகள் கண்டு கொள்ளப்பட தக்கனவாய் உள்ளன என எடுத்துக் கூறப்பட்டுள்ளது. மலையகத்தின் வரலாற்றினையும் அதன் அபிவிருத்தி குன்றிய நிலையையும் நோக்கும் போது இத்தகைய நிலை ஒரு வகையில் தவிர்க்க முடியாதது என்று கூட சொல்லலாம்||5 மலையக மக்களின் வாழ்வியலைப் புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் அதனை இலக்கியப் படைப்பாக்கி தருவதிலேயே இவ்வேறுபாடு காணப்படுகின்றது.

மலையக பெருந்தோட்ட பண்பாட்டிற்குள் நின்று அம்மக்கள் பற்றிய இலக்கியம் படைத்தவர்கள் மலையக வாழ்வியலை உள்நின்று சித்திரிக்க முனைவதனைக் காணலாம் (இவ்விடத்தில் மலையகத்தை பிறப்பிடமாகக் கொண்ட அனைத்து எழுத்தாளர்களையும் குறிப்பிட முடியாது). யதார்ந்த நோக்கு, சமூக அசைவியக்கம், வர்க்க முரண்பாடு எனப்வற்றை சித்திரிப்பதில் இவர்களிடையே நுண்ணிய தத்துவார்த்த வேறுபாடுகள் உண்டு என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிட வேண்டியுள்ளது. இது குறித்து பிறிதொரு இடத்தில் நோக்குவோம்.

இந்நிலையில் மலையகத்தை பிறப்பிடமாக கொள்ளாத அதே சமயம், அதனோடு தொடர்பு கொண்ட இலக்கியப் படைப்பாளிகளின் எழுத்துக்களைஆதாரமாக கொண்டு நோக்கும் போது, இம்மக்களின் மீது நேயப+ர்வமாக சிந்தனை கொண்டுள்ள அதே சமயம் மலையக மக்களின் வாழ்வியலைப் புரிந்து கொள்வதில் இடர்ப்படுகின்றனர். உதாரணமாக வடகிழக்கு பகுதிகளை சார்ந்த எழுத்தாளர்களின் படைப்புக்களில் இம்மக்கள் குறித்த கரிசனை இடம் பெறுகின்ற அதே சமயம் நிலவுடமை சார்ந்த ஓர் விவசாய வர்க்கத்திற்குரிய சிந்தனை முறையையே அவர்கள் முன் வைக்க முனைந்துள்ளனர். யோ. பெனடிக்ற்பாலனின் ‘சொந்தக்காரன்| (மார்க்ஸிய நிலை நின்று எழுதிய நாவல் என்ற போதிலும்) திரு. ஞானசேகரனின் ~குருதிமலை| முதலிய நாவல்களில் இப்பண்பு முனைப்பு பெற்றிருப்பதனைக் காணலாம். ஓர் காலகட்ட ஆர்ப்பரிப்பில் உழைக்கும் மக்கள் நலன்சார்ந்த பதாகையை உயர்த்தி பிடித்த கவிஞர்களில் ஒருவரான சுபத்திரன் 1977 ஆம் ஆண்டு டெவன் தோட்டத்தில் நிலப் பறிப்புக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இரையான சிவனு லட்சுமணன் குறித்து இவ்வாறு கவிதை வடித்துள்ளார்.

”சிவனு
எதனைக் கேட்டான்?
அவன் உழைத்த ப+மியிலே
அதற்கு முன்னர்
அவன் பூட்டன் சமாதியிலே

தனக்கும் ஒரு துண்டு
தா என்று கேட்டான்
......

துண்டு நிலம் தான் கேட்டான்
துவக்கால் அடித்து அவனை
தேயிலைக்கு உரமாக்கி
திருப்தி அடைந்தீரே!”7

டெவன் தோட்டத்தில் இடம்பெற்ற போராட்டமானது நிலத்துக்கான போராட்டம் அல்ல. தொழிற்சாலையொன்று மூடப்படுவதால் அத்தொழிற்சாலையில் வேலை செய்கின்ற தொழிலாளர்கள் தாம் பாதிப்படைவதற்கு எதிராக எவ்வாறு கிளர்தெழந்து போராடுவார்களோ அவ்வாறே தான் தமக்கு வாழ்வாதாரமாக திகழ்ந்த உற்பத்தி நிலம் பறிபோவதையிட்டு மலையக மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அவ்வகையில் இப்பிரிவினர்,விவசாய வாழ்முறை சார்ந்து நிலத்தை சொந்தமாக்குவதில் அல்லது நிலத்துக்காக போராடுவதில் காட்டிய அக்கறையை ஒத்ததாக டெவன் போராட்டத்தை காணமுற்படுகின்றனர்:மலையக மக்களின் வாழ்வியலுடனும் உணர்வுடனும் இணைந்திருந்த தனியுடமைக்கு எதிரான போராட்டம் அடிப்படை குணாம்சத்தில் வேறுப்பட்டது என்பதில் அக்கறை செலுத்த தவறி விடுகின்றனர். இதன் காரணமாக இவர்களது பெரும்பாலான படைப்புகளில் யதார்த்த சிதைவு காணபடுகின்றன.

மலையக சமூகத்து யதார்த்தத்தையும் மனித ஊடபட்டத்தையும் புரிந்து கொண்டு ஆய்வு முயற்சிகளை மேற் கொண்டதிலும் அத்தகைய ஆக்க இலக்கியங்கள் வெளிவர துணைநின்றவர்களில் பேராசிரியர்கள் க. கைலாசபதி, கா. சிவதம்பி மற்றும் ந. இரவீந்தின் முதலானோர் குறிப்பிடத்தக்கவர்கள். மலையக சமூகம் குறித்த இவர்களது குறிப்புகளில் இச்சமூக அமைப்பில் நிலவக் கூடிய வர்க்க முரண்பாட்டினை தெளிவாக உணர்ந்திருந்தனர் எனபதை அறிய முடிகின்றது.

மலையக மண்ணை சார்ந்து எழுதிய எழுத்தாளர்களின் படைப்புகளையும், அவர்களின் சிந்தனைத் தெளிவு, பார்வை என்பனவற்றை அடிப்படையாக கொண்டு பின்வரும் இரு பிரிவுகளாக பிரிக்கலாம்.

1.முற்போக்குவாத சிந்தனையின் நிலை நின்று இலக்கியம் படைத்தவர்கள்@
2.மார்க்சிய சித்தாந்த நிலைநின்று இலக்கியம் படைத்தவர்கள்.

இவ்விடத்தில் ”முற்போக்குவாதம்” ”மார்க்சியவாதம்” ஆகிய சிந்தனை தொழிற்பாடுகள் குறித்த தெளிவு அவசியமான தொன்றாகின்றது.

”முற்போக்கு வாதம் பற்றிய ஆய்வு, அது சிந்தனைத் தெளிவு நிலை (மாத்திரமே) என்பதனை நிலைநிறுத்துகின்றது. மார்ஸியத்தை விபரிக்கும் அறிஞர்கள் அதனை அரசியல் நடவடிக்கைக்கான வழிக்காட்டி அல்லது அரசியல் நடவடிக்கைக்கான ஆற்றுப்படை என்பர். மார்க்ஸியத்தை திரிகரண சுத்தியாக ஏற்றுக் கொள்ளும் போது, அவ்வாதத்தினை அடிப்படையாகக் கொண்டு உலகை மாற்றி மனித சமுதாயத்தின் முற்போக்கு பாதையினை உறுதிப்படுத்தும் அரசியல் நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ளுதல் இயல்பாகின்றது. ஆனால் முற்போக்குவாதம் பற்றிய எண்ணத்தொய்வு நிலை அத்தகைய நேரடி நடவடிக்கை நிலையினைச் சுட்டி நிற்பதில்லை. மார்க்ஸியவாதிகள் முற்போக்குவாதிகளே, ஆனால் முற்போக்குவாதிகளோ மார்க்ஸியவாதம் வற்யுறுத்தும் உலகமாற்றத்துக்கான அரசியல் மாற்றத்தினை நேரடி இயக்க முறைகள் மூலம் நிலை நிறுத்தும் இயக்கவாதியாக தொழிற்படுவதில்லை. முற்போக்குவாதம் பற்றிய எண்ணத்துய்ப்பும் செயற்பாடும் ஒருவரை அதனைப் ப+ரணமாக நடைமுறைப்படுத்தும் அரசியல் நடவடிக்கையாளராக மாற்றலாம். ஆனால் முற்போக்குவாத நிலை அந்த நிலையினை குறிக்காது.”8

முதலாவது பிரிவினர் மலையக இலக்கியத்தினை முற்போக்கு உணர்வுடன் நோக்கியதோடு, மண்வாசனை மிக்க படைப்புகளை வெளிக்கொணர்வதில் முக்கியத்துவம் உடையவர்களாக காணப்படுகின்றனர். இப்பிரிவில்சி.வி. வேலுப்பிள்ளை, என்.எஸ்.எம். இராமையா, கோ. மீனாட்சி அம்மாள், சாரல்நாடன், தெளிவத்தை ஜோசப், அத்தனிஜீவா, மல்லிகை சி. குமார், மாத்தளை வடிவேலன், கோகிலம் சுப்பையா, திலகா பழனிவேல் முதலானோரைக் குறிப்பிடலாம். குறிப்பாக மலையக படைப்பிலக்கிய துறையில் சி.வி. வேலுப்பிள்ளை, என் எஸ். எம் இராமையா முதலானோரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். மலையக மக்களது வாழ்வியலும் மக்களி;ன் உணர்வுகளும் ஒன்றாக இணைத்து நேசிக்கப்படுவதை இவ் எழுத்தாளர்களின் படைப்புகளில் காணலாம்.

மலையக சமூகம் குறித்த தீட்சண்யம் மிக்கதும், யதார்த்த ப+ர்வமானதுமான தத்துவார்த்த பார்வையினை கொண்டிராமை காரணமாக அரசியல் கலாசாரம் குறித்த விஞ்ஞான ப+ர்வமான தெளிவற்றோராய் காணப்பட்டமை இவ்வணியினரின் பலவீனமாகும்.

இவ்விடத்தில் தான் இரண்டாவது பிரிவினர் முக்கியத்துவம் உடையவர்களாக காணப்படுகின்றனர். மார்க்ஸியத்தின் உள்ளடக்க கூறுகள் பற்றி லெனின் கூறியதை இவர்கள் ஏற்றுக் கொள்கின்றார்கள் என்பதில் ஐயமில்லை:

” வரலாற்று பொருள் முதல் வாதம் என்ற தத்துவம் காட்டுவதென்ன? உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியின் விளைவாக ஒரு சமுதாய அமைப்பு முறையிலிருந்து இதைவிட உயர்தரமான சமுதாய அமைப்பு முறை எப்படி வளர்கின்றதென்பதை அது காட்டுகின்றது. இயற்கை என்பது வளர்ச்சி பெற்று கொண்டே இருக்கும். பருப்பொருள் என்பது மனிதனுக்கு அப்பால் சுயமாக இருந்து பிரதிபலிக்கின்றது. அதே போலதான் மனிதனின் சமுதாய அறிவு எனப்படுவதும் (அதாவது தத்துவவியல், மதம், அரசியல் முதலானவை சம்பந்தமாக மனிதன் கொண்டிருக்கும் பல்வேறு கருத்துக்களும், போதனைகளும்) சமுதாயத்தின் பொருளாதார அமைப்பு முறையை பிரதிபலிக்கின்றது. அரசியல் ஏற்பாடுகள் என்பவையெல்லாம் பொருளாதார அஸ்திவாரத்தின்மீது நிறுவப்பட்ட மேல் கட்டுமானமேயாகும.”9

இவ்வாறானதொரு நிலைப்பாட்டினை ஏற்றுக்கொண்டு அவற்றினை மாறிவருகின்ற மலையக சூழலுக்கு ஏற்ற வகையில் பிரயோகிப்பவர்களாக இப்பிரிவினர் காணப்படுகின்றனர். இப்பிரிவில் பி. மரியதாஸ், எம்.முத்துவேல், எல். சாந்திகுமார் (இன்று இந்நிலைப்பாட்டுக்கு எதிரானவராக சிதைந்துவிட்டார்), கேகாலை கையிலைநாதன் போன்றோருடன் இதன் அடுத்தகட்ட பரிணாமத்தை 90களின் ஆரம்பத்தில் எழுத தொடங்கிய இளம் தளிர்களான லெனின் மதிவானம், ஜே சற்குருநாதன், இரா. ஜே. ட்ரொஸ்கி, இராகலை பன்னீர் முதலானோரை குறிப்பிடலாம். இவர்களிடையே சிற்சில நுண்ணிய தத்துவார்த்த வேறுபாடுகள் காணப்படினும் பொதுவுடமை கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டு அதன் வழி இலக்கியம் படைப்பதில் முனைப்பு கொண்டவர்களாக காணப்படுகி;ன்றனர்.

மலையக இலக்கியம் என்பது ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை பெரும்பான்மையாக கொண்ட சமூகத்திலிருந்து முகிழ்ந்த இலக்கியமாகக் காணப்படுகின்றமையினால், பட்டாளி வர்க்கம் சார்ந்த தத்துவச்சிந்தனைகள் வேகமாகவும், ஆழமாகவும் மலையக புத்தி ஜீவிகளின் சிந்தனையில் செல்வாக்கு செலுத்தியுள்ளது எனலாம். இதன் காரணமாகத்தான் உழைக்கும் மக்களின் நலனுக்கு எதிராக தோற்றம் பெற்ற தூய அழகியல் கோட்பாடு, அமைப்பியல் வாதம், பின் நவீனத்துவம், இருத்தலியம் முதலிய கோட்பாட்டுச் சாம்பார் குவியல்கள் மலையகத்தில் வேரூன்ற முடியாமல் போயின. இது தற்செயல் நிகழ்வல்ல.

மலையக மக்களின் கலாசார பண்பாடுகளில் ஒன்றாக சாதியமுறை விளங்குகின்றது. தென்னிந்திய நிலப் பிரபுத்துவ சமூக அமைப்பில் இச் சாதியமுறை தோற்றம் பெற்று பாதுகாக்கப்பட்டு வந்திருப்பினும், இலங்கை பெருந்தோட்டங்களில் ஒரு முதலாளித்துவ உற்பத்தி முறையிலும் அது தொடரக்கூடியதாக இருந்தது (நிப்பிரபுத்துவத்தின் உடைவிலிருந்துதான் முதலாளித்துவம் தோற்றம் பெற்று இருப்பினும் அது இறந்துக் கொண்டிருக்கின்ற நிலப் பிரபுத்துவத்திலிருந்து தனக்கு சாதகமான அம்சங்களை உள்வாங்கிக் கொள்ளும்).

சாதியமுறை பொருளாதாரத்தி;ல் தாக்கம் செலுத்தாத ஒன்றாக இருப்பினும் அது மக்களின் சமயச் சடங்குகளில் பெரும் தாக்கத்திற்குரிய ஒன்றாக இருந்து வந்துள்ளது. லயன்கள் சாதியத்தை அடிப்படையாகக் கொண்டு இருந்தததையும் (இன்னும் சில தோட்டங்களில் இந்நிலைமை தொடர்ந்திருக்கிறது), குடும்பமட்ட வழிபாடு சாதியத்தை அடிப்படையாகக் கொண்டு இருந்ததையும் காணலாம். இதை மேலும் வலுப்படுத்த பிரிட்டிஷார் போட்டி தெய்வ வழிபாடுகளை ஊக்குவித்தனர்.

மறுபுறமாக மலையக ~~ சாதியமைப்பு முறையிலான இறுக்கமான முரண்பாடுகள் தளர்ச்சி கண்டு, மனிதநேய உறவுகள் நிலைபேறடைவதற்கு மூலமாயமைந்தது காலனித்தும் தொடக்கி வைத்த முதலாளித்துவ வர்க்க அடிப்படையிலான உறவேயன்றி வேறல்ல. லயத்தில் வாழ்ந்த யாவரும் (பெரிய கங்காணிமாரைத் தவிர) கூலித் தொழிலாளர்களானதால், முகாமைத்துவ வர்க்கத்தினரதும்(ஆயயெபநசயைட ஊடயளள) பார்வையில் தரங்குறைந்தவர்களாகவே பட்டனர். தொழிலாளர் யாவருக்கும் உழைப்பை விற்பதற்கான கூலியின் அளவு ஒன்றே. இவ்வாறு காலனித்துவ அமைப்பினடிடயில் சேவை செய்தோரான அதிகாரித்துவ, முகாமைத்துவ, சிறு முதலாளித்துவ வர்க்க்த்தினர் தொழிலாளரை ஒரு சேர நோக்கிய பொது நோக்கும், அணுகலும், நடத்துகையுமான யாவும், சாதி வேறுபாட்டுணர்வையும், அதன் செயன் முறைகளையும் மாறுபடுத்தின. தொழிலாளர்கள் முகங்கொடுக்க வேண்டிய பிரச்சினைகளனைத்தும் ஒரே மையத்தையே அடி நிலையாகக் கொண்டிருந்தன.||9

இவ்வாறாக மலையக சமூக அமைப்பு குறித்து நோக்குகி;ன்ற போது, இங்கு வர்க்க முரண்பாடே பிரதான முரண்பாடாக அமைந்து காணப்படுவதை உணரலாம். இப்பின்னணியில் நோக்குகின்றபோது மலையத்தில் ~~ தலித் இலக்கியம் எனும் ஓர் இலக்கிய வகை தோன்றாமல் இருப்பது தர்க்க ரீதியான ஒன்றே. இன்றைய முதலாளித்துவ சமூக அமைப்பானது மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தியுள்ளதுடன் அவை இயற்கையானது எனக் கற்பிதம் செய்து மனிதர்கள் இடையே போட்டியை வளர்த்து, ஒருவரை ஒருவர் முந்தி செல்வதற்கு எதையும் செய்துக் கொள்ளலாம் என்ற நிலையினை தோற்றுவித்துள்ளது. இப்பின்னணியில் மனித குலத்தின் சுபீட்சத்திற்கான வர்க்க போராட்டத்தை சிதைப்பதற்காக பால், சாதி, இன, மத ரீதியான ஒடுக்கல்களை தீவிரப்படுத்தியுள்ளது.

மலையகத்தில் எழுச்சி பெற்று வரும் புதிய மத்திய தர வர்க்கம் சாதியை கருவியாகக் கொண்டு தமது நலனை காக்கத் தொடங்கியுள்ளது. மலையகத்தினுள் சாதிய முரண்பாட்டினை பிரதான முரண்பாடாக காட்டி அம்மக்களின் வர்;க்க போராட்டத்தை சிதைக்கும் முயற்சிகளை சமூக சேவை நிறுவனங்களும், சில அரசியல் கட்சிகளும் மேற் கொண்டு வருகின்றன. இது சார்ந்த கலை இலக்கியப் படைப்புகளும் நாடகங்களும் எழுதப்பட்டு மக்கள் மத்தியிலே பரப்பப்பட்டு வருவதை காணலாம்.

மலையக பெண்களின் நிலைகுறித்து சிந்திக்க தலைப்படுகின்ற பொழுது இனம், மதம், மொழி, வர்க்க அடிப்படையிலான ஒடுக்கு முறைகளுக்கு உட்பட்டு வந்துள்ளமையையும் ஃ வருகின்றமையையும் உணரலாம். குறிப்பாக மத்தியதர வர்க்கப் பெண்கள் வர்க்க அடிப்படையிலான (தொழிலாளி என்ற அடிப்படையில்) ஒடுக்குதலுக்கு உட்படவி;ல்லையெனினும், ஏனைய ஒடுக்குமுறைகள் அவர்களைப் பாதித்துள்ளன. குறிப்பாக பெருந்தோட்ட துறை சார்ந்த உற்பத்தியுடன் கூடிய உழைக்கும் பெண்கள் இதுவரைக் காலமும் உழைப்பு சுரண்டல், நிர்வாக அடக்குமுறைகள், பாலியல் பலாத்காரம், குடும்ப ரீதியிலான அடக்குமுறைகள் என்பவற்றுக்குட்பட்டே வந்துள்ளனர். புதுமைப்பித்தனின் துன்பக் கேணியிலிருந்து நமது யுகத்து கவிஞர்களில் ஒருவரான சந்திரலேகா கிங்ஸிலி வரையில் இப்பெண்களை இவ் எழுத்தாளர்கள் தத்தம் நிலைப்பாடுகளுக்கேற்ப வௌ;வேறு தளங்கலிருந்து நோக்கியுள்ளனர். ஏனைய பிரதேசம் சார்ந்த இலக்கியங்களோடு ஒப்பிட்டு நோக்குகின்ற போது மலையகத்தின் பெண் விடுதலை என்பது சமூக விடுதலையுடன் இணைந்த ஒன்றாகக் காணப்படுவது மலையக இலக்கிய செல் நெறியின் முக்கியமானதோர் பண்பாகும்.

நவீன இலக்கிய செற்பாடுகள், அபிவிருத்தி என்ற பெயரில் மக்கள் மத்தியில் வேர்கொண்டு கிளைப்பரப்புகின்ற என். ஜி. ஓக்கள் எனும் பண்டு நிறுவனங்கள் தொண்டு நிறுவங்களாக மக்கள் மத்தியில் வலம் வருகின்றன. இலங்கையை பொறுத்தவரையில் வேறு எந்தப் பகுதியிலும் காணமுடியாதளவு என்.ஜி. ஓக்களை மலையகத்தில் காணலாம். பலம் பொருந்திய தொழிலாள வர்க்கம் மலையகத்தில் இருப்பதாலும், அதனை சிதைக்க வேண்டிய தேவை எசமான வர்க்கத்திற்கு இருப்பதாலுமே இத்தகைய ஏகாதிபத்திய பண்பாட்டு நிறுவனங்கள் இப்பணியினை மேற்கொண்டு வருகின்றன. கலை இலக்கியம் தொடர்பில் பல செயலமர்வுகளையும் வெளியீடுகளையும் செய்து வருகின்ற இவர்கள் மக்கள் போராட்டதிற்கு தயாராகாத நிலையில் மக்களை போராட்டத்திற்கு நிர்ப்பந்தித்து படுதோல்வி காணச் செய்வதும், மக்கள் பலமாக இருக்கும் போது அவர்களை பின் வாங்கச் செய்வதும், மக்கள் போராட்டத்தில் ஐக்கியப் பட வேண்டிய சக்திகளையெல்லாம் பகையாக்கி மக்கள் போராட்டத்தை தனிமைப்படுத்துவதும் இந்நிறுவனங்களின் தந்திரோபாயங்களில் இடம்பெறுவன. சிதைந்து சின்னாபின்மான சிவப்புச் சட்டைக்காரர்களும்( மார்கசி;ஸ்ட் அல்ல, கட்சியில் புலமை பரிசில் பெறுவதற்காக கோசங்களை உச்சரித்தவர்கள்) இந்நிறுவனங்களில் அடைக்களம் தேடி மலையகத்தில் வளர்ச்சி பெற்று வருகின்ற நேச சக்திகளை மனநோயாளர்கள் எனக் கவிதை என்ற பெயரில் வசைகளை பாடிவருவது தற்செயல் நிகழ்ச்சி அல்ல. இவர்களே இன்று இந்நிறுவனங்களுக்கு சிவப்பு சாயத்தைப் பூசி வருகின்றனர். இந்த போக்கை தமது இலக்கிய செயற்பாடுகள் படைப்புகளினூடாக செய்துவருகின்றனர். இது தொடர்பில் நாம் தெளிவு பெற வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தும் சி. சிவசேகரத்தின் பின்வரும் கூற்று முக்கியமாதாகும்:

“நவீன ஆய்வுப் பார்வைகள் என்ற பசாங்குகள் ஒரு புறம் இருக்க என். ஜி.ஓ எனப்படும் தன்னார்வக் குழுக்களின் மூலமாக மக்களைத் திசைதிருப்பியும் ஆய்வறிவாளர்களை விலைக்கு வாங்கியும் சுயமுயற்சி மீதான நம்பிக்கையைச் சிதறடித்தும் பல காரியங்கள் நடக்கின்றன. மக்கள் கலை இலக்கிய வடிவங்களின் புரவலர்களாக இந்த என். ஜி. ஓ நிறுவனங்கள் பல உலா வருகின்றன. இவர்களது நிதி உதவி இல்லாமல் மக்கள் சார்பாக எதையுமே செய்ய இயலாத ஒரு நிலையை அவர்கள் வேண்டுகிறார்கள். இது பன்னாட்டு நிறுவனங்கள் மேற்கொள்கிற உலகமயமாக்கலின் தந்திரோபாயங்களில் ஒரு பகுதியாகும்.

….

“எசமானர்கள் தமது வர்க்க சுபாவத்திற்கேற்ப செயற்படுகிறது பற்றி அவர்களிடம் நாம் முறைப்பட இடமில்லை. அவர்களது நடத்தையை மாற்றும் படி நாம் கேட்பது ஒரு வர்க்கம் என்ற முறையில் தற்கொலை செய்யுமாறு அவர்களைக் கேட்பது போன்றது. நம்முன்னுள்ள தேவை ஏதெனில் அவர்கள் எதிர்ப்பின் குரல்களை மறிக்கவும், மங்கவைக்கவும், திரிக்கவும், களவாடித் தமதாக்கவும் செய்கிற முயற்சிகளுக்கு எதிராக நாம் என்ன செய்யலாம் என்பதை அறிவதும் அதனை நடைமுறைப்படுத்துவதுமாகும்.” மலையக கலை இலக்கியம் தெடர்பில் நிதானித்த பார்வையுடன் செயற்பட வேண்டியுள்ளது.”9a

மலையக இலக்கியத்தின் ஊற்றுகள்

பிரித்தானிய குடியேற்றவாத நடவடிக்கையாக பல இலட்ச கணக்கான தென்னிந்திய தொழிலாளார்கள் கடல் கடந்து பல நாடுகளுக்குகூலி அடிமைகளாக கொண்;டு செல்லப்பட்டனர். இந்த துயரகரமான நிலையினை எண்ணி குமுறிய கவிஞர்களில் பாரதி முதன்மையானவர். ~~தமிழ் சாதி|| என்ற தலைப்பிலே அம்மனிதர்களின் நிலை குறித்து அவர் விசாரிக்கத் தவறவில்லை.

“ஆபிரிக ;கத்துக் காப்பிரி நாட்டிலும்
தென்முனை யடுத்த தீவுகள் பலவினும்
ப+மிப் பந்தின் கீழ்ப்புறத் துள்ள
பற்பல தீவினும் பரவியிவ் வெளிய
தமிழ்ச் சாதி தடியடி யுண்டும்
காலுதை யுண்டும் கயிற்றடி யுண்டும்
வருந்திடுஞ் செய்தியும் மாய்த்திடுஞ் செய்தியும்
பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது
செத்திடுஞ் செய்தியும் பசியாற் சாதலும்
பிணிகளாற் சாதலும் பெருந்தொகை யுள்ளதம்
நாட்டினைப் பிரிந்த நலிவினாற் சாதலும்......”

இவ்வாறு கடல்கடந்து சென்ற இந்திய தொழிலாளர் பற்றி ஆர்ப்பரித்த பாரதி பிஜித்தீவுகளிலே கரும்பு தோட்டங்களில் தென்னிந்திய தொழிலாள பெண்கள் படும் அவஸ்தையும் துன்பங்களும் குறி;த்த கவிஞர்களின் எண்ண ஓட்டம் பின்வருமாறு பிரவாகம் கொள்கின்றது.

“ .......................... அவர்
விம்மி யழுவுந் திறங்கெட்டுப் போயினர்
நெஞ்சம் குமுறுகிறார்- கற்பு
நீங்கிடச் செய்யும் கொடுமையிலே அந்தப்
பஞ்சை மகளிரெல்லாம் - துன்பப்
பட்டு மடிந்து மடிந்து மடிந்தொரு
தஞ்சமு மில்லாதே - அவர்
சாகும் வழக்கத்தை இந்தக் கணத்தினில்
மிஞ்சி விடலாமோ? ஹே…!
வீரகாளீ சாமுண்டி காளீ “

பாரதியை தொடர்ந்து இம்மக்ள் பற்றி எழுதியவர்களில் புதுமைப்பித்தன் குறிப்பிடத்தக்கவர். இவரது ~~ துன்பக்கேணி|| என்ற கதை மலையக மக்களைப் பற்றியது. தென்னிந்திய தமிழ்க்கிராம பின்னணியி;ல் அவர்கள் அனுபவித்த வறுமை, சுரண்டல் ஒடுக்குமுறைகள் என்பன பற்றியும் இலங்கையின் பெருந்தோட்டப் பகுதிகளில் அவர்கள் அனுபவித்த துயரங்களையும் எமக்கு படம் பிடித்து காட்டுவதாயுள்ளது.

கதையினை சற்று ஆழமாக நோக்குகின்ற போது மலையக வாழ்வியலில் இருந்து அந்நியப் பட்டத்தன்மையினையும், பல இடங்களிலான யதார்த்த சிதைவினையும் கொண்டதாகக் காணமுடிகிறது. இதில் மாருதி முதல் வெள்ளச்சிவரை தொழிலாளர் வர்க்கத்தை சேர்ந்த பாத்திரங்கள் படைக்கப்பட்டதெனினும், அவை ஒரு மத்தியதர வர்க்கத்துக்குரிய பார்வையிலேயே சித்திரிக்கப்பட்டுள்ளன. தொழிலாளரை நோக்கிய நையாண்டி பான்மையையும் காணமுடிகின்றது. மாருதியின் மகளான மரகதத்தை ஸ்டோர் மனேஜர் மரத்தில் கட்டிவைத்து கற்பழிக்க முனைதல், ஆசிரியர் தாமோதரம் திடீரெனத் தோன்றி காப்பாற்றுதல் என்பன யதார்த்த சிதைவிற்கு தக்க எடுத்துக் காட்டுகளாகும். பெரும்பாலும் இக்கதையில் இம்மக்களின் அடக்கு முறைகளுக்கு எதிரான போராட்டமானது வர்க்கங்களைக் கடந்த மனிதாபிமானமாக சித்திரிக்க முனைந்துள்ளமை வெளிப்படையாகவே தெரிகின்றது.

இவ்வாறாக இப்படைப்புகளை, நோக்குகின்ற போது மலையக மக்களின் சமூக உருவாக்கத்தையும், சமூக அசைவியக்கத்தையும் அடியாக கொண்டு பிறந்தவைகள் அல்ல. அம்மக்களைப் பற்றி இலக்கியங்களாகவே அவை அமைந்து காணப்படுகின்றன என்பது தெளிவாகும்.

இம்மக்கள் பிறந்த மண்ணை துறந்து புகுந்த மண்ணிலே புது வாழ்வு தேடிவந்தபோது தமது கலாசார, பண்பாட்டு பாரம்பரியங்களையும் சுமந்து வருகின்றவர்களாகவே காணப்பட்டனர். அவ்வகையில் அவர்களது ஆரம்பகால கலை இலக்கிய வெளிப்பாடுகளாக கதைப்பாடல்கள், நாட்டார் கதைகள், நாட்டார் பாடல்கள் என்பவையே அமைந்து காணப்படுகின்றன. இம்மக்களிடையே காணப்பட்ட இலக்கியங்களான இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்ளும் ஆயிரம் தலைவாங்கிய அப+ர்வ சிந்தாமணி, இராஜாதேசிங்கு, அல்லி அரசாணி மாலை, நளமகாராஜன் , அரிச்சந்திரன் வனவாசம், மதுரைவீரன், கட்டபொம்மன், நல்லதங்காள், விக்கிரமாதித்தன் முதலிய கதைகளும,; மதுரைவீரன், அரிச்சுனன் தவசு, பொன்னர் சங்கர், காமன் கூத்து முதலிய கூத்துகளும் அவை சார்ந்த பாடல்களும், இவை தவிர்ந்த தாலாட்டு, ஒப்பாரி, மாரியம்மன் தாலாட்டு போன்றவையும் அமைந்து காணப்படுகின்றன.

ஆரம்ப காலங்களில் மலையகத்தில் வசதி படைத்தவர்களின் வீடுகளுக்கு (பெரிய கங்காணி, செல்வந்தர்கள்) தமிழகத்திலிருந்து சில யாத்திரிகர்கள், கவிஞர்கள், புலவர்கள் வந்துபாடி பரிசு பெற்றும் சென்றுள்ளனர். இவை குறித்து காலஞ்சென்ற கவிமணி சி. வி. வேலுப்பிள்ளை பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ~~ இவர்கள் ஒவ்வொருவரும் ஒரு தனிப்பட்ட துறையில் பாண்டித்தியம் பெற்றவர்கள். பாரதம், இராமாயணம் பாடும் புலவர், திருப்புகழ் கவிராயர், காவடிச் சிந்துப்பாடகர், தியாகராஜர் கீர்த்தனங்களை இசைக்கும் சங்கீத வித்துவான்கள் ஆகியோர் தமது யாத்திரைக் காலங்களில் பெரிய வீடுகளுக்குச் சென்று பாடி சன்மானம் பெற்றுப் போவதுண்டு. இவர்கள் வருகை இலக்கிய உணர்வை வளர்த்தது. அந்த காலத்தில் சினிமா இல்லை. மலைநாட்டில் சில முக்கிய பட்டினங்களில் நாடகங்கள் நடந்தன. லங்கா தகனம், இராமாயணம், சத்தியவான் சாவித்திரி ஆகிய நாடகங்கள் பிரசித்தி பெற்றவை.”12

இவ்வாறான சூழலில் மக்கள் குழுமியிருந்து அப்பாடல்களை இரசிப்பது இயல்பான ஒன்றாகும். இதன் காரணமாக தென்னிந்தியத் தமிழ் கிராம பின்னணியை சார்ந்த நாட்டார் கதைப்பாடல்களின் தாக்கம் தொடர்ந்தும் இடம் பெற்றது. இவை தவிர இம்மக்களின் மத வழிபாட்டு நிகழ்வுகளின் போதும் ஏனைய சமுதாயம் சார்ந்த சடங்குகளின் போதும் இப்பாடல்கள் பாடப்பெற்று அவற்றில் இன்பம் காண்டனர்.

இப்பாடல்கள், கதைகளில் மலையக மக்களின் வாழ்வு பிரதிபலிக்கப்படவில்லை என்ற போதிலும், அவற்றில் இழையோடியுள்ள சில மீறல்களும், அடக்கு முறைகளுக்கு எதிரான போர்க் குணமும் இம்மக்களின் வாழ்க்கை முறையுடன் இணைந்து காணப்பட்டமையினால், இம்மக்களை வெகுவாக கவர்ந்து செல்வாக்குப் பெறத் தொடங்கின. ஆடப்பெற்ற கூத்துகள் கூட பக்தி உணர்வுடன் ஆடப்பட்டிருப்பினும் அவற்றில் இடம்பெற்ற மீறலுக்குரிய பாத்திரங்கள் இம்மக்களைக் கவர்ந்து காணப்படுகின்றன. காமன்கூத்தில் மன்மதன் பாத்திரம் இம்மக்களை பெருமளவு கவர்வதற்கு மேற்குறித்த அடிப்படையே காரணமாகும்.

பண்டைய இலக்கியங்களில் காணப்படுகின்ற மீறல் உணர்வுகளும,; போர்க் குணமிக்க பாத்திரங்களுமே இம் மக்களை கவர்கின்றதென்பதை தமிழக ஆய்வாளர் முனைவர் கோ. கேசவன் பின்வருமாறு எடுத்துக் காட்டுகின்றார். ~~ அங்கீகரிக்கப்பட்ட செவ்வியல் கலை இலக்கியங்கள் ஆளும் வர்க்க கண்ணோட்டத்தில் படைக்கப்பட்டுள்ளன என்பது உண்மை. ஆனால் இவற்றிலும் கூட உள்ளார்ந்த முறையில் ஒரு வித மீறல் உணர்வுகளை மங்கலான கோடுகளாக நாம் சந்திக்க இயலும். இவற்றில் மனித முன்னேற்றத்திற்கான பொது ஒழுக்க மதிப்புகளை சற்று தூக்கலாகவே காண இயலும். சிலப்பதிகாரம் பெண்ணடிமையை வழியுறுத்தும் ஒரு காப்பியம் எனினும், ஆணின் செயற்பாடுகளை எதிர்த்த ஒரு பரத்தையர் குல பெண்ணின் குரல் அதில் ஒலிக்கப்படுகின்றது. இவையெல்லாம் வெறும் இலக்கியப் பதிவுகள்; அல்ல. அந்த காலத்தில் அடக்கி வாசிக்கப்பட்ட எதிர்ப்பு குரல்கள். இப்படி ஒரு எதிர் மரபு நீரோடையை அங்கீகரிக்கப்பட்ட இலக்கியப் பாரம்பரியத்திலிருந்தும் எடுத்து தொகுத்து கொள்ளலாம்.||13

தமிழக பாமர மக்களிடையே கலை இலக்கியங்கள் தொடர்பிலான கேசவனின் கூற்று மலையக மக்களிடையே பரவி இருக்கின்ற கலை இலக்கிய பாரம்பரியத்துக்கும் பொருந்தும். இருப்பினும் அவை மலையக வாழ்நிலையின் உற்பத்தி உறவுகளுக்கு ஏற்ப மாற்றமடைந்து அவ்வாழ்கை பின்னணியிலிருந்து இவ்விலக்கியங்களைப் பார்க்கின்ற பண்பு இவர்களிடையே காணப்படுகின்றது. உதாரணமாக தமிழகத்தில் இக்கதை மரபுகள், காப்பியங்கள் பெரும்பாலும் சாதிய ஆதிக்கத்திற்கு எதிரான உணர்வினைக் கொண்டு நோக்கப்படுகின்ற அதே சந்தர்ப்பத்தில், மலையகத்தில் இவ்விலக்கியங்கள் ஒரு வர்க்க முரண்பாட்டின் அடிப்படையிலேயே பார்க்கப்படுகிறது. இங்கு சாதிய முரண்பாடு என்பது ஒரு காலாசார முரண்பாடாகவே இருக்கின்றதென்பதை கவனத்திற் கொள்ளல் அவசியமாகும்.

பொதுவாக இப்பாரம்பரிய இலக்கியங்களில், தம் வாழ்க்கையோடு கூடிய உணர்வுகளை அவற்றில் கண்டமையினாலேயே அவை இம்மக்களிடையே வேர் கொண்டு கிளைபரப்பியது எனலாம். சமூகவியல் அடிப்படையில் இம்க்களிடையே செல்வாக்கு பெற்றுள்ள இவ்விலக்கியங்களை நோக்குகின்ற போது சமூகத்தின் மேலாதிக்க சக்திகளுக்கும், அவற்றின் எதிர் சக்திகளுக்கும் இடையிலான மோதலாகவே அமைந்து காணப்படுகின்றன. இது உற்பத்தி உறவில் ஏற்பட்ட முரண்பாடாகும். உற்பத்தி உறவுகள் மாறாதிருக்கும் வரை இம்முரண்பாடுகள் காரணமாக இவ்விலக்கியங்களும் அவற்றில் இம்மக்கள் நேசிக்கின்ற பாத்திரங்களும் இருந்தே தீரும். மலையக சமூக உணர்வுகளை (நமது காலத்துப் பிரச்சினைகள்) நமது பண்பாட்டு சூழலில் காணப்படும் படிமங்கள், புராணக் கதைகள் என்பவற்றின் துணைகொண்டு, இலக்கியமாக்கும் முயற்சிகளில் மலையக எழுத்தாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர். மல்லிகை சி. குமாரின் “மாடும் வீடும்” (1995) என்ற கவிதை தொகுப்பு இதற்கு தக்க எடுத்துக்காட்டாகும்.

மலையக நாட்டார் பாடல்கள்

“கிராமிய பாடல்களை இயற்றியோர் மிகக் கடினமான வாழ்க்கை நடாத்தினர். அவர்கள் வருந்திச் செய்த வெறுப்பூட்டுகின்ற, மட்டு மீறிய உழைப்புக்குக் கூட அர்த்தம் எதுவும் இல்லாத வகையில் மேலிருந்தோர் ஈவிரக்கமற்ற முறையில் காணப்பட்டனர். தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவர்கள் எத்தகைய உரிமையோ பாதுகாப்போ அற்றவராய் அல்லலுற்றனர். அவ்வாறாயிருந்தும் அம்மக்கள் உருவாக்கிய கிராமியப் பாடல்களில் சோர்வு வாதமோ, துன்ப இயற்கைக் கோட்பாடுகளோ எள்ளளவும் தலை காட்டுவதில்லை. அது மட்டுமன்றி ஒட்டு மொத்தமாக நோக்கும் பொழுது அம்மக்களிடையே தமது நித்தியத்துவத்தைப் பற்றிய உணர்வும் இறுதியில் தமது எதிர்ச்சக்திகள் வெல்லப்படும் என்ற மனஉறுதியும் ஆழமாகப் பதிந்திருக்கக் காணலாம்”.14

மலையக மண்ணிலே செல்வாக்கு செலுத்திய நாட்டார் கதைப்பாடல்கள் கூத்துப்பாடல்கள் என்பன எத்தகைப் பின்னணியில் இம்மக்களிடையே செல்வாக்கு செலுத்தின என்பதனை முன்னர் நோக்கினோம். மலையக நாட்டார் பாடல்கள் என்று கூறும் போது அது இம்மக்களின் சமூக உருவாக்கத்துடனும், வாழ்வியலுடனும் நேரடியான தொடர்பு கொண்ட உணர்வுகளை அப்படியே சித்திரித்துக் காட்டும் பாடல்களாக அமைத்துக் காணப்படுகின்றன.

மலையக நாட்டார் பாடல்களின் தாயகமாக தென்னிந்தியா இருந்த போதினும் அவை மலையக சூழ்நிலைக்கேற்றவகையில் புதிய வடிவம் பெற்று விளங்குவதைக் காணலாம். எடுத்துக்காட்டாக பின்வரும் பாடல்களை ஒப்பு நோக்கலாம்.

ஏத்தமடி தேவிகுளம்
எறக்கமடி மூணாறு
தூரமடி நைனக்காடு
தொயந்துவாடி நடந்து போவோம்..14அ

இப்பாடலில் இடம்பெறுகின்ற தேவிகுளம், மூணாறு, நைனக்காடு ஆகியன தென்னிந்தியாவில் காணப்பட்ட ஊர் பெயர்களாகும். இப்பாடல் மகையக சூழலில் இவ்வாறு பரிமாணம் அடைந்துக் காணப்படுகின்றது.

ஏத்தமடி பெத்துராசி
ஏறக்கமடி ராசாத்தோட்டம்
தூரமடி தொப்பித் தோட்டம்
தொடந்து வாடி நடந்து போவோம்… 14ஆ

இப்பாடலில் இடம்பெறுகின்ற பெத்துராசி, ராசாத் தோட்டம், தெப்பித் தோட்டம் முதலிய சொற்கள் ஊர் பெயர்களாகும். ஆவ்வகையில் நோக்குகின்ற போது மலையக நாட்டார் பாடல்களில் தென்னிந்தியாவின் செல்வாக்கு காணப்படுகின்ற அதேசமயம், அவை மலையக சூழலுக்குக்கேற்ப புதிய வடிவம் பெற்றிருப்பதனையும் காண முடிகின்றது.

வறுமை, வரட்சி, சுரண்டல், சாதி அடிப்டையிலான அடக்கு முறைகள்; காரணமாக தென்னிந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்து இங்கு வரும் போது அவர்களின் உணர்வுகள் இவ்வாறாக வெளிப்படுகின்றது.

“வாடை யடிக்குதடி
வடகாத்து வீசுதடி
செந்நெல் மணக்குதடி
சேர்ந்துவந்த கப்பலிலே”.15

புகுந்த மண்ணில் ஏற்பட்ட ஏமாற்றம், சுரண்டல், அடக்கு முறைகள் என்பவற்றின் காரணமாக அவர்களின் வஞ்சிக்கப்பட்ட வாழ்க்கை ஏற்படத்திய அனுபவம் காரணமாக தமது தாயகம் பற்றிய ஏக்க உணர்வுகள் இவ்வாறு பிரவாகம் கொள்கின்றது:

ஊரான ஊரிழந்தேன்
ஒத்தப்பனைத் தோப்பிழந்தேன்
போரான கண்டியே
பெத்த தாயே நா மறந்தேன்

பாதையில வீடிருக்க
பழனி சம்பா சோறிருக்க
எருமை தயிரிருக்க
ஏண்டி வந்தோம் கண்டி சீமை 16

இம்மக்கள் எங்கிருந்தோ வந்து இங்கு தயாராக இருந்த பொருளாதாரத்தை சூறையாடிக்கொண்டவர்களல்லர். தமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் தாரைவாத்தே மலையக மண்ணை வளம்படுத்தினர். இது குறித்து மலையக பெண்ணொருத்தியின் வரிகள் இவவாறு வெளிப்படுகின்றது.

கூனியடிச்சமலை
கோப்பி கண்டு போட்ட மலை
அண்ணனை தோத்த மலை
அந்தா தெரியுதடி. 17

இப்பாடல் வரிகளை விபரிக்கும் போது மலையக பெரும் கவி சி.வி.வேலுப்பிள்ளை ~~காடுகளை அழித்துப் புதிய மலைகளை உருவாக்கும் போது, சாவு என்பது சர்வ சகஜமானது. மலையகத்தின் ஒவ்வொரு மலைகளும் நிச்சயம் சிரம் தாழ்த்தி மரியாதை செலுத்தத்தக்க யாரோ ஒரு தங்கையின் அண்ணனைத் தோத்த மலைகளாகதானிருக்கும்.மலையகத்தின் மலைகளின் மீது உங்களுக்கு ஏறிடச் சந்தர்ப்பம் வாய்த்தால், உங்கள் காலடிகளைக் கவனமாய் எடுத்து வையுங்கள் ஏனெனில் அவை அண்ணனைத் தோத்த மலைகள்||. எனக் கூறுவது மலையக மக்களின் வாழ்நிலைகளை சிறப்பாகவே உணர்த்தி நிற்கின்றது. அத்துடன் பெருந்தோட்ட உற்பத்தித் துறையில் இவர்கள் அனுபவித்த வேதனைகள் அடக்கு முறைகள் என்பவற்றை பின்வரும் பாடல் வரிகள் மூலம் வெளிப்படுத்துகின்றனர்

“அந்தனா தோட்டமினு
ஆசையா தானிருந்தேன்
ஓர மூட்ட தூக்கச்சொல்லி
ஒதைக்கிறானே கண்டாக்கையா”

“எண்ணிக் குழிவெட்டி
இடுப் பொடிஞ்சி நிக்கையிலே
வெட்டு வெட்டு என்கிறானே
வேலையத்த கங்காணி”18

உழைக்கும் மக்கள் திரளினரின் நல்வாழ்வுக்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு அம்மக்களின் விருப்பு, வெறுப்புக்கள், நம்பிக்கைகள் துன்பம், போராட்டம், அவர்தம் உறுதிப்பாடு என்பவற்றை பிரதிபலிக்கும் நாட்டார் பாடல் தொடர்பான ஆய்வு அவசியமான தொன்றாகின்றது. இவ்வகையில் மலையக நாட்டார் பாடல் பற்றிய சேகரிப்பு ஆய்வு என்பன இன்றியமையாத ஒன்றாகும். மலையக மக்களிடையே காணப்பட்ட நாட்டார் பாடல்கள் சிலவற்றை சி.வி வேலுப்பிள்ளை அவர்கள் தொகுத்து வெளியிட்டமை இத்துறையில் குறிப்பிடத்தக்க சாதனையாக அமைந்து காணப்படுகின்றது.

உழைக்கும் மக்கள் திரளினரின் இலக்கியங்கள் யாவும் இந்நாட்டார் இலக்கிய பின்னணியிலிருந்து தோற்றம் பெற்றவையாகும். பாரதி, கோர்க்கி முதலானோரின் படைப்புக்கள் இவ்வடிப்படையில் தோற்றம் பெற்றவையாகும். மலையகம் சம்பந்தப்பட்ட மக்கள் இலக்கியம் இவ்விலக்கியத்தின் அடியாக தோன்ற வேண்டியவையே. சி.வி.வேலுப்பிள்ளை, என்.எஸ்.எம். இராமையா முதலானோரின் படைப்புகள் நாட்டார் இலக்கியத்தின் மறு பதிவுகளாக காணப்படுகின்றன எனக் கூறலாம். மலையக நாட்டார் பாடல்களை நுண்ணியத்துடன் நோக்குகின்ற போது மலையக வாழ்வியலையும் அடியாகக் கொண்டு தோற்றம் பெற்ற முதல் இலக்கிய படைப்புகளாக இவை அமைந்து காணப்படுகின்றன என்பது ஆய்வு நிலைப்பட்ட உண்மையாகும்.

மலையக இலக்கிய வளர்ச்சி

“இலங்கையில் வாழ்ந்து வருகின்ற இந்திய தமிழர்களை பொருத்த வரையில் இவர்களது முக்கிய இலக்கிய முயற்சிகள் 1930 இற்கு பின்னரே முகிலத் தொடங்குகிறது. 1954இற்கு பின்னரே இவர்களது இலக்கிய ஆக்கங்;கள் ஈழத்து பொது இலக்கிய வளர்ச்சியுடன் இணைய தொடங்குகின்றது” என்பது மலையக இலக்கியம் பற்றிய சமூக வரலாற்று ஆய்வாளர்களின் துணிவாகும்.

மலையக படைப்பு இலக்கியத்தின் ஆரம்பகால கவிதைகள், மத அடிப்டையில் அமைந்து காணப்படுகின்றன. அவற்றில் இடையிடையே மலையகம் பற்றிய செய்திகள் இடம் பெற்ற போதிலும், மலையக மக்களின் வாழ்க்கை இடம் பெறவில்லை. இதற்கு அருள்வாக்கி அப்துல் காதிறு புலவர் அவர்களின் பாடல்களை குறிப்பிடலாம். தொடர்ந்து மலையக இலக்கிய முன்னோடியாகவும் தொழிற்சங்க முன்னோடியாகவும் திகழ்ந்தவர் கோ. நடேசய்யர்,; மலையக மக்களிடையே தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு இலக்கியத்தை ஒரு சாதனமாக பயன்படுத்தினார். அவரது கவி வரிகள் பின்வருமாறு உணர்வுக் கொள்கின்றது:

“இந்து மக்கள்
சிந்தும் வேர்வை
ரெத்தக்காசு தானே - அடா
இரவு பகல்
உறக்கமின்றி
ஏய்த்துப் பறிக்கலாமா?

இவ்வரிகள் கோ. நடேசய்யரின் நுண் உணர்வு மிக்க பரந்த இதயத்தை எமக்கு எடுத்துக் காட்டுவதாக அமைகின்றது. கோ. நடேசய்யரிடம் இந்து சமயம் சார்ந்த எதுகைமோனை சார்ந்த சொற்பிரயோகமாகவே இதனைக் கொள்ள வேண்டியுள்ளது.இந்துக்கள் பெரும்பாண்மையினர் என்றவகையில் கையாளப்பட்டாலும் இந்து என்ற சொற்பிரயோகம் இந்தியாவைச் சேர்ந்த மக்கள் என்போருக்குக் குரியது. பாரதிக் கூட இந்துக் கிறிஸ்தவர், இந்து முஸ்லிம் என்ற பிரயோகத்தை இப்பொருளில் பாவித்துள்ளார். மலையக மக்களின் நலன் குறித்த ஆழ்ந்த அக்கறையே இக்கவிதையில் முனைப்பு பெற்றிருக்கின்றது என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

நடேசய்யரின் தொழிற்சங்க பணிகளிலும், செயற்பாடுகளிலும் அவருக்கு பக்க பலமாக இருந்தவர் அவரது துணைவியார் மீனாட்சியம்மையார்;. மலையக இலக்கியத்திற்கு இவரது பங்களிப்பு ஓர் புதிய குருதியைப் பாய்ச்சுகின்றது எனலாம். பாரதியிலும் அவரது கவிதைகளிலும் அதிகமாக ஈடுபாடு கொண்ட மீனாட்சியம்மை, பாரதி போற்றிய புதுமைப் பெண்ணாகத் திகழ்ந்ததுடன், அவனது பாடல்களை மலையக சூழலுக்கு ஏற்ப மாற்றி தோட்டத் தொழிலாளர்களிடையே பாடி வந்தார். கலை இலக்கியத்தின் பணி என்பது மானுடவிடுதலையை அடிப்படையாக கொண்டதாக அமைய வேண்டும் என்ற அடிப்படை நிலைநின்று இம்மக்கள் சார்ந்த இலக்கியப் படைப்புக்களை இம்மக்களிடையே கொண்டு சென்ற திருமதி மீனாட்சியம்மையார் மலையக மக்களின் நல்வாழ்வுக்கான போராட்டத்துக்கு காத்திரமான பங்களிப்பினை நல்கியவரமுவார். பாரதியின் விடுதலை வேட்கையை மலையக மக்கள் தரிசிக்கவும் அதன் வழி சமூதாய உணர்வு பெறவும் தூண்டு கோலாக அமைந்தவர்கள் கோ. நடேசய்யரும், மீனாட்சியம்மையாரும் ஆவர்.

இவைத் தவிர ~~மலையகத் தொழிலாளர் பற்றிய பாடல்களை எளிய முறையில் சாதாரண நடையில் எழுதி துண்டு பிரசுரங்களாகவும், சிறு நூல் வடிவங்களாகவும், நாவலப்பிட்டியில் பிறந்த கவிஞர் எஸ்.ஆர்.என். பெரியாம்பிள்ளை, வி.என். கோவிந்தசாமி தேவர், பி.ஆர். பெரியசாமி, கா.சி. ரெங்கநாதன், சீனிவாசகம், தொண்டன் ஆசிரியர் என்.எஸ். நாதன், ஜில் சிட்டுக்குருவியார், பதுளை வ. ஞானபண்டிதன் போன்றோர்கள் வெளியிட்டும் தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் பாடியும் பரப்பி வந்தார்கள். இந்த நிலமை இன்றுவரை தொடர்வதைக் காணலாம.; கண்டி மாநகருக்கு அருகில் தெல்தோட்ட, அதன் கூப்பிடுதூரத்தில் பட்டியகாமம் என்ற சிறு தேயிலைத் தோட்டம,; அங்கு வாழும் பாவலர் வேல்சாமிதாசன் தாம் இயற்றிய பாடல்களை துண்டு பிரசுரமாக அச்சிட்டு தோட்டம் தோட்டமாக சென்று பாடி விற்று ஜீவித்திருக்கிறார்||21

இக்கவிஞர்களில் வி.என். கோவிந்தசாமி தேவர், பெரியாம்பிள்ளை, என்.எஸ்.நாதன் முதலானோர் குறிப்பிடத்தக்கவரகள்;. இவர்களது படைப்புகளில் தொழிலாளர் வர்க்க ஆவேசமும், குமுறலும் சற்று தூக்கலாகவே வெளிப்பட்டன. மலையகம் குறித்தும் புத்திஜீகள் (பொதுவில் மனிதன்) குறித்தும் என்.எஸ்.நாதனின் உணர்வு இவ்வாறு கவிதையாகின்றது.

சாதியால் சங்கத்தால், உன்னை ஏய்க்கும்
சண்டாளர் கூட்டம் கால் நூற்றாண்டாக
மோதியே, உள்வீட்டில், மூட்டும் சண்டை
மூவிரண்டு தவணையால் பொலீஸ் கோர்ட்;டில்
பாதியாய்ப் போனவுடன் ஆஸ்தியெல்லாம்
பறித்திடுவார் தெண்டம் எனக் கொடுத்துத் தாலி
மீதியாய் வந்த காதைபோதும், போதுமிந்த
மேதைகளை வெளியேற்று 22

எங்கெல்லாம் உழைக்கும் மக்கள் போராட்டம் முகிழ்ந்து எழுகின்றதோ, அங்கெல்லாம் பூர்சுவா புத்திஜீவிகள் அப்போராட்டங்களை நசுக்குவதிலும், சமரசம் செய்தலிலும் முன்னின்றே வந்துள்ளனர் என்பதனை மலையக வரலாறும் எமக்கு உணர்த்தி நிற்கின்றது. இக்கவிஞன்; அத்தகைய மேதைகள் மீதான விமர்சனத்தை தனக்கே உரித்தான நாகரிகத்துடன் முன் வைக்கின்றார்.

மலையக இலக்கியத் துறையில் குறிப்பிடத்தக்க சுவடுகளை பதித்த இலக்கிய கர்த்தாக்களாக எம்முன் நிற்பவர்களில் இருவர், சி.வி வேலுப்பிள்ளையும், என்.எஸ்.எம். இராமையாவும் ஆவர். மலையக மக்களின் வாழ்வியலை உணர்ந்து அதன் உள்நின்று இலக்கியம் படைத்தவர்களில் இவ்விரு படைப்பாளிகளும் குறிப்பிடத்தக்கவர்கள். இவ்வகையில் சி.வி. வேலுப்பிள்ளையின் In Ceylon Tea Garden என்ற கவிதைத் தொகுப்பும் Born to Labour என்ற விவரண தொகுப்பும் முக்கியமானவர்களாகும். சி.வி. வேலுப்பிள்ளை கடைசிவரை தமிழில் கவிதை எழுதவில்லை. அவரது ஆங்கில கவி வரிகள்

“To the tom - toms throp
The dawn lies startled;
Trembling upon the tea;
The last dew bead is fresh
Before the moring treads
On this mating hour
Where suffering and pain
Decay and death are one
In the life throp
In the breathing of men”23

இக்கவிதை தொகுப்பினை சக்தி .பாலையா “இலங்கைத் தேயிலைத் தோட்டத்திலே” என மொழிபெயர்ப்பு செய்திருந்தார். இம்மொழிப்பெயர்ப்பில் சி.வி.யின் கவிதைகளில் காணப்பட்ட இயல்பான மண்வாசனை பண்பும் அவற்றோடு இணைந்த சொற்களும் காணப்படவில்லை. எடுத்துக்காட்டாக சி.வி. To the tom - toms throp என்பதை பிரட்டுத் தப்பு என்ற அர்த்தத்திலேயே பயன்படுத்தியிருக்க வேண்டும். சுக்தி பாலையாவின் மொழிப்பெயர்ப்பில் “பேரிகை” என்ற சொல்லையே பயன்படுத்தியிருக்கின்றார். இப் பதமானது தப்பு என்ற இசைக்கருவிக்கு மாறான பொருளைத் தருவதாக மட்டுமன்று மலையக வாழ்வியலிருந்தே அந்நியப்பட்ட சொல்லாகவும் காணப்படுகின்றது. மேலும் சி.வி. 27 பக்கங்களில் எழுதிய கவிதை நூலை 77 பக்கங்களில் ஆக்கியிருக்கின்றார். இவ்விரு தொகுப்புகளையும் ஒப்பு நோக்குகின்ற போது பாரிய வேறுப்பாடு இருப்பதனை அவதானிக்க முடிகின்றது. மல்லியப்பு சந்தி திலகர் தொகுத்து வெளியிட்ட சி.வி யின் கவிதைத் தொகுப்பு(மூலக் கவிதைகளையும் மொழிப்பெயர்ப்பையும் சேர்த்து) வெளியிட்டுள்ளமை இவ்வகையான ஆய்வுகளுக்கு துணையாக அமைந்துள்ளது. இவ்வாறாக நோக்குகின்ற போது சத்தி.பாலையாவின் கவிதை தொகுப்பினை மொழிபெயரப்;பு தொகுப்பு எனக் கூறுவதை விட தழுவல் எனக் கூறுவதே பொருந்தும். நந்தலாலா சஞ்சிகை குழுவினரும் சி. வியின் கவிதை மொழிபெயர்ப்பு முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். அம் மொழிப்பெயர்ப்பு வரிகள் பின்வருமாறு அமைந்து காணப்படுகின்றன:

“பிரட்டின் அதிர்வில்
விடியலே அதிர்ந்துபோய்
தேயிலை மீது
சரிந்து கிடந்தது
விடியல் பொழுதின்
ஆக்கிரமிப்பின் முன்னர்
இறுதியாய் சொட்டும் - இப்
பனித்துளி புதிது.
பொருந்தும் இந்த
பொழுதின் கணத்தில் தான்
துயரும் நோவும்
நசிவும் இழப்பும்
இம் மக்களின் மூச்சில்
இவ் வாழ்க்கையின் முகிழ்பின்
இவ்வாழ்கையின் முகிழ்ப்பின்
அம்சம் ஒன்றென
ஆகிப் போயின”24

இம்மொழிபெயரப்;பு உள்ளடகத்திலும் உருவத்திலும் சிதைவடையாது காணப்படுகின்றது.

மலையக மக்களின் வாழ்க்கையை சிறுகதை வடிவில் தந்தவர் என்.எஸ்.எம்.இராமையா. மலையக மக்களின் பிரச்சினைளை உள்நின்று நோக்குவதுடன், மலையக வாழ்க்கை முறையின் நடப்பியலை புரிந்து கொண்டு நியாயத்தின் பக்கம் நின்று சிறுகதை எழுத முனைந்தவர் அவர். பெரும்பாலும் இவரது சிறுகதைகள் நாட்டார் இலக்கியத்தின் இன்னொரு வடிவமாக அமைந்துக் காணப்படுகின்றது.

சி.வி, என்.எஸ்.எம்.இராமையா முதலானோரின் படைப்புகளுக்கு களம் அமைத்து கொடுத்ததுடன் (குறிப்பாக தினகரன் பத்திரிகையில்) ஆக்கமும் ஊக்கமும் அளித்தவர் பேராசிரியர் கைலாசபதி. ~~அரசியல் அநாதைகளாய் புழுங்கிக் கொண்டிருந்த எங்களை உள்ளங்கனிந்து அன்புடன் நேசித்தவர் கைலாஸ். எங்கள் பெருமகன் அவர்||25 என சி.வி வேலுப்பிள்ளை கைலாசபதியின் அஞ்சலி உரையில் கூறியுள்ளமை இவ்விடத்தில் நினைவு கூரத்தக்கதொன்றாகும்.

மலையக இலக்கியத்திற்கு மாத்திரமன்றி இலங்கையின் தேசிய இலக்கிய நீரோட்டத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை நல்கியவர் கே. கணேஷ். இவர் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினராக இருந்ததுடன் ~~பாரதி|| என்ற சஞ்சிகையின் இணை ஆசிரியராகவும் இருந்தவர். மலையக தொடர்பில் இவரது இலக்கியப் படைப்புக்கள் அளவில் சிறியதென்ற போதிலும் மேற்குலக முற்போக்கு மார்க்ஸிய அறிஞர்களின் இலக்கியப் படைப்புக்களை அதன் உள்ளடக்கம் உருவம் சிதையாத வகையில் தமிழில் மொழிபெயர்ப்பு செய்தமை இவரது மிகமுக்கியமான பங்களிப்பாகும்.; லூசுன் சிறுகதைகள், ஹோசிமின் சிறைக்குறிப்புக்கள், குவாஜா அகமது அப்பாஸின் குங்குமப்பூ, அஜந்தா ஆகியவற்றையும் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.

இக்காலப்பகுதியில் இவ்வெழுத்தாளர்களின் சிந்தனைகள் பற்றி அறிய அக்காலச் சூழலில் முனைப்புற்றிருந்த தேசிய சர்வதேச சமூக அரசியல் கலாசாரம் குறித்து தெளிவு இன்றியமையாததாகும். 1960களில் இலங்கையில் மாத்திரமன்றி உலகளாவிய ரீதியிலே இடதுசாரி இயக்கங்கள் வளர்ச்சியடைந்திருந்ததுடன் அவை பரந்துபட்ட உழைக்கும் மக்களை நோக்கி படர்ந்தன. இந்த பிரக்ஞையின் வெளிப்பாடாகவே தேசிய இலக்கிய இயக்கம் தோற்றம் பெற்று தத்துவார்த்த போராட்டங்கள் முன்னேடுக்கப்பட்டன. ~~தேசியம்|| என்ற பதத்தினை மேலோட்டமாக அர்த்தப்படுத்தி பார்க்கும் போது அது குறுகிய பிரதேச வாதமாகப்படலாம். ஆனால் சற்று ஆழமாக நோக்கினால் பிரதேசங்களினதும், தேசிய சிறுபான்மையினரதும் அடக்கி ஒடுக்கப்படும் வர்க்கங்களினதும் எழுச்சியை அது பிரதிப்பலித்து நிற்க்கின்றது என்பதை அறியலாம். தேசிய இலக்கியம் பற்றி பேராசிரியர் கைலாசபதி; ~~குறிப்பிட்ட காலத்தில் காணப்படும் சமூக அமைப்பை அப்படியே பாதுகாக்கவோ, மாற்றியமைக்கவோ, சீர்திருத்தவோ இடமுண்டு. ஏனெனில் வெறுமனே ஒரு நாட்டை பிரதிபலிப்பது தேசிய இலக்கியமாகாது. தேசிய இலக்கியம் என நாம் கூறும் போது இலக்கியம் படைப்பவர்கள் இலட்சியம் நோக்கம் முதலியவற்றையும் சேர்த்தே எடை போடுகின்றது. சுருக்கக்கூறின் தேசிய இலக்கியம் என்பது ஒருவித போராட்ட இலக்கியமாகும்||26 என அடையாளப்படுத்தியிருக்கின்றார்.

இக்காலச்சூழலில் எழுந்த தேசிய இலக்கியப் பண்பை நாம் சி.வி, என்.எஸ்.எம். இராமையா முதலானோரின் படைப்புகளில் காணக்கூடியதாய் உள்ளன. இக்காலப் பின்னணியில் மலையகத்தில் இடம்பெற்ற எழுச்சிகள் பற்றியும் நோக்க வேண்டியது காலத்தின் தேவையாகவுள்ளது.

இக்காலப் பகுதியில் மலையகத்தில் காணப்பட்ட அரசியல் சமூக கலை இலக்கிய போக்குகள் குறித்த தெளிவு அவசியமானதாகும்.

மலையகத்தில் திரு. இளஞ்செழியன் தலைமையிலான இலங்கை திராவிட முன்னேற்ற கழகமும் தோன்றி வளர்ந்திருந்தது. இதன் காரணமாக மலையக மக்களிடையே தி.மு.க கருத்துக்கள் பரவி ஜனரஞ்கம் அடைந்திருந்தன. இதில் அங்கம் வகித்த பலர் பின்னாட்களில் இடதுசாரி இயக்கங்களில் இணைந்தனர். இது இதன் முற்போக்கான அம்சமாக காணப்பட்டது. மலையகத்தை அடித்தளமாக கொண்டு இவ்வியக்கம் முனைந்ததால் இந்திய திராவிட முன்னேற்ற கழக போக்கிலிருந்து அந்நியப் பட்டதாகவும் அதே சமயம் மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டதாகவும் அமைந்திருந்தது. இதன் பின்னணியில் தான் இப்போக்கு சார்ந்த பண்பாட்டு இயக்கங்களும் இலக்கியங்களும் தோன்றின.

இ.தி.மு.க அரசியல் சமூக பொருளாதார செயற்பாடுகளை முன்னெடுத்தபோது அதற்கான கருவியாக கலை இலக்கிய துறையினையும் பயன்படுத்திக் கொண்டது. இது குறித்து திர. ஏ. இளஞ்செழியன் பின்வருமாற குறிப்பிடுகின்றார். ~~ சமூக சீர்த்திருத்த, பகுத்தறிவுக் கொள்கைகளை பிரதான கருத்துக்களாகக் கொண்டு, பெரியார் வெளியிட்ட திராவிட நாடு, நாத்தீகம், குடியரசு, அண்ணா வெளியிட்ட திராவிட நாடு, ஹோம் லேண்ட, காஞ்சி, கலைஞர் கருணாநிதி வெளியிட்ட, முத்தாரம், முரசொலி என்பவற்றோடு மாலைமணி, தீப்பொறி, தென்றல் போர்வாள் போன்ற ஏடுகளை தோழர்களிடையே விநியோகத்து கலை, இலக்கியத்துறையில் அவர்களையும் ஈடுபடுத்தி, எழுதத் தூண்டியதில் பெரும்பங்களிப்பு இ.தி.மு.க விளதே பத்திரிகைத் துறை, எழுத்துத் துறை, பேச்சுத்துறை என்பவற்றில் இ.தி.மு.க புதிய பரிணாமத்தை ஏற்படுத்தியது.

இவ்வாறாக தமிழகத்திலிருந்து வெளிவந்த பத்திரிகைகள் துண்டுப்பிரசுரங்கள், நூல்கள் என்பன இவர்களில் தாக்கம் செலுத்தின என்ற போதிலும் அவை மலையக சூழலுக்குயேற்றவகையில் புதிய வடிவத்தினை பெற்றிருந்தன. மொழியுரிமை, பெண்விடுதலை, சாதிய எதிர்ப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, மலையக தமிழர்கள் ஓர் தேசிய இனம் என்ற அடையாளத்திற்கான போராட்டம் என்பவற்றினை முன்னிறுத்தியே இவர்களது செயற்பாடுகள் அமைந்திருந்தன.

அக்காலச் சூழலில் போராட்டங்களில் மேடையேற்றப்பட்ட பல நாடகங்கள் இ.தி.மு. கத்தின் தாக்கத்திற்கு உட்பட்டவையாக அமைந்திருந்தன மலையக மக்கள் இம் மண்ணுக்குரியவர்கள், அவர்கள் மலையக தமிழர் என்ற அடையாளத்துடன் வாழ்கின்றவர்கள் என்ற சிந்தனையை முன்னிருத்தி வெளிவந்த ~~யார் நாடற்றவன|| என்ற நாடகம் குறிப்பிடத்தக்கதென்றாகும். இந்நாடகம் நோட்டன் லக்ஸபான தோட்டத் தொழிலாளர்களாக தயாரிக்கப்பட்டு மேடையேற்றப்பட்டது. இவைத்தவிர எலியாஸ், மு.வெ. பொ.சாமி, க.ப.சிவம், இல. நாகலிங்கம், இரா. அ. இராமன், க. தமிழ்மாறன், நவஜோதி, மலைத்தம்பி, குறிஞ்சி தென்னவன், டி.எம்.பீர்முகமது, அந்தனி நிலா, முத்தழகு, மு. நேசமணி முதலானோர்களின் எழுத்துக்களில் இவ்வியக்கத்தின் பாதிப்பினை அறியக் கூடியதாக உள்ளன.

இவ்வகையில் இ.தி.மு. கத்தின் செல்வாக்கினை இதன் தனித்துவமான போக்கினை மலையக இலக்கியத்தில் காணக் கூடியதாக உள்ளது. இவ்வியக்கம் குறித்தோ அல்லது அதன் பின்னணியில் தோற்றம் பெற்ற இலக்கியங்கள் குறித்தோ காய்தல், உவத்தல் அற்ற ஆய்வு இதுவரை தோன்றவில்லை. இவ்வியக்கத்தின் போர்குணமிக்க சமுதாயக் கூறுகளை மக்கள் போராட்டத்திற்கு சாதகமானவகையில் உள்வாங்கிக் கொள்வதுடன் அதன் பலவீனங்கள் காணப்பட வேண்டும்.

இன்று தமிழகத்தில் முனைப்படையும் தலித்தியம் பெரும்போக்காக பார்ப்பனியத்தை மட்டுமே பிரதான எதிரியாக கருதிய பெரியாரியம் இழைத்த அதே தவறேயே மேலுருவாக்கம் செய்கிறது. மேலாதிக்க வாதி, ஏகாபத்தியம், நவக்காலனித்துவம் ஆகியவற்றுக்கெதிராக முரண்பட்டை பிரதானமாதாய் கொண்டு அதனோடு இணைந்து அடக்குமுறையாட்சி புரியும் பார்ப்பனியத்துக்கு எதிரான முரண்பாட்டையும் முதன்மையானதாய்ப் பார்ப்பதே அவசியம்.

இந்த அபாயம் மலையகத்தில் இ.தி.மு.க அமைப்பின் ஏற்பட சந்தர்ப்பம் உள்ளது. மார்க்சிய இயக்கங்களையும் அதன் சமுதாயம் சார்ந்த நடைமுறைகளையும் தகார்த்துவதற்காக அதன் பலவீனமான பக்ககங்களை மட்டுமே தூக்கிப்பிடிப்பது அழிவிற்கே இட்டு செல்லம் எனவே அழமான நுட்பமான மார்க்ஸிய ஆய்வுகளின் மூலமாகவே இதனை சாதிக்க முடியும். திரு. பெ.முத்துலிங்கம் எழுதிய ‘எழுதப்படாத வரலாறு என்ற நூல் இவ்விடம் குறித்து பல தகவல்களைக் வெளிக் கொணர்ந்த போதும் அது முழுமையான வரலாற்றை கொண்டு வருவதாக அமையவில்லை என்பது விமர்சன நிலைப்பட்ட உண்மையாகும்.

இரண்டாவது போக்காக இ.தி.மு.க. கருத்துக்களால் பாதிப்புற்றிருந்த அதேசமயம் அதன் முழுமையான கருத்தியலை ஏற்றுக் கொள்ளாமலும் மறுப்புறத்தில் மார்க்சிய தளத்தில் தம்மை இணைத்துக் கொள்ளாமலும் பல சீர்த்திருத்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். மலையக மக்கள் தொடர்பான முற்Nhக்கான கருத்தினை முன்னேடுத்து வந்த சமூக அரசியல் பண்பாட்டு இயக்கங்கள் வளர்ச்சி பெற்றிருந்தன. இதற்கு திரு.இர. சிவலிங்கம் தலைமை தாங்கினார். ~~மலையகம்|| என்ற கருத்தியலை உருவாக்குவதிலும் சீர்pதிருத்தவாத சிந்தனைகளை முன்னெடுப்பதிலும் செயற்பட்டவர் அவர். மலையகத்தின் பாரம்பரிய தொழிற்சங்க வாதிகள் அக்கால கட்டத்தில் பெற்றுதர முடியாதவற்றை பெற்று தந்தவர் திரு இர. சிவலிங்கம் எனக் கூறுவது தவறாகாது.

இக்காலத்தில் பண்பாட்டு ரீதியாக கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகள் முன் எடுக்கப்பட்டன. மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்துக்குக் கூடாக மலையக இலக்கியம் வளர்க்கப்பட்டது. அவ்வமைப்பின் தலைமை, பாட்டாளி வர்க்க இலக்கியம் என்பதை அதன் கருத்தியலாக ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் அதனால் தொழிலாளர்களின் பிரச்சினைகளை இலக்கியப் பரப்பில் நிராகரிக்க முடியவில்லை. எனவே, மனிதாபிமான அடிப்படையிலான இலக்கிய நடவடிக்கைகளே இவர்களில் முதன்மை பெற்றுக் காணப்பட்டன.29

மூன்றாவது போக்காக, திரு.சண்முதாசன் தலைமையிலான இடது சாரி இயக்கமானது புதியதோர் பரிணாமத்தை எட்டியிருந்தது. இவ்வியக்கம் மலையக மக்களிடையே வேர் கொண்டு கிளை பரப்பிய போது தொழிலாளர்கள், புத்திஜீவிகள், மாணவர்களெனப் பல்வேறுபட்ட ஆளுமைகளை தன் நோக்கி ஆகர்ச்சித்திருந்தது. உழைக்கும் மக்களின் நல்வாழ்வுக்கான போராட்ட முனைப்பை இவ்வியக்கம் உணர்த்தி இருந்தது. இக்காலகட்டத்தில் ஏற்பட்ட மக்கள் எழுச்சிக்கு மடக்கும்பர, மேபீல்ட், பதுளை கீனாகலை ஆகிய இடங்களில் இடம்பெற்ற போராட்டங்களை உதாரணமாகக் கூறலாம்.

இவ்வாறான சூழலில் இலக்கியம் படைத்த சி.வி, என்.எஸ்.எம். இராமையா முதலானோரின் படைப்புக்கள் தம் காலகட்டத்து எழுச்சிகளையும் போராட்டங்களையும் இயக்கங்களையும் பொருளாகக் கொள்ளவில்லை என்பது ஆய்வு நிலைப்பட்ட உண்மையாகும். சி.வியின் ~~வீடற்றவன்|| என்ற நாவல் அக்காலகட்டத்தில் மலையகத்தில் இயங்கிவந்த மக்கள் நலன் சார்ந்த இயக்கங்களைக் குறிக்கவில்லை. பாரம்பரிய தொழிற்சங்க அமைப்பினையே சித்திரித்துக் காட்டுகின்றது. அவ்வகையில் அக்காலப் பின்னணியில் ஒரு போக்கினை எடுத்துக் காட்டுகின்ற இந்நாவல் அதன் மறுபக்கத்தை காட்டத் தவறிவிடுகின்றது. பாரம்பரிய அமைப்புகளுக்கும், இடதுசாரி இயக்கங்களுக்கும் இடையிலான முரண்பாட்டை யோ. பேனடிகற்; பாலனின் ~~சொந்தகாரன்|| என்ற நாவல் சித்திரித்து காட்டுகின்றது . இருப்பினும் இந்நாவல் யதார்த்த சிதைவினை கொண்டு காணப்படுவதால் அம்முயற்சி முழுமையடையவில்லை எனலாம்.

இர.சிவலிங்கம், திருச்செந்தூரன் முதலானோரது சிந்தனைச் செல்வாக்குக்குட்பட்ட எழுத்தாளர்களாக எம். வாமதேவன், பி. மரியதாஸ், சாரல் நாடன், மு.சிவலிங்கம் முதலானோரைக் குறிப்பிடலாம். பொதுவாக இவர்களது ஆரம்ப காலப் படைப்புகள் பிரஜா உரிமை பறிப்பு, சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தால் நாடு கடத்தப்பட்ட மலையக மக்களின் நிலை, சிங்கள பெருந் தேசிய வாதத்தால் இம்மக்கள் மீது ஏற்படுத்தப்பட்ட அடக்குமுறைகள், என்பவற்றை பற்றியதாக அமைகின்றன. திருச்செந்தூரனின் “உரிமை எங்கே” என்ற சிறுகதை பிரஜா உரிமைப் பறிப்பு தொடர்பாக கூறுகின்றது. இவ்வாறானதோர் கருத்தோட்டத்தினை, நிலைமையை அ.செ. முருகானந்தனின் “காளிமுத்துவின் பிரஜா உரிமை எங்கே” என்ற கதையும் எடுத்துக் கூறுகின்றது.

இத்தகைய சிந்தனைப் போக்கில் கால்பதித்து இலக்கியம் படைத்தவர்களில் தெளிவத்தை ஜோசப், சி. பன்னீரச்;செல்வம், பரிபூரணன், மலரன்பன், மல்லிகை சி. குமார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்;.

இந்த மரபில் வந்த சிலர் காலப் போக்கில் மார்க்ஸிய சித்தாந்தங்களினால் கவரப்பட்டு இலக்கியம் படைப்பவர்களாக மாற்றமடைந்தனர். மரியதாஸின் வரவு இதற்கு தகுந்த எடுத்துக் காட்டாகும். இவரது “பயணம்” என்ற சிறுகதை குறிப்பிடத்தக்கதொன்றாகும். மனித உறவுகளிலும், சிந்தனைப் போக்குகளிலும் பணத்தின் ஆதிக்கம் எவ்வளவு தூரம் புரையோடிப் போயுள்ளது என்பதனை அழகுற சித்திரித்து காட்டுவதாக இக்கதை அமைந்துள்ளது. முதலாளித்துவச் சூழ்நிலை, ஏழைகளின் வாழ்வில் குடும்ப உறவில் எத்தகைய பாதிப்பினை ஏற்படுத்துகின்றது என்பதனை அழகுற எடுத்துக் காட்டுகின்றது இச்சிறுகதை.

இதன் மறுபோக்கிற்கு உதாரணமாக சாரல்நாடன், மு. சிவலிங்கம் முதலானோரின் சிறுகதைகளைக் குறிப்பிடலாம். இவர்களது பெரும்பாலான கதைகளில் உழைக்கும் மக்கள் பாத்திரமாக படைக்கப்பட்டிருப்பினும் அவை மத்திய தரவர்க்க கண்கோட்டத்திலேயே படைக்கப்பட்டுள்ளன. அத்துடன் அறுபதுகளில் இடது சாரி இயக்க வளர்ச்சியின் முதற்கட்ட வெளிப்பாடாக தோட்ட தொழிலாளர்களை ஒடுக்கி அடக்கிய நிர்வாக உத்தியோகஸ்தர்களுக்கு எதிராகவே வெளிப்பட்டது. உதாரணமாக தோட்டங்களில் வேலைபார்த்த கணக்குப்பிள்ளைமார்கள் தொழிலாளர் பெண்களை இலகுவாக பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தக் கூடியவர்களாக காணப்பட்டனர். அவ்வாறான கணக்குப்பிள்ளைமார்கள் பலரின் கைகள் வெட்டப்பட்டதும், கொல்லப்பட்டதும் இப்பின்னணியில் தான். இப்பண்பு உழைக்கும் மக்கள் சார்ந்த எழுச்சியை வெளிப்படுத்தி நின்றது. இத் தொடர்பில் கவிஞன் ஒருவனின் வரிகள் இவ்வாறு வெளிப்பட்டுள்ளன:

“தண்டுகலா தோட்டத்திலே
திண்டு முண்டு கணக்கப்பிள்ளை
துண்டு துண்டா வெட்டிப்பாருங்க
யாரோ தாங்க
கண்ட துண்டமாக போச்சிங்க
கழுத்து முண்டம்
கைலாசம் சேர்ந்திருச்சிங்க”30

இவ்வாறானதோர் சூழலில் தோட்டப்புற உத்தியோகஸ்தர்களின் ஒடுக்குமுறைகளை மறைத்து அவர்களிற்கும், தொழிலாளர்களுக்கும் இடையிலான ஒரு சமரசத்தை ஏற்படுத்துகின்ற முயற்சியாகவே சாரல் நாடனின் பல சிறுகதைகள் அமைந்து காணப்படுகின்றன. அவர் எழுதிய “எவளோ ஒருத்தி” என்ற கதை இப்பின்னணியை எடுத்துக் காட்டுகின்றது என்ற போதினும், அப் பொராட்டத்தின் மீதான நம்பிக்கை வரட்சியை ஏற்படுத்துவனவாக அமைந்திருக்கின்றது.

இக்காலத்திலும் இதனைத் தொடர்ந்தும் பல நாவல் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. கோகிலம் சுப்பையாவின் “தூரத்துப் பச்சை”, டாக்டர் நந்தியின் “மலைக்கொழுந்து”, யோ. பெனடிக்ற் பாலனின் “சொந்தக்காரன்”, தோ. சிக்கன் ராஜீவின் “தாயகம்”, தெளிவத்தை ஜோசப்பின் “காலங்கள் சாவதில்லை”, கே.ஆர். டேவிட்டின் “வரலாறு அவளை தோற்றுவிட்டது”,எஸ்.அகஸ்தியரின் திருமணத்துக்காக ஒரு பெண் காத்திருக்கிறாள் என்ற நாவலும் கோபுரங்கள் சரிகின்றன என்ற குறுநாவலிலும் வேறு சில பத்திரிகைத் தொடர்கதைகளிலும் மலையக வாழ்வு நோக்கப்பட்டிருக்கின்றது. மலையக வாழ்வையே களமாக கொண்டு நூலுருப் பெற்ற நாவல்களில் வியந்து குறிப்பிடத்தக்கவை. தூரத்துப் பச்சை, சொந்தகாரன் ஆகிய நாவல்களாகும். மலையக தொழிலாளரின் துயர வரலாற்றினை அவல சுவையுடன் சித்திரிக்கின்றது தூரத்துப் பச்சை.31

தாயகம், வரலாறு அவளை தோற்றுவிட்டது ஆகியவை உருவத்தாலோ உள்ளடக்கத்தாலோ சிறக்கவில்லை. துன்பம் நிறைந்த மலையக தொழிலாளர்பால் வெறும் பரிதாப காடாட்சம் செலுத்தும் நோக்கமோ அல்லது அவர்களை இரவோடு இரவாக புரட்சியில் இறக்கும் அவசரமோ இன்றி அவர்களது வாழ்வை விண்டுக் காட்டும் சிறந்த தமிழ் நாவல் இனிமேல் தான் தோன்ற வேண்டும்.

அறுபதுகளில் தோற்றம் பெற்ற இவ்விலக்கிய மரபானது எழுபதுகளின் நடுப்பகுதிவரை தாக்கம் செலுத்தக்கூடியதாக இருந்தது. அதன் பின்னரான இடதுசாரி இயக்கங்களின் தளர்ச்சி, மிதவாத இயக்கங்களின் எழுச்சி, வடகிழக்கு பகுதிகளில் தோற்றம் பெற்று வந்த ஆயுத கிளர்ச்சி என்பன காரணமாக மலையகத்தின் வீச்சுடன் திகழ்ந்த எழுத்தாளர் சிலர் தமக்கு பாதுகாப்பு தேடியும், மற்றும் கம்பீரத்திற்கும் வயிற்று பிழைப்பிற்கும் வழிதேடியும் மிதவாத இயக்கங்களில் புகலிடம் தேடினர்.

இதை தொடர்ந்து வந்த காலங்களில் மல்லிகை சி. குமார், மாத்தளை சோமு, மலரன்பன், மாத்தளை வடிவேலன், குறிஞ்சி தென்னவன், மலைத்தம்பி, சி.எஸ்.காந்தி, கார்மேகம் அரு. சிவாநந்தம், சி. பன்னீர்செல்வம் முதலானோர் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை மலையக இலக்கியத்திற்கு வழங்கியுள்ளனர். சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தத்தின் விளைவாக தமிழகம் சென்று விட்ட கவிஞர் அரு. சிவானந்தனின் குரல் இப்படி ஒலிக்கின்றது.

நான் பிறந்த நாட்டினிலே
நான் இருக்க விதியில்லை
என் ஜென்மப் பூமியிலே
எனக்கு உரிமையில்லை

இப்பரம்பரையினர் எண்பதுகளிலும் எழுதக் கூடியவர்களாக தொடர்ந்து மலையக இலக்கியத்தில் சுவடுப் பதித்தனர். எண்பதுகளில் ஆரம்பத்தில் சு. முரளிதரனின் வரவு புதிய பதிவுகளை எமக்கு ஏற்படுத்துகின்றது.

சங்கங்களுக்காகச் செத்தது போதும் - இனி
எங்களுக்காய் சாவோமென எழுதப்பட்ட
முதல் அத்தியாயம் சிவனு லெட்சுமணன்!
நாம் வதியும்
ஏழாயிரம் ஏக்கரா
பாதையாக வேண்டுமென பதறினான்

மலையக மக்களின் மனவெளிகள் தோறும்
நிறைந்தது - அந்த
டெவன் நீர் வீழ்ச்சியில்
வீரச்சாவின் வெடியோசை
இன்றும் எதிரொலிக்க
இறந்து போன லெட்சுமணன்
எழுபத்தேழின் விடிவெள்ளி.31

என்ற வரிகள் தனிக் கவனமத்துக்குரியன.

இக்காலக்கட்டத்தில் சி.வி, என்.எஸ்.எம் இராமையா முதலியோர் தொடங்கி வைத்த இலக்கிய பாரம்பரியத்தின் இன்னோரு பரிமாணத்தை நாம் இக்காலத்தில் தோற்றம் பெற்ற “தீர்த்தக்கரை” சஞ்சிகையில் காணக்கூடியதாக இருக்கின்றது. எண்பதுகளில் இடம்பெற்ற காட்டுமிராண்டிதனமான வன்முறைகளை ஆனந்தராகவனின் கதைகளிலும், வன்முறையின் பின்னர் துளிர்க்க கூடிய வசந்தகால நம்பிக்கைகளை கேகாலை கைலைநாதனின் கதைகளிலும் காணக்கூடியதாக உள்ளது. மலையக சிறாரின் குறிப்பிட்ட நிலையினைத் தொட்டுக் காட்டுவதில் ஏ.எஸ்.சந்திரபோஸ் கதை முக்கியத்துவமிக்கதாக காணப்படுகின்றது. அவ்வாறே வடகிழக்கில் தோற்றம் பெற்ற தேசிய இயக்கத்தின் சுவாலைகளை மக்கள் கோட்பாட்டின் நிலைநின்று எழுதுவதாக பிரான்சிஸ் சேவியரின் சிறுகதைகள் காணப்படுகின்றது. மலையக வாழ்வியல் பின்னணியிலிருந்து இலக்கியம் படைக்க முற்பட்டமை இதற்கான அடிப்படையாக அமைந்திருக்கும் எனக்கூறலாம். எண்பதுகளில் மலையக மக்களிடையே தோற்றம் பெற்ற புத்திஜீவிகள் அம்மக்களை விட்டுச்செல்கின்ற குணாதிசயம் கொண்டவர்களாக (ஒப்பீட்டளவில் எண்ணிக்கையில் அதிகமானோர்) காணப்பட்டமையை நூரளை சண்முகநாதனின் ~~பெரியசாமி பீ.ஏ. ஆகிவிட்டான்| என்ற கதை சித்தரிக்கின்றது.

தொடர்ந்து தொண்ணூற்றுகளில் மலையக இலக்கியம் புதிய செல்நெறியுடன் முன்னெடுத்துச் செல்லப்படுவதைக் காணலாம். அறுபதுகளில் காணப்பட்ட இலக்கியப் போக்கின் இன்னொருகட்ட வளர்ச்சியை இக்காலப்பகுதியில் காணக்கூடியதாக உள்ளது.

இக்காலத்தில் மலையக இலக்கியத்தில் இருவிதமான போக்குகளை இனங்காணக்கூடியதாக உள்ளது. ஒன்று முற்போக்கு உணர்வுடன் சமூதாய கண்ணோட்டத்துடனும் இலக்கியம் படைத்த சிலர் இக்காலக்கட்டத்தில் சிதைவடைந்து அல்லது அதற்கு எதிரான நிலைபாடு கொண்டவராக மாற்றமடைவதை காணலாம.; இதற்கு தக்க எடுத்துக் காட்டுகளாக தி.ஞானசேகரன் ~~குருமதிமலை|| நாவலில் வெளிப்பட்ட சமூதாய உணர்வு ~லயத்துசிறைகள்| என்ற நாவலில் சிதைவடைந்து செய்வதையும் அவ்வாறே சு. முரளிதரனின் சமுதாயப்பார்வை ~தேசத்தின் கரங்கள் சொல்லும் செய்தி| என்ற கவிதையில் சிதைவடைவதையும், தீர்த்தக்ரையில் ஆசிரியர் திரு.எல்.சாந்திகுமார் சிந்தனை ரீதியாக சிதைவடைந்தது மட்டுமன்றி எழுத்துலகிலிருந்தே ஒரு அஞ்ஞாதவாசம் சென்று விட்ட துயரினையும் உதாரணமாகக் கூறலாம். இவை தவிர சமூதாய நோக்கம் கொண்ட கவிதைகளையே எழுதி குவித்தால் மானூட காதலையும், அன்பையும் யார் பாடுவார் என்ற பிரகடனத்துடன் வெளிப்பட்;ட செல்வி யோகேஸ்வரி துரைபாண்டியின் கவிதைகளும், இப்பண்பிலேயே கால்பதித்து சற்று பாலியல் விசாரத்திலே வேறுபட்டு நிற்கும் பெ. லோகேஸ்வரனின் கவிதைகளிலும் அதீத நம்பிக்கை வரட்சி, அந்நியமப்பாடு, மனோவிகாரம், போலி மேதாவித்தனம், வரலாற்று உணர்வின்மை என்பன இவர்களது கவிதைகளில் மலித்துக் காணப்படுகின்ற பண்புகளாகும்.

இதற்கு மறுபுறமாக சமூதாய சிந்தனையுடனும், வரலாற்றுணர்வுடனும் இலக்கியம் படைக்கக்கூடிய நம்பிக்கை நட்சத்திரங்களும் மலையக இலக்கியத்தில் தென்படத் தொடங்கினர். இப்பண்பு கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டது போன்று இரு தளங்களில் இடம்பெற்று வருகின்றது எனலாம் (முற்போக்கு சிந்தனை, மார்க்கிய சிந்தனை) முதலாவது போக்கிற்கு எடுத்துக்காட்டாக மல்லிகை சி. குமார், மாத்தளை வடிவேலன்,; மாரிமுத்து சிவகுமார் முதலானோரைக் குறிப்பிடலாம். மார்ஸிய சிந்தனை நிலை நின்று இலக்கியம் படைப்பவர்களாக கேகாலை கையிலைநாதன், எம்.முத்துவேல், லெனின் மதிவானம், சற்குருநாதன், ராகலை பன்னீர், இரா.ஜே.ட்ரொஸ்கி, வே. தினகரன், காவத்தையூர் மகேந்திரன் முதலானோரைக் குறிப்பிடலாம். இவர்களிடையே, நுண்ணிய தத்துவார்த்த வேறுபாடுகள் காணப்படினும் பொதுவுடமை கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டு இலக்கியம் படைப்பதில் ஒற்றுமை உடையவர்களாக காணப்படுகின்றனர். மலையக மக்களிடையே காணப்படுகின்ற புராண இதிகாச கதைகளை கொண்டு அதன்வழி சமகால பிரச்சினைகளை கவிதையினூடாக எடுத்து கூறுவதில் மல்லிகை சி.குமார் தனித்துவமிக்கவராக விளக்குகின்றார்.

இவ்விடத்தில் ஒரு முக்கிய செய்தி கூறவேண்டியுள்ளது. தொண்ணூறுகளுக்கு முற்பட்ட கால மலையக இலக்கியம் ஒரு விமர்சன செல்நெறிக்கு அப்பாற்பட்டதாகவே இருந்து வளர்ச்சி பெற்ற வந்துள்ளது.

இக்காலப்பகுதியில் மலையக இலக்கியத்தில் ஆய்வுதுறை வளர்ச்சி பெறத் தொடங்கின. சாரல் நாடன், அந்தனிஜீவா (தரமானபத்தி எழுத்தாளர் என்பது பொருந்தும்) தெளிவத்தை ஜோசப் முதலானோர் மலையக இலக்கியம் பற்றி ஆய்வுகளை முன்வைத்துள்ளனர். மலையக சமூகம் குறித்து தீட்சண்ணியம் மிக்கதும் யதார்த்பூர்வமான தத்துவார்த்த பார்வையினை கொண்டிராமைக் காரணமாக இச்சமூக அமைப்பில் நிலவிய உற்பத்தி முறைகள், உற்பத்தி உறவுகள் பற்றியும் சமூக அரசியல், கலாசாரம் குறித்தும் விஞ்ஞான பூர்வமான தெளிவற்றறோராய், காணப்பட்டமை இவ்வணியினரின் பலவீனமான அம்சமாகும்.

மார்ஸிய நிலைநின்று மலையக இலக்கியத்தை ஆய்வு செய்தவர்கள் அச்சித்தாந்தத்தை மாறிவருகின்ற சமூக சூழ்நிலைக்கேற்டப பிரயோகித்து ஆய்வுகளை வெளிக் கொணர்ந்தவர்களாக பி.மரியதாஸ், எம்.முத்துவேல், வ. செல்வராஜா, லெனின் மதிவாணம், ஜெ. சற்குருநாதன், ஆர்.ஜே. ட்ரொஸ்கி போன்றோர் குறிப்பித்தக்கவர்கள்.

கட்சி இலக்கியம்

மலையகத்தில் கட்சி அமைப்புகள் தோன்றி பலமாக செயற்பட்டன என்ற போதிலும் கட்சி இலக்கியம் தோன்றாதிருப்பது துரதிஷ்டமானதொன்றாகும். 1970களில் செங்கொடி சங்க கூட்டங்களில் கட்சி சார்ந்த பாடல்கள் சில இயற்றப்பட்டு திரையிசை பாடல்களின் மெட்டுகளில் பாடப்பட்டன அவை போராட்;டத் தீ - 1, போராட்ட தீ - 2 என இரு சிறிய நூல்களாக வெளிவந்தன. அப்பாடல்கள் உள்ளடக்க நிதியாகவோ உருவக ரீதியாகவோ மலையக சமதாயத்தின் யதார்த்தை பிரதிப்பலிப்பதாக அடைந்திருக்கவில்லை. அந்தவகையில் மலையகத்தில் கட்சி இலக்கியம் என்பது இனித்தான் தோன்ற வேண்டியுள்ளது.

அறுபதுகளில் இடம்பெற்ற இடதுசாரி இயக்கத்தினை இலக்கியமாக்கும் முயற்சிகள் இக்காலப் பகுதியில் இடம் பெறுகின்றது. கேகாலை கையிலை நாதனின் ~அறுபதுகளில் மலையக வாழ்வியலின் கீற்று| என்ற விவரணமும், எம். முத்துவேலின் ~அறுபதுகளிலான மலையக தமிழிலக்கிய ஸ்தாபிதப் பிரயத்தனங்கள்| என்ற கட்ரையும், இதற்கு எடுத்துக் காட்டாக அமைகின்றன. இவ்விடத்தில் பிறிதொரு விடயம் குறித்த தெளிவும் அவசியமானதொன்றாகின்றது.

இலங்கை அரசியல் வரலாற்றில் உழகை;கும் மக்கள் நலன் சார்ந்த புரட்சிகரமான அரசியலை முன்னெடுத்ததில் தோழர் சண்முகதாசனுக்கு மக்கிய இடமுண்டு. அவர் வலதுசாரி சந்தர்ப்பவாதத்திற்கும், நவீன திரிபு வாதத்திற்கு எதிராகவும் தீவிரமாக போராடி அதில் வெற்றியும் கண்டார். ரசியா, சீன அரசியலிருந்து தான் பெற்றிருந்த அறிவை மாறிவருகின்ற இலங்கைச் சூழலுக்கேற்றவகையில் பொருத்தி பார்க்கத் தவறி விட்டமை அவரது முக்கிய பலவீனங்களில் ஒன்றாகும். அதிகமாக தத்துவத்தில் புதையுண்டு போன தன்மையே அவரிடம் அதிகமாக காணப்பட்டது. இதன் பின்னணியில் கட்சியில் கூட்டு முடிவுக்கு பதிலாக தனிநபர் தீர்மாணங்கே மேற்கொள்ளப்பட்டன. வுpமர்சனம், சுயவிமர்சனம் என்ற விடயம் முற்றாகவே புறக்கணிக்கப்பட்டன. தமது கருத்துகளுக்கு எதிரான கருத்துக்களை கூறிய யாவரையும் எதியாக பார்த்ததுடன் அவர்களை கட்சியிலிருந்து விலக்குவதற்கான முயறசி;கள் மேற்கொள்ளப்படலாயின. இந்தப் பின்னணியில் கட்சி பல பிவுகளாக பிரி;ந்தன. இவ்வாறு பிரிந்து நேர்மையுடன் செயற்பட்டவர்கள் இன்று சிதைந்து சின்னாப் பின்னமாகி சண்முகதாசன் விட்ட அதே தவறினை செய்து வருகின்றனர். எனவே புதியதோர் சூழலில் மக்கள் நலன் சார்ந்த அமைப்பொன்றினைக் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. இதற்கான பணியினையும் இலக்கியத்தின் மூலமாக செய்ய வேண்டியுள்ளது.

இவை தவிர மலையக இலக்கியம் குறித்து முற்போக்குடன் கூடிய ஆய்வுகளை வெளிக்கொணர்வதில் பேராசிரியர்கள் க. அருணாசலம், அம்பலவாணர் சிவராசா, தில்லைநாதன், கலாநிதி துனைமனோகரன் முதலானோரின் முயற்சிகளும் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கன.

இவ்விடத்தில் பிறிதொரு விடயம் குறித்தும் நோகக் வேண்டியுள்ளது. தலைகுனிய வேண்டிய தனிமனித சண்டைகளாலும் எழுத்தாளனைத் தனிமைப்படுத்தி தாக்கும் குழமனப்பாங்காலும் வழவிழந்துக் கிடக்கும் மலையக இலக்கியம் அதனை இம்மண்ணுக்கே உரித்தான மக்கள் தத்துவத்தால் கட்டமைக்கின்ற போது எமது தேசத்திற்க மாத்திரமன்று உலகிற்கே நன்மையளிக்க கூடியதாக மிளிரக் கூடிய வாய்ப்பு உண்டு. அரசியலில் எவவாறு ஒரு புரட்சிகர கை;கிய முன்னணி அவசியமோ அவ்வாறே கலை இலக்கியத்திலும் அத்தைய புரட்சிகர கை;கிய முன்னணியின் அவசியம் உள்ளது. சினேக முரண்பாடுகளை பகை முரண்பாடுகளாக காட்ட முனையும் தனிமனித முரண்பாடுகளை தெளிவாக உணர்ந்து கொள்ளல் அவசியமாகும். உலகமயமாதல் சூழல் எவ்வாறு பொது மக்களை பாதித்திருக்கின்றதோ அவ்வாறே தேசிய ஜணநாயக முற்போக்கு சக்கிகளையும் பாதித்திருக்கின்றது என்பதை அண்மைகால கலை இலக்கிய செயற்பாடுகள் எமக்கு எடுத்துக் காட்டப்படுகின்றன. சமூதாயம் சார்ந்த கோட்பாடுகளை ஆழமாக கற்பதன் மூலமாவும் அது தொடர்பான நடைமுறையில் ஈடுப்படுவதனாலும் இப்பிரச்சனைக்கான தீர்வுக் காண முடியும் என்பதை நாம் புரிந்துக் கொள்ள முடியும்.

ஈழத்து தமிழ் இலக்கிய செல்நெறியில் மலையக இலக்கியம் அதன் பிரிக்க முடியாத பிரதேச இலக்கியமாக அமைந்துள்ளதுடன், தனித்துவப் பண்புகள் கொண்டதாகவும் காணப்படுகின்றது. அதே சமயம் ஈழத்து தமிழ் இலக்கியப் பரப்பினை செலுமைப்படுத்துவதில் முக்கியத்துவமிக்கதாகவும் காணப்படுகின்றது ~~மலையகத்து ஆக்க இலக்கிய பாராம்பரியம் ஈழத்து இலக்கியவாதத்தினை ஆழ அகலப்படுத்தியுள்ளது|| என்ற பேராசிரியர் கா. சிவத்தம்பியின் கூற்று இதனையே நிரூபணம் செய்கின்றது எனக்கூறின் அது தவறாகாது.

அடிக்குறிப்புக்கள்:

1.சிவத்தம்பி. கா, ஈழத்தில் தமிழ் இலக்கியம், நியு} செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவெட் லிமிடெட் சென்ளை. 1978 பக்.03

2.மே.கு.நூ.ப - பக் 30. 04

3.முத்துவேல் எம் ( கட்டுரையாசிரியர்) அறுபதுகளிலான மலையக தமிழ் இலக்கிய ஸ்தாபிதப் பிரயத்தனங்கள், புதுவசந்தம் (வெள்ளி விழா சிறப்பிதழ்) தேசிய கலை இலக்கியம் பேரவை வவுனியா 1999, ப.27

4.சாந்திகுமார் எல். ( கட்டுரையாசிரியர்), தீர்த்தக்கரை, ஹட்டன் ஜனவரி மார்ச் 1981 ப.27

5.தம்பையா இ. மலையக மக்கள் என்போர் யார்? புதிய பூமி வெளியீட்டகம், கொழும்பு 1995. பக்.59,60

6.சிவத்தம்பி கா மலையக இலக்கியம் மறக்கப்படகூடாத மறுபக்கம், மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா, சிறப்பு மலர் 1995 ப. 01

7.சுபத்திரன், சுபத்திரன் கவிதைகள் ~பூவரசுகள் மட்டகளப்பு 1997 ப. 143

8.சிவத்தம்பி கா எழுத்தாளனும் சித்தாந்த நிலைப்பாடும், புதுமை இலக்கியம், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கொழும்பு ஜன மார்ச் 1995.

9.லெனின் வீ.இ சோசலிச சித்தாந்தமும் கலாச்சாரமும் குறித்து, முன்னேற்றப் பதிப்பகம் மாஸ்கோ 1974, ப.8

9.a சிவசேகரம். சி, (2000), எசமானர்களும் எதிப்பு இலக்கியமும், தேசிய கலை இலக்கிய பேரவை, கொழும்பு.

10.முத்துவேல் எம் மலையக தமிழிலக்கியம் பற்றிய எண்ணக்கருக்கள், கல்விமாணிப்பட்டக் கற்கைநெறிக்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்ஐர 1994 1997 தேசிய கல்வி நிறுவகம் மஹரகம, ப. 16

11.அருணாசலம் க. (.மேற்கொள்), 1994, சுப்ரமணிய பாரதியார் , மலையக தமிழ் இலக்கியம், தமிழ் மன்றம், இராஜகிரிய, ப. 91

12..மே. கு நூ. ப. 92

இக்கருத்தினை கலாநிதி க. அருணாசலம் மலையக தமிழிலக்கியம் என்ற அவரது நூலில் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

13.வேலுப்பிள்ளை சி.வி புதுமை இலக்கியத், மக்கள் மறுவாழ்வு சென்னை 1987 ப.23

14.கேசவன் கோ. தலித் இலக்கியம் சில கட்டுரைகள், புதுமை பதிப்பகம், மதுரை 1998, பக்.30,31

15.கைலாசபதி க மலைநாட்டு மக்கள் பாடல்கள் முன்னுரை, கலைநகர் பதிப்பம், சென்னை 1983.

16.வேலுப்பிள்ளை சி.வி. மே.கு.நூ.பக் 16

17.மே. கு நூ. ப. 17

18.மே. கு நூ. ப. 95

19.மே. கு நூ. ப. 96

20.சிவத்தம்பி கா.மே.நூ.ப. 30

21.அந்தனிஜீவா, மலையகமும் இலக்கியமும், மலையக வெளீட்டகம் கொழும்பு (மேற்கோள்) 1995.ப.13

22.மே.கு.நூ.ப. 14

23. சாரல்நாடன் (மேற்கோள்) மலையகம் வளர்த்த தமிழ், துரைவி பதிப்பகம், கொழும்பு, 1997 ப.125.

24.Velupillai C.V In Ceylon Tea Garden, Harrision Peiris.p.125.

25. சிவப்பிரகாசம் எஸ்..நந்தலாலா சஞ்சிகை ப.29

26.வேலுப்பிள்ளை சி.வி கலாநிதி கைலாசபதி காலத்திற்கு சொந்தமானவர் குன்றின் குரல் தோட்ட பிரதேசங்களுக்கான கூட்டு செயலகம், கண்டி டிசம்பர் 1992 ப.22

27.கைலாசபதி க. மேற்கொள் லெனின் மதிவானம் மலையகம் என்ற பின் புலத்தின் கைலாசபதி என்ற மனிதர்|| மல்லிகை 35வது மலர் ஆண்டு கொழும்பு ஜனவரி 2000 ப.85

28.முத்துவேல் எம் மேற்குறிப்பிடப்பட்டள்ள கட்ரை, புதுவசந்தம் வெள்ளி விழா மலர் ப.31

30.தில்லைநாதன் சி. மலையகமும் தமிழிலக்கியமும், தமிழருவி 1978.

31.முரளிதரன் சு. குன்றின் குரல், ஜனவரி 92 முகப்பு அட்டடையில் வெளிவந்த கவிதை.

32.சிவத்தம்பி கா. முன்னுரை, எல்லை தாண்டாத அகதிகள், தமிழ்குரல் பதிப்பகம் சென்னை 1994